ஆன்மீக அரசு

கடந்த 30 வருடங்களாக மேற்கொண்ட ஆராய்ச்சியின் முடிவுகளை மக்களின் நலனுக்காக இதுவரை இந்த வலை தளத்தில்வெளியிட்டு வந்துள்ளோம், இனிமேல் உங்களின் ஆன்மீக சம்பந்தமான அனைத்து எனது நேரடி பார்வையில் பதில் வரும்,. இதற்கான உங்கள் கேள்வி அனைத்தும் மின்அஞ்சல் மூலமாகவே வரவேண்டும் மற்றும் அனைத்து விதமான கேள்விகளுக்கும் aanmigakkadal@gmail.com,aanmigaarasoo@gmail.com. தொடர்புகொள்ள வேண்டும். இதில் மின்அஞ்சல் தவிர வேறு எந்தவிதமான கைபேசி எண் மற்றும் மின்அஞ்சல் முகவரியும் இல்லை என்று தெரிவித்துக்கொள்கிறேன்-சகஸ்ரவடுகர்

சகஸ்ரவடுகர்

 • aanmeegaarasoo
 • arunachaleswarar
 • girivalam
 • astalingam
 • annathanam
 • aanmeegaarasoo
 • arunachaleswarar
 • girivalam
 • astalingam
 • annathanam

ஓம் ஸ்ரீ மகா கணபதியே நமஹ ! 

 

 

 

 தென்னாடுடைய சிவனே போற்றி !!

 

 

 

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !!

 

 

 

அண்ணாமலையுடனமர் உண்ணாமுலையம்மையே போற்றி !!!

 

 

 

 

 

 

 

 

 

 

 

அதென்ன சொர்ணாகர்ஷண கிரிவலம்?

 

 

 

நாம் விரும்பினாலும்,விரும்பாவிட்டாலும் நமது தினசரி வாழ்க்கைக்கு பணம்  அத்தியாவசியத் தேவையாக இருக்கிறது, ஒரு நாளுக்கு 12 மணி நேரம் நாம் உழைத்தாலும்,நமது தேவைகளுக்கு ஏற்ப வருமானம் கிடைக்காமல் தவிப்பவர்களே நம்மில் அதிகம்;

 

 

 

இது போன்ற தெய்வீக ரகசியங்களை ஆன்மீகவாதிகள் அனைவருமே அல்லது பெரும்பாலானவர்கள் வலைப்பூ/இணையதளம் மூலமாக வெளியிடுகிறார்களா?

 

 

 

அப்படியே வெளியிட்டாலும்,உரிய தெய்வீக நிகழ்ச்சிகளை தாமே தலைமை தாங்கி நடத்துகிறார்களா?

 

 

 

இந்தப் பதிவினை வாசிக்கும்  நாம் ஒவ்வொருவரும் அவசியம் கலந்து கொள்ள வேண்டும்;இதனால்,நமக்கு நியாயமான முறையில் வர வேண்டிய சம்பள உயர்வு,பதவி உயர்வு,வராக் கடன்கள்,கிடைக்க வேண்டிய பூர்வீகச் சொத்து,நமது திறமைக்குரிய சம்பளம் தரும் வேலை அல்லது தொழிலில் நாம் எட்ட வேண்டிய  இலக்குகள்,நமது உழைப்புக்குரிய அங்கீகாரம் சித்தர்களின் ஆசியாலும்,அண்ணாமலையாரின் ஆசிர்வாதத்தாலும் நம்மை வந்து சேரும்.

 

பதினொன்றாமாண்டு 

 

 

 நம் குரு ., பதினொன்றாமாண்டு  கிரிவல நிகழ்ச்சியை  நிறைய இடர்களை கடந்து நம்மையும்., தன்னோடு இணைத்துக்கொண்டு     ஏராளமான ஆன்மீகக்கடல்  வாசக,வாசகிகளையும் ஒருசேர வழிநடத்த உள்ளார்கள். ஒவ்வொரு வருடமும், புதியவர்கள் மற்றும் பழையவர்கள் என நம் அன்பர்கள் நம் குரு இடைவிடாது பின் தொடர்ந்து வந்துள்ளார்கள். இப்படிக் கலந்து கொள்வதன்  மூலமாக,ஏராளமான வாசக,வாசகிகள் தமது நெருக்கடியான வாழ்க்கைச் சூழல்களிலிருந்து முழுமையாக விடுபட்டுள்ளனர்;விடுபட்டு வருகின்றனர்;

 

 

 

இன்று நிம்மதியாகவும்,பொருளாதாரத் தன்னிறைவோடும்,எந்த விதக் குறையின்றியும் வாழ்ந்து வருகிறார்கள்;

 

 

 

கிரிவலம்';

 

 

 

 

 

 

 

 

 

கிரிவலம் 05.12.18  புதன்கிழமை  அன்று  சரியாக அதிகாலை 7 மணியளவில் இரட்டை பிள்ளையார் கோவிலில் நமது குருநாதர் சகஸ்ரவடுகர் அவர்கள் முன்னிலையில் துவங்கும். நாம் அனைவரும் சரியாக 6.00 am  அளவில் ஒன்று திரள்வோம்.

 

 

 

? எதற்காக இந்த சொர்ணாகர்ஷண கிரிவல நாளில் பிங்க் அல்லது மஞ்சள் நிற ஆடை அணிந்து கிரிவலம் செல்ல வேண்டும்?

 

 

 

அண்ணாமலை கிரிவலம் செல்வதற்கே நமது முன்னோர்களின் ஆசியும்,நமது குல தெய்வத்தின் அருளும் தேவை;

 

 

 

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிற ஆடையை அணிந்து கிரிவலம் செல்ல வேண்டும் என்ற தெய்வீக விதி இருக்கிறது.

 

 

 

இந்த மகத்தான நாளில்(05.12.18 புதன்கிழமை., நாம் பிங்க் அல்லது மஞ்சள் நிற ஆடை அணிந்து நமது குருநாதர் சகஸ்ரவடுகர் அவர்களின் தலைமையில் கிரிவலம் செல்வதால்,நமது கடுமையான கர்மவினைகள் கரைந்து காணாமல் போய்விடும்;இந்த கர்மவினைகளாலும்,சக ஊழியர்கள்/உடன்பழகுபவர்களின் பொறாமையாலும் பல வருடங்களாக நமது வருமான அளவு அதிகரிக்காமல் இருக்கும்;இந்த தடை நீங்கிவிடும்;பணரீதியான தன்னிறைவை எட்டியவர்கள்,இந்த கிரிவலத்தில் கலந்து கொண்டால்,அவர்கள் தமது ஆன்மீக முன்னேற்றத்தை அடுத்த கட்டத்திற்கு எட்டுவார்கள்;கடந்த ஒன்பது  ஆண்டுகளில் இந்த உண்மையை பல ஆன்மீக வாசக,வாசகிகள் உணர்ந்திருக்கிறார்கள்

 

 

 

 

 

 

? ஏன் முதல் நாளே(04.12.18 செவாய்க்கிழமை ) அண்ணாமலைக்கு வர வேண்டும்?

 

 

 

தமிழ்நாட்டின் வட மாவட்டங்களில் இருப்பவர்கள் சில மணி நேரங்களில் அண்ணாமலையை வந்தடைய முடியும்;அதே சமயம்,தமிழ்நாட்டின் பிற மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் சரியான நேரத்தில் இந்த சொர்ணாகர்ஷண கிரிவலத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று விரும்பினால்,முதல் நாளே வந்து அண்ணாமலையில் தங்கிக் கொள்வது உத்தமம்.உதாரணமாக,திருநெல்வேலி,தேனி,இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் அண்ணாமலைக்கு வந்தடைய குறைந்தது 16 மணி நேரம் பயணிக்க வேண்டியிருக்கிறது.

 

 

 

? அண்ணாமலையில் எங்கே தங்குவது? எனது குடும்பத்தில் இருந்து யாரெல்லாம் இந்த சொர்ணாகர்ஷண கிரிவலத்தில் கலந்து கொள்ளலாம்?

 

 

 

திரு அண்ணாமலையாரின் கோவில் பல கோடி வருடங்களாக இருந்து வருகிறது.அண்ணாமலையாரின் பெயரிலேயே இந்த ஊரும் இருக்கிறது.தவிர,மாவட்டத் தலைநகரமாகவும் இருக்கிறது.ஒவ்வொரு பவுர்ணமியன்றும் சுமாராக ஒரு லட்சம் பக்தர்கள் பவுர்ணமி கிரிவலத்துக்கு வருவதை வழக்கமாக வைத்துள்ளனர்;இதனால்,இந்த ஊர் முழுவதும் மகான்களின் ஆசிரமங்கள்,மடங்கள்,திருமண மண்டபங்கள் என்று அமைக்கப்பட்டிருக்கின்றன;தவிர,தங்கும் விடுதிகளும் கோவிலைச் சுற்றிலும் ஏராளமாக இருக்கின்றன.நாள் வாடகை ரூ.100/-முதல் ரூ.5000/-வரைக்கு லாட்ஜ்களும்,நட்சத்திர விடுதிகளும் இருக்கின்றன; தாய்மார்கள் நான்காம் நாளாக இருந்தாலே கலந்து கொள்ளலாம்.

 

 

 

நமது குடும்பத்தில் யாரெல்லாம்  பக்தி உணர்வுடன் இருக்கிறார்களோ அவர்கள் அனைவரையும் அழைத்து வரலாம்;நமது இன்றைய பொருளாதாரச் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டும் இந்த விஷயத்தில் முடிவு எடுக்கலாம்.

 

 

 

? இட்லிதானம் செய்வது எப்படி?

 

 

 

 

 

 

 

 

 

 

இந்த   வருடத்தில், திரயோதசி  திதி மற்றும் சதுர்த்தி  வரும் நாளில் சொர்ணாகர்ஷண கிரிவலநாள் அமைந்திருக்கிறது.இந்த நாளில் நாம் ஒவ்வொருவருமே காலையில் ஒருவர்,மதியம் ஒருவர்,இரவு ஒருவர் என்று அண்ணாமலையில் அன்னதானம் செய்வது நமது அனைத்து கஷ்டங்களையும் நீக்கிவிடும்;கிரிவலப் பயண நேரம் குறைந்த பட்சம் 4 மணி நேரம் ஆகும்;அதிக பட்சம் 6 முதல் 8 மணி நேரம் வரை ஆகும்

 

 

 

காலையிலும்,மதிய நேரத்திலும் கிரிவலப் பாதையில் நம்மால் எத்தனை சாதுக்களுக்கு இட்லி தானம் செய்ய முடியுமோ அத்தனை சாதுக்களுக்கு தானம் செய்வோம்;கூடவே,நல்லெண்ணெய் கலந்த எள்ளுப்பொடியை ஒவ்வொரு இட்லிதானத்துடனும் சேர்த்தே கொடுப்போம்;

 

 

 

கிரிவலப்பாதையிலும் சில உணவகங்கள் இருக்கின்றன;எனவே,மதிய நேரத்திற்கு கிரிவலப் பாதையில் மதிய நேர அன்னதானத்திற்கு உணவு வாங்கிக் கொள்ளலாம்;அல்லது குபேர லிங்கம் வந்ததும்,நம்மில் ஒரு சிலர் ஆட்டோவில் நகருக்குள் பயணித்து உணவுப் பொட்டலங்களை மொத்தமாக வாங்கிக் கொண்டு வந்தும் தானம் செய்யலாம்.

 

 

 

?எள்ளுப்பொடியைத் தயார் செய்வது எப்படி?

 

 

 

 

 

 

 

 

 

இன்றைய கால கட்டத்தில் மளிகைக்கடைகளில் ரெடிமேடாக எள்ளுப்பொடி கிடைக்கிறது;ஒருவர் ஐந்து இட்லிகள் சாப்பிடும் அளவுக்கு எள்ளுப்பொடியை ஒரு சிறு பையில் நிரப்பி அத்துடன் சுத்தமான நல்லெண்ணெயை கலந்து சிறு கயிற்றால் கட்டிக் கொண்டு வருவோம்;நாம் எத்தனை பேர்களுக்கு இட்லிதானம் செய்ய விரும்புகிறோமோ,அத்தனை பாலிதீன் பைகளில் எள்ளுப்பொடி+நல்லெண்ணெய் நிரப்பிக் கொண்டு வருவது அவசியம்.(நமது ஊர்களில் மதிய உணவுவாங்குவோம் அல்லவா? அதில் மோர் பாக்கெட் எப்படி கட்டப்பட்டிருக்கும்;அதே போல கட்டிக் கொண்டு வரவும்)

 

 

 

பாரம்பரியம் மாறாத ஏராளமான குடும்பங்கள் இன்றும் தமிழ்நாட்டின் ஒவ்வொரு ஊர்களிலும் வாழ்ந்து வருகின்றன;அந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வீட்டிலேயே தயார் செய்து கொண்டு வரலாம்;

 

 

 

தனித்து வாழ்ந்து வருபவர்கள்,வெளியூரில் வேலை பார்ப்பவர்கள் முதலில் சொன்ன யோசனையை நடைமுறைப்படுத்துவது போதுமானது;

 

 

 

(இட்லிப்பொடி என்பது உளுந்துப்பொடி என்பதை நினைவிற் கொள்க)

 

 

 

ஏன் இட்லியுடன் எள்+நல்லெண்ணெய் கலந்த கலவையை தானம் செய்ய வேண்டும்?

 

 

 

அது தெய்வீக ரகசியம்! நமது கர்மவினைகள் தீரும் ரகசியம் இதனுள் தான் புதைந்திருக்கிறது.நீங்கள் எங்கெல்லாமோ அன்னதானம் செய்திருப்பீர்கள்;அரிசி தானம்,கோதுமை தானம்,பழ தானம்,ஆடை தானம்,ருத்ராட்ச தானம்,விஷய தானம் செய்திருப்பீர்கள்.அதைவிடவும் மிகவும் சக்தி வாய்ந்தது இந்த கலவையுடன் இட்லி தானம் செய்வது!

 

 

 

இட்லி தானம் செய்வதற்கு எங்கே வாங்குவது?

 

 

 

 

 

 

 

 

 

 

 

04.12.18 செவ்வாய்க்கிழமையன்று மாலை நேரத்திற்குள் அண்ணமலைக்கு வந்துவிட்டாலே சரியான உணவகத்தை நம்மால் அடையாளம் கண்டு கொள்ள முடியும்.அங்கேயே கூட நாளைக் காலை எனக்கு ஐந்து இட்லிகள் கொண்ட பார்சல்கள் இத்தனை தேவை என்று கூட முன்பதிவு செய்து கொள்ளலாம்;

 

 

 

அண்ணாமலையில் ஒரு உணவகத்தில் ஒவ்வொரு வேளையும் சமையல் செய்து முடித்ததும்,அந்த உணவுகளின் முன்பாக சைவ முறைப்படி தேவாரம் முதலான பதிகங்கள் பாடியப்  பின்னரே பரிமாறுகிறார்கள்.இதனால்,அந்த உணவகத்தில் ஒவ்வொரு உணவுப் பொருளும்(இட்லி,தோசை,பொங்கல்,புளியோதரை,மதியம் முழு உணவு) மிகுந்த சுவையுடன் இருக்கிறது.

 

 

 

திரயோதசி திதியும்,விசாகம்  நட்சத்திரமும்,சொர்ணாகர்ஷண கிரிவலமும் சேர்ந்து ஒன்றாக வருவதால் நாம் செய்யும் இட்லி தானத்திற்கான பலன்கள் அடுத்த சில நாட்களிலேயே நம்மை வந்து சேரும்;சிலருக்கு மட்டும் சில வாரங்களில் வந்து சேரும்.

 

 

 

? நவதானியங்களையும்,டயமண்டு கற்கண்டையும் ஏன் வாங்க வேண்டும்?

 

 

 

 

 

 

 

 

 

 

 

நவக்கிரகங்களின் கதிர்வீச்சுக்களை ஈர்க்கும் ஆற்றல் நவதானியங்களுக்கு இருக்கின்றன;நமது கைகளால் நவதானியங்களை ஆதிசிவனின் பாதத்தில்  (அண்ணாமலை கிரிவலப் பாதையில்) தூவ வேண்டும்;நமது கைகள் பட்டு தூவுவதால்,அவைகள் நமது ஜாதகப்படி இருக்கும் கிரக தோஷங்களுடன் கிரிவலப்பாதையின் ஓரங்களில் மழை பொழிந்ததும் முளைக்கத் துவங்கும்;அவ்வாறு முளைக்கத் துவங்கியதுமே,நம்மைப் பிடித்திருந்த கிரகதோஷங்களை நாம்  தூவியிருந்த நவதானியங்கள் வாங்கிக்  கொள்ளும்; நாம் தினசரி வாழ்க்கையில் சிக்கல்கள் இன்றியும்,பிரச்னைகள் இல்லாமலும் நிம்மதியாக வாழத் துவங்குவோம்;

 

 

 

 இயற்கைஇனிப்பு, கற்கண்டு ஆகும்.அதை இன்றைய நவீன காலகட்டத்தில் மோல்டிங் மெஷின்கள் மூலமாகத் தயாரிக்கிறார்கள்;அதனால்,தற்போது கற்கண்டு வைரக்கல் வடிவிற்கு மாறிவிட்டது;இதையே டயமண்டு கற்கண்டு என்று அழைக்கிறோம்.

 

 

 

 

 

? நவதானியங்களையும்,டயமண்டு கற்கண்டையும் எங்கே வாங்குவது? எப்படித் தூவுவது?

 

 

 

 

 

 

 

 

 

 

 

04.12.18 செவ்வாய்க்கிழமை  இரவு 9 மணிக்குள் அண்ணாமலையை நாம் வந்தடைந்து விட்டால்,அண்ணாமலையிலேயே நவதானியங்களையும்,டயமண்டு கற்கண்டுகளையும் வாங்கிக் கொள்ளலாம்.

 

 

 

சில பல வேலைகளால்,நம்மால் 05.12.18 புதன் கிழமை காலையில் நேரடியாக சொர்ணாகர்ஷண கிரிவலத்தில் கலந்து கொள்பவர்கள் அவரவர் ஊரிலிருந்தே இவைகளை வாங்கிக் கொண்டு வரவும்.

 

 

 

அக்னிலிங்கம் கிரிவலப்பாதையில் அமைந்திருக்கும் இரண்டாவது லிங்கம் ஆகும்;இதைக் கடந்ததும்,நகர்ப்பகுதி நிறைவடைந்துவிடும்;மலையும் காடும் சூழ்ந்த பகுதி துவங்கும்;இங்கிருந்து எட்டாவது லிங்கமான(தற்போது ஒன்பதாவது! சில ஆண்டுகளுக்கு முன்பு குபேர லிங்கத்திற்கு சற்று முன்பாக ஒரு வயல்வெளியில் சந்திர லிங்கம் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது) ஈசான லிங்கம் வரையிலும் சாலையோரம் அமைந்திருக்கும் முட்புதர்களில் தூவ வேண்டும்;கொட்டக் கூடாது;இரு கைகளால் தூவிக் கொண்டு வருவது நன்று;சிறிது சிறிதாகத் தூவி வருவதே நன்று.

 

 

 

? கிரிவலத்தின் போது செருப்பு அணிந்து நடக்கலாமா?

 

 

 

செருப்பு அணியாமல் நடப்பதே நன்று.இதில் விதிவிலக்கும் உண்டு.மழைக்காலமாக இருப்பதால்,குடை,ரெயின்கோட்,(வயதானவர்கள்,நோய் உள்ளவர்கள்)உரிய மருந்துகளுடன் பயணிப்பது அவசியம்;

 

 

 

 

 

 

?கிரிவலத்தில் மட்டும் கலந்து கொள்ளலாமா?

 

 

 

 

 

 

 

 

 

கிரிவலம் மதியம் 2 மணிக்குள் நிறைவடைந்துவிடும்;பிறகு,மாலை  அண்ணாமலையாரையும், உண்ணாமுலை அம்மனையும் வழிபடலாம்,  அதில் கலந்து கொண்டு  ஓம் சிவ சிவ ஓம் என்ற மந்திரங்களை ஜபிப்பது நன்று;கூடவே,நாம் மட்டும் உபதேசம் பெற்ற சிவமந்திரங்களையும் அங்கே ஜபிப்பது அவசியம்.விசாகம்   நட்சத்திரமாக இருப்பதால்,நமது மந்திர ஜபத்தின் பலன்கள் விரைவாக ஆதிசிவனைச் சென்றடையும்;நாம் அமர்ந்திருப்பதே ஆதி சிவனின் பாதத்தில்(அண்ணாமலையாரின் கோவிலில்)! இதனால் விரைவான சிவனருளும்,சொர்ணாகர்ஷணமும் நமக்குக் கிட்டும்;

 

 

 

( கிழக்குக்  கோபுர வாசலில் இரவு நேர அன்னதானத்தை முடித்துவிட்டு இரவு 7 மணிக்குள் அவரவர் ஊர்களுக்குப் புறப்பட்டுவிடலாம்;இரவுநேர அன்னதானத்திற்கு சைவ உணவாக நம்மால் முடிந்ததை வாங்கிக் கொடுத்துவிட்டுப் புறப்படலாம்) பிறகு இரவு 9 மணி முதல் 10 மணிக்குள் பள்ளியறை பூஜையிலும் கலந்து கொள்வது அவசியம்.

 

 

 

இத்துடன் சொர்ணாகர்ஷண கிரிவல நிகழ்ச்சிகள் நிறைவடையும்.வியாழக்கிழமை  இரவு அல்லது வெள்ளி  அதிகாலையில் நேராக நாம் வாழ்ந்து வரும் வீட்டிற்குச் செல்ல வேண்டும்.வேறு எந்தக் கோவிலுக்கும்,யார் வீட்டிற்கும் செல்லக் கூடாது.(சிலருக்கு வியாழக்கிழமை இரவே பேருந்து/ரயில் கிட்டாமல் போகலாம்;அவர்கள் அன்று  இரவு அண்ணாமலையில் தங்கிவிட்டுப்போவது நன்று.இதன் மூலமாக பலன்கள் வீணாகாது)

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

ஓம் சிவ சிவ ஓம்

 

   

 

ஓம் சிவசிவ ஓம்

 

 

 

ஓம் சிவசிவ ஓம் 

 

 

 

 

 

 

 
 • aanmeegaarasoo
 • arunachaleswarar
 • girivalam
 • astalingam
 • annathanam

ஓம் சிவ சிவ ஓம் !!!  ஓம் சிவசக்தி ஓம் "

 

 

ஓம் அண்ணாமலையாரே போற்றி !!

ஓம் உண்ணாமலை தாயே போற்றி போற்றி
!!

 

 

 

ஆன்மீக அன்பர்களுக்கு வணக்கம் .  ஒரு சிறிய இடைவெளிதான் நமக்கு  அதனால் யாரும் கலக்கம் கொள்ள வேண்டாம் . நமது பயணமும் இனி சிறப்பாக நடைபெறுவதற்கான உத்வேமாக நாம் எடுத்துக்கொள்வோம். இதன் தொடக்கமாகவே நமது மகரிஷி ஈஸ்வரப்பட்டார் ஆசியோடு நாம் பயணப்படுவோம்.

 

 

 

    கழுகுமலையில்  ' மகாயோகி ஈஸ்வரபட்டரின் அய்யாவின் ' நினைவாக பனிரெண்டாம் ஆண்டு  "   கிரிவலம் மற்றும்  அன்னதானம்   நமது குருநாதர் அய்யா சகஸ்ரவடுகர் அவர்கள் " தலைமையில்நடைபெறுகிறது.

 

 

    கிரிவலம் சரியாக 11.8.2018 சனிக்கிழமை அன்று சரியாக காலை 8am அளவில் கழுகாசமூர்த்தியின் சன்னதியில் இருந்து ஆரம்பிக்கிறது.

 

 

    கிரிவலம் முடிந்த பின்  நமது அய்யா சகஸ்ரவடுகர் அவர்களின் வாழ்வை வளமாக்கும் ஆன்மீகச் சொற்பொழிவு  உள்ளது.

 

 

 


மகாரிஷி அய்யா ஈஸ்வரபட்டர் 

 

ஸ்ரீலஸ்ரீ ஈஸ்வரபட்டர் அவர்கள் கன்னட பிராமனர்  குலத்தில் பிறந்து, திருமணம் செய்து கொள்ளாமலேயே, பல சித்த ஞானிகளிடம் ஆசி பெற்று,  ஆன்மீகத்தில் பல்வேறு நிலைகளைக் கடந்து, இறுதியாக  தென்னிந்தியாவை வந்தடைந்தார். இங்கிருக்கும் எளியோர்களுக்கு, அவர்கள் துன்பங்களில் இருந்து விடுபட அருள்புரிந்தார். பின் பழனியம்பதிக்கும் வந்து மக்களின் குறைகளை தீர்த்து பல சித்துகள் புரிந்தார். ஐயா அவர்கள்  பழனி கிரிவலப்பாதையில் மலைக்கு அடியில்  ஜீவ ஒளி  வடிவமாகி  48 வருடங்கள் ஆகின்றது. இடும்பன் கோவில் அருகாமையில் ஜீவ அதிர்ஷடானம் அமைந்துள்ளது.

 

 

                       வாழ்க்கையின் பிரச்சினைகளின் பிடியில் உள்ளவர்கள் " ஓம் ஈஸ்வரபட்டாய நமஹ " என்று நம்பிக்கையோடு பிரார்த்தனை செய்தால் மகான் அவர்கள் " சூட்சுமமாக " நம்மை சீர்படுத்துவார்கள்.

 

கிரிவலம்

 

          கழுகாசமூர்த்தியின் சன்னதி

 

 

 

 

வருகிற ஆடி அமாவாசை (11.08.2018) சனிக்கிழமை  அன்று நடைபெற இருக்கிறது.

 

 

  நாம்  நமது வாழ்வில் சந்திக்கும் ஏற்ற இறக்கங்களை எந்த ஒரு அளவீட்டாலுமோ அல்லது நுண்ணோக்கியினாலோ  நம்மால் அளக்க முடியாது, அதனை சமன் செய்யவும் முடியாது,  ஆன்மிக பிரார்த்தனைகளும், நமக்கு  குருமார்களால்   கிடைக்கப்படும் வழிகாட்டுதல்களும்  எல்லாவித  பிரச்சனைகளில் இருந்து நம்மை விடுவிக்கிறது. அதற்கான சரியான முதல் படி, சித்தர்களின் தரிசனமும், அருளும், ஆசியும்தான். இப்படிபட்ட விஷேசதரிசனம் சக்திகளையும், அற்புதங்களையும்  அளவில்லாமல் அருளக்கூடியவர்தான் மகரிஷி  ஈஸ்வரபட்டர்  அவர்கள். அவர்தம் நினைவாக நாம் மேற்கொள்ள இருக்கும் இந்த கிரிவலம் நமது இன்னல்களை முழுவதுமாக துடைத்து நம்மை நெறிப்படுத்தும். வாழ்வை வளப்படுத்தி முன்னேற்றும். 

 

 

 

இந்து சமயம்  மற்றும் ஜோதிட சாஸ்திர மரபுப்படி அமாவாசை தினங்களில்தான் மறைந்த நம் முன்னோர், தங்களின் சந்ததியினரின் வழிபாடுகளை ஏற்க பூவுலகுக்கு வருகிறார்கள் என்பது நம்பிக்கை. எல்லா தமிழ் மாத அம்மாவசை  தினங்களுமே சிறப்பானவைதான். ஆனால் ஆடி அமாவாசை மற்றும் தை அமாவாசை தினங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. அதில்  அமாவாசையின் பொழுது  பூமி எண்ணற்ற நற்கதிர்களை ஈர்க்கும்,.அப்போது  நாம் செய்யும்  நமது பித்ரு சாபவிமோச்சன வழிபாடு வெற்றி பெறும் மேலும் நம் மனதில் இருக்கும்  இருள் நீங்கி அருள் என்னும் வெளிச்சம் பெற அமாவாசை தினங்களே மிகவும் சரியான நாள். 

 

தர்ப்பணம்

 

 

பூர்வ ஜென்ம கர்மாவினால் பாதிக்கப்படுவோர், இந்நாளில் ராமேஸ்வரம் கடல் தீர்த்தத்திலோ, முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரியில் உள்ள தீர்த்தத்திலோ நீராடினால் பாவம் நீங்கி சுபிட்சம் பெறுவர் என்பது நம்பிக்கை. இதனாலேயே கன்னியாகுமரி கடற்கரையிலும் பித்ரு  நினைவாக  தை அமாவாசை நாளில் தர்ப்பணம் செய்வர். இதுபோல், நெல்லை மாவட்டம் குற்றாலம், பாபநாசம் உள்ளிட்ட அருவிகளில் புனித நீராடும் வழிபாடு தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. ஆனால்   நமது  சித்தர்கள் மிகவும் எளிமையான தர்ப்பண முறையையும் நமக்காக உருவாக்கி  இருக்கிறார்கள். அதை   குருநாதர்  நமக்காக  விளக்கி நம்மையும் செய்ய வைக்க விருக்கிறார்.  நாம் தர்ப்பணம் செய்து நமது பாவங்களை முற்றிலுமாக கரைத்துவிடலாம்.

 

                                                    பல ஆண்டுகளாக மூதாதையர்களை நினைக்கத் தவறியவர்கள், மகாரிஷி  ஈஸ்வரபட்டர் நினைவாக நடைபெறும் கிரிவல நிகழ்ச்சியில் கலந்து கொண்டாலே,  ஆண்டு முழுவதும் தர்ப்பணம் செய்ததற்கு சமம் என்பது  சிவனடியார்களின் வாக்கு. ஆடி மாதம் கழுகுமலையில் சித்தர்களின் வருகைகள் அதிகமாக இருக்கும், இந்த புண்ணிய பூமியில் இன்னும் மனிதர்களின் கண்ணில் அகப்படாமல்  பல ஜீவசமாதிகள் உள்ளன. அந்த மகான்களின் ஆசியும் இந்த வேலையில் அதிகமாக வெளிப்படும்.   அவர்களை வரவேற்கவே  ஆடி அமாவாசையில் இந்த கிரிவலத்தினை நமது ஆன்மீக வழிகாட்டி குருநாதர் அய்யா சகஸ்ரவடுகர் அவர்கள் இறையருளால் நடத்தி வருகின்றார்கள்.

 

          குருநாதர் அய்யா சகஸ்ரவடுகர்

 

 

 

கழுகுமலை வரும் வழி

 

 குறிப்பு

 

 

1.கிரிவலத்தில் கலந்து கொள்ள வரும் அனைத்து அன்பர்களும் மஞ்சள் நிற ஆடையுடன் கழுகாசமூர்த்தியின்  சன்னதியின் முன்பாக சரியாக 11.08.2016 அன்று காலை 07.30 அளவில் வந்து சேறுமாறு கனிவன்புடன்  கேட்டுக்கொள்கிறோம் .

 

2.இந்த அன்னதானத்தில் தங்களை இணைத்துகொள்ள நினைக்கும் அனைவரும் தங்களால் இயன்றதை கொடுங்கள் விருப்பம் உள்ளர்வர்கள் மின்னஞ்சலில் (This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.) தொடர்புகொள்ளவும். இது நினைவூட்டல் மட்டுமே கட்டாயம் கிடையாது.

 

3.கலந்து கொள்ளும் அன்பர்கள் தங்கள் வருகையை  மின்னஞ்சல்   மூலம் உறுதி படுத்துமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

 

 

குருநாதர் அய்யா சகஸ்ரவடுகர் அவர்கள் மற்றும் ஆன்மிகக்கடல் - ஆன்மிகஅரசு குழுமம் சார்பாக அனைவரையும் வரவேற்கிறோம்.

 

                                     நலம் உண்டாகட்டும்.

 

 

 

ஓம் சிவ சிவ ஓம் !!!                            ஓம் ஈஸ்வரப்பட்டாய நமஹ                              ஓம் சிவசக்தி ஓம் "

 

 

 • aanmeegaarasoo
 • arunachaleswarar
 • girivalam
 • astalingam
 • annathanam

 

 

 

 

 

 

 

 

ஓம் ஸ்ரீ மகா கணபதியே நமஹ ! 

 

 

தென்னாடுடைய சிவனே போற்றி !!

 

 

 

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !!

 

 

 

 

 

மூன்று நூற்றாண்டுகளாக அருள்பாலித்து வரும் ஸ்ரீ  முத்துமாரியம்மன் திருக்கோவில் பூக்குழித் திருவிழா

 இந்த ஆண்டு அதாவது ஹேவிளம்பி  வருடம் பங்குனி 

மாதம் 25 ஆம் ஞாயிற்றுக்கிழமை அஷ்டமி திதியும்  உத்திராடம்           நட்சத்திரமும் கூடிய சுபதினத்தில் (08.04.18) மாலை 06 மணிக்கு,

20 கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள்,பக்தைகள் விரதம் இருந்து  பூக்குழி இறங்கினார்கள்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

இந்த சிறப்புமிக்க கோவில் கடந்த ஏழு வருடங்களாக நமது

 குருநாதர் சகஸ்ரவடுகர்  அவர்களால் பராமரிக்கப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக எட்டாவது ஆண்டாக நமது ஆன்மீகக்கடல்ஆன்மிகஅரசு குழுமம் சார்பாக பக்தர்களுக்கு  அன்னதானமும்ஆடை தானமும்  வழங்கப்பட்டது.

 

 

 

 

 

அன்னதானம்:

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

ஆடைதானம்: 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

நமது குருவின் அதிகமான சொற்பொழிவில் இடம்பெற்ற அடியார்களுக்கான ஆடை தானமும் இடம்பெற்றது.

 

 

 

 

 

 

உற்சவ ஊர்வலம்: 

 

 

 

 

 

 

 

 

 

முன்னதாக,முத்துமாரியம்மனின் உற்சவ ஊர்வலம் முள்ளிக்குளம் கிராமத்தை வலம் வந்தது;அவ்வாறு வரும் போது விரதமிருந்த பக்தர்களும்,பக்தைகளும் அம்மனின் அருளாசியால் தெய்வீகப் பரவசநிலையை எட்டியவாறு உற்சவ ஊர்வலத்துடன் கிராம வலம் வந்தனர்.

 

 

 

பூ மிதித்தல்: 

 

 

 வலம் வந்ததன் முடிவாக,மாலை 06:00 மணியளவில் கோவிலின் பூசாரி முதலில் பூ இறங்கினார்;அவரைத் தொடர்ந்து அனைத்து பக்தர்களும் பூ இறங்கினார்கள்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

முத்துமாரியம்மனிடம் சங்கல்பம் கொண்டுவிரதம் இருந்து பூ இறங்கியவர்களின் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேறிமுத்துமாரியம்மனின் அருளைப் பெற்றனர்.

 

 

 

 

 

நன்றி:

 

 

 

 

 

 

 

இந்த அன்னதானத்தில் நமது குருநாதர்  சகஸ்ரவடுகர்  அய்யாவின் கரங்களோடு தங்களையும் இணைத்துக்கொண்ட நம் தன்னார்வத்தொண்டர்களுக்கு ஆன்மீகக்கடல் மற்றும் ஆன்மிகஅரசு குழுமம் சார்பாக மிக்கநன்றி.

 

 

 

 

ஓம்   சிவசிவ   ஓம்!

 

ஓம்   சிவசிவ   ஓம்!!

 

ஓம்   சிவசிவ  ஓம்!!!

 

 

 

 

 

 • aanmeegaarasoo
 • arunachaleswarar
 • girivalam
 • astalingam
 • annathanam

 

 

 

ஓம் ஸ்ரீ மகா கணபதியே நமஹ ! 

 

 

தென்னாடுடைய சிவனே போற்றி !!

 

 

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !!

 

 

 

 
ஆன்மீக அன்பர்கள் அனைவருக்கும் அன்பு வணக்கம் 

 

 

 

 

 

 

மூன்று நூற்றாண்டுகளாக அருள்பாலித்து வரும் ஸ்ரீ  முத்துமாரியம்மன் திருக்கோவில் பூக்குழித் திருவிழா இந்த ஆண்டு அதாவது ஹேவிளம்பி  வருடம் பங்குனி மாதம் 25 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை அஷ்டமி திதியும்  உத்திராடம் நட்சத்திரமும் கூடிய சுபதினத்தில் (08.04.18) மாலை 06 மணிக்குத் துவங்குகிறது. இந்த சிறப்புமிக்க கோவில் கடந்த ஏழு வருடங்களாக நமது குருநாதர் சகஸ்ரவடுகர் அவர்களால் பராமரிக்கப்பட்டுவருகிறது. அதன் தொடர்ச்சியாக எட்டாவது ஆண்டாக நமது ஆன்மீகக்கடல் குழுமம் இணைந்து வரும் ஆயிரக்கணக்கானப் பக்தர்களுக்கு  அன்னதானமும்ஆடை தானமும்  வழங்க இருக்கிறோம். 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 20 கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள்,பக்தைகள் விரதம் இருந்து இங்கு  தீ மிதித்து பூ இறங்குவார்கள்.

 

முன்னதாக,முத்துமாரியம்மனின் உற்சவ ஊர்வலம் முள்ளிக்குளம் கிராமத்தை வலம் வரும் ;அவ்வாறு வரும் போது விரதமிருந்த பக்தர்களும்,பக்தைகளும் மாலை அணிந்தும்.முளைப்பாரியும் வளர்த்து  தங்களது பிரார்த்தனைகளுக்காக  அம்மனை   வழிபடுவார்கள்.

 

 

 

 

தொடக்கம்:

 

 

 

 

 

 

 

 

 

 

கடந்த 49 ஆண்டுகளில் முத்துமாரியம்மனிடம் சங்கல்பம் கொண்டுவிரதம் இருந்து பூ இறங்கியவர்களின் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேறி வருகின்றன;அதனால்,இந்த 50 ஆம் வருடத்தில் சுமாராக 1000 பேர்கள் பூ இறங்க முத்துமாரியம்மனின் அருளைப் பெற இருக்கிறார்கள் இந்த வைபவம் தொடர்ந்து பத்து நாட்கள் நடைபெறும். இதை நமது குருநாதர் தொடங்கி வைக்க இருக்கிறார்கள். நமது ஆன்மீகக்கடல் குழுமம் சார்பாக பத்து  நாட்களும் (30.04.18 -07.04.18)  அன்னதானம் நடக்க இருக்கிறது. இதில் தங்களையும் இணைத்துக்கொள்ள விரும்புகிற அன்பர்கள் நமது வலைதள மின்அஞ்சலுக்கு தொடர்புகொள்ளவும்.

 

 

ஓம்   சிவசிவ   ஓம்!

 

ஓம்   சிவசிவ   ஓம்!!

 

ஓம்   சிவசிவ  ஓம்!!!

 

 

 

 • aanmeegaarasoo
 • arunachaleswarar
 • girivalam
 • astalingam
 • annathanam

 
ஓம் ஸ்ரீ மகா கணபதியே நமஹ ! 

 

 

தென்னாடுடைய சிவனே போற்றி !!

 

 

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !!

 

 

 
பங்குனி உத்தரம்:

 
பங்குனி மாதத்தில் உத்திர நட்சத்திரத்தில் பவுர்ணமி வரும் நாளில் பங்குனி உத்திரம் கொண்டாடப்படுகிறது. சந்திரன் உத்திர நட்சத்திரத்தில் இருப்பதால் இவ்விழாவிற்கு இப்பெயர் ஏற்பட்டது.
பங்குனி மாத உத்திரம் நட்சத்திரம் அன்று பிறப்பவர்களும், இறப்பவர்களும் தெய்வம்சம் கொண்டவர்கள்.


 

 

 

 

 

 

 

இத்தினத்தில் பார்வதியைபரமேஸ்வரன் மணந்தார். ராமன்சீதையை கரம் பிடித்தார். மேலும் முருகன்தெய்வானையை கரம் பிடித்தார். திருவரங்கநாதர்ஸ்ரீ ஆண்டாள் முதலிய தெய்வ திருமணங்கள் பலவும் பங்குனி உத்திரத்தன்று தான் நடைபெற்றன. இதனால் பங்குனி உத்திர விரதம் திருமண விரதம் என்றும்கல்யாண விரதம் என்றும் போற்றப்படுகிறது.

 
பங்குனி மாதத்தின் சிறப்பு:

 முருகப்பெருமான்:

 
பங்குனி மாதத்தில் தான் அசுரர்களின் கொட்டத்தை அடக்க முருகப்பெருமான்தன் தாய்தந்தையரை வணங்கி பயணத்தை ஆரம்பித்தார்.மாயாபுரிப்பட்டினம் என்னும் நகரில்சூரபத்மனின் தம்பியும்யானை முகம் கொண்டவனுமான தாரகாசுரன் ஆட்சி செய்து கொண்டுதேவர்களை மிகுந்த துன்பங்களுக்கு உள்ளாக்கி வருகின்றான் என்ற தகவலையும் நாரதர் கூறுகிறார்.

 


அதை கேட்ட முருகப்பெருமான்தன் தளபதி வீரபாகுவிடம் படையில் பாதியை அழைத்து கொண்டுபோய்தாரகாசுரனை அழித்து விட்டு வரும்படி கட்டளையிட்டார். இதை அறிந்த தாரகாசுரனும் பெரும்படையுடன் எதிர்த்து வந்தான். தாரகாசுரனின் அசுரப்படைகள் முருகப்பெருமானின் படைகளை பெரிய அளவில் தாக்கி அழித்தன. இதை நாரதர் மூலம் அறிந்த முருகப்பெருமான்நேரடியாக போர்க் களத்திற்கு வந்தார். கோபம் கொண்ட முருகப்பெருமான் அவனை கடுமையாக தாக்க ஆரம்பித்தார். 


தாக்குதலை சமாளிக்க முடியாமல் எலியாக மாறி கிரவுஞ்சன் மலைக்குள் நுழைந்து மாய வேலைகளை காட்ட ஆரம்பித்தான். முருகப்பெருமான்தன் வேலாயு தத்தை கையில் எடுத்து வீசி எறிந்தார். துள்ளி வந்த வேல்மலையை பல கூறுகளாக்கி உடைத்தெறிந்துதாரகாசுரனை கொன்றது. அதன் பிறகு முருகப்பெருமான்தெய்வானையை மணந்தார். அந்த நாளே பங்குனி உத்திரமாகும்.  

 

 

 

 

 

 

 

 


கல்யாணசுந்தர விரதம்:

 

 

 

சிவனுக்கும் , பார்வதிக்கும் சோமசுந்தரர்  என்றும் மீனாட்சி என்றும் நாமம் கொடுத்து மணம் செய்வித்த நாளும் பங்குனி உத்தர நாளாகும். சிவனின் மோன நிலையைக் கலைத்த மன்மதனை எரித்ததால் கலங்கி நின்ற தேவர்களுக்கு ஆறுதல் வார்த்தையாக சிவன் தேவியை இத்தினத்தில் மணந்தார் என்பது ஐதீகம்.இத்தினத்தில் சிவனுக்கும் பார்வதிக்கும் ஆடை அணிகளால் அழகுசெய்து,மணவறையில்,அமர்த்தி வாத்தியங்கள் முழங்க, வேதங்கள்  ஓதிஹோமம் வளர்த்துதோத்திரங்கள் கூறிதாலி கட்டிவாழ்த்துக்கள் கூறிஅலங்கரித்த பல்லக்கில் இருவரையும் ஊர்வலமாகக் கொண்டு சென்று பள்ளியறைக்கு அனுப்பி 
வைப்பார்கள்.பங்குனிஉத்தரக்கல்யாணத்திருவிழா பசுவாகிய ஆன்மா பதியாகிய சிவத்துடன் இணைவதாக ஓர் உயர்ந்த நிலையினை எடுத்துக்காட்டுகின்றது. இத்தினத்தில் அம்மையப்பனைக் குறித்து சைவர்கள் விரதமிருப்பர். பகற்பொழுது உணவு உட்கொள்ளாதுஇரவில் பால்பழம் போன்ற உணவு வகைகளை உட்கொண்டுவிரதம் அனுஷ்டிப்பர். இதனைக் கல்யாணசுந்தர விரதம் என்றும் அழைப்பர்.

 
பங்குனி உத்தர வழிபாடு முறை:

 
உத்திரம் என்றதும் நம் நினைவுக்கு வருவது முருகன் தான்ஆனால் அதையெல்லாம் விட குல தெய்வ வழிபாடு செய்து மிக சிறப்பானது. குல தெய்வம் தெரியாத ஆன்மிக அன்பர்கள் அவர்களின் இஷ்ட தெய்வத்தை வழிபாடு செய்யலாம்.


 


வரும் பங்குனி உத்திரத்தில் வெள்ளிக்கிழமை அதிகாலையில் 7.00 மணி முதல் 7.30  மணிக்குள் உங்கள் குல தெய்வம் அல்லது உங்களின் இஷ்ட தெய்வத்தை அர்ச்சனை செய்து வணக்க வேண்டும். பின்பு இறைவனை நினைத்துஉங்களின் நியமான கோரிக்கைகள் மனதில் நினைத்து தியானம் செய்து அவரவர் வீட்டுக்கு வர வேண்டும்.


 

 

 


இவ்வாறு வழிபாடு செய்தால் நமது முன்னோர்கள் காலத்தில் இருந்து இன்றுவரை நாம் குலதெய்வ வழிபாடு செய்த பலனையும்குலதெய்வத்தின் அருளை உடனடியாகப் பெறலாம். பித்ருகடன் நிவர்த்திமாணவர்கள் நல்ல தேர்ச்சிபதவி உயர்வு நீண்ட கால குடும்ப பிரச்சினகளுக்கும் தீர்வு ஏற்படும்நாம் வாழ்வில் செல்வ வளம் பெருகும்நமக்கு இருக்கும் தடை விலகும் நமக்கு வரவிருக்கும் தீமைகள் நீங்கி நன்மைகள் உண்டாகும். மேலும் நமக்கு கிடைக்கும் நியானமான கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறும்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

இத்தகைய அறிய ரகசிய கருத்தை ஆராயிந்து நமக்கு அளித்து,  நம் இன்னல் நீங்க வழிகாட்டும் ஆசான் அய்யா சகஸ்ரவடுகர் அவர்களுக்கு ஆன்மீக கடல், ஆன்மீகஅரசு சார்பாகவும் எங்களது அன்பர்கள் சார்பாகவும் எங்கள் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

 

 

 

 

 

 

ஓம்   சிவசிவ   ஓம்!

 

ஓம்   சிவசிவ   ஓம்!!

 

ஓம்   சிவசிவ  ஓம்!!!

 

 

 

 • aanmeegaarasoo
 • arunachaleswarar
 • girivalam
 • astalingam
 • annathanam

 

 ஓம் ஸ்ரீ மகா கணபதியே நமஹ ! 

 

 

தென்னாடுடைய சிவனே போற்றி !!

 

 

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !!

 

 

ஓம் ஸ்ரீ மாதாவானந்த ஸ்வாமிகள் சரணம் . 

 

 

 

 

 

 

 

 

ஸ்ரீ சிவயோக சச்சிதானந்த ஸ்ரீ ஸ்ரீ மாதாவானந்த ஸ்வாமிகள்அய்யா அவர்களை பற்றி நம் வலைத்தளத்தில் பார்த்திருக்கிறோம். இன்றும் அய்யா ஸ்ரீ மாதாவானந்தர் அவர்களின் ஆசியை பெரும் பொருட்டு இந்த பதிப்பு நம் வலைத்தளத்தில் வலம் வருகிறது. 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

அய்யா அவர்கள் வாசி யோகத்தில் வித்துவான் என்றால் அது மிகையல்லபொதுவாகவே சித்த பெருமக்கள் தாங்கள் எவ்வளவு பெரிய அல்லது அரிய சக்திகளை வைத்திருந்தாலும் மிக எளிமையாகவும் ஏதும் அறியாத குழந்தைகளைப்போலவே இருப்பார்கள்.

 

 

 

 

 

 

 தன்னை நாடி வருபவன் யார் எதற்காக வந்திருக்கிறான் அவனுக்கும் நமக்கும் என்ன தொடர்பு அது எந்த பிறவியில் தொடங்கியதுஎப்பொழுது முழுமை பெறும் என்பது வரை அவர்கள் நன்கு அறிவார்கள்அறிந்திருந்தும் விதியின் பொருட்டு அதை யாரிடமும் உரைக்காமல் சிவார்ப்பணம் என்ற கொள்கைப்படி வாழ்வினை மேற்கொண்டவர்கள் மேலும் நமக்கு இறை வழிகாட்டிகளும் அவர்களே.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

சித்தர்கள் ரூபத்தில் அதாவது சரீரத்தினால் வேறுபட்டாலும் அவர்கள் ஒருவரே அன்றி வேறில்லை. 

 

 

 

 

 

அய்யா ஸ்ரீ மாதாவானந்த ஸ்வாமிகள் சரீரத்தோடு இருந்தபோதிலும்தன் ஜீவனை அடக்கி ஜீவசமாதியாக சிவத்தில் ஐக்கியமான பின்னும் சர்வ வல்லமை பொருந்தியவராக இந்த வளிமண்டலத்தில் உலா வருகின்றார்.ஆம் அன்பர்களே தன்னை நாடி வருபர்களின் இன்னல்களை  களைந்து சுபிக்ட்ஷம் அளித்துவருகிறார்கள்மேலும் அன்பர்களின் நேர்மையான கோரிக்கைகளை முன்நின்று நிறைவேறுகிறார் அய்யா ஸ்ரீ மாதாவானந்த ஸ்வாமிகள்

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

அய்யா ஸ்ரீ மாதாவானந்த ஸ்வாமி அவர்களின் ஜீவசமாதி நிறைவடைந்து வரும் தை 29 ம் தேதியில் கும்பாபிஷேகம் மற்றும் அன்னதானமும் நடைபெறவுள்ளது. ஆன்மிக அன்பர்கள் அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீமாதாவானந்த ஸ்வாமிகள் மற்றும் நமது ஆன்மீக வழிகாட்டி அய்யா ஸ்ரீ சகஸ்ரவடுகர் அவர்களின் அருளாசியும் பெற்று வாழ்வாங்கு வாழ வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறோம் .

 

 

 

 

அய்யா ஸ்ரீ மாதாவானந்த ஸ்வாமி அவர்களின் ஜீவசமாதி கட்டிட வேலைக்கு உதவிய அனைத்து ஆன்மிக அன்பர்களுக்கும் அய்யா சகஸ்கரவடுகர் சார்பாகவும், ஆன்மிகக்கடல் மற்றும் ஆன்மிக அரசு சார்பாகவும் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

 

 

 

 

 

 

வரும் வழி:

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

   பாம்புக்கோவில் சந்தை ரயில் நிறுத்தத்தில் இறங்கிசெங்கோட்டை செல்லும் ரயில் பாதை வழியாகவே ஒரு கி.மீ.தூரத்துக்கு நடந்து செல்ல வேண்டும்.இரண்டாவது சாலையானது ரயில் பாதையின் குறுக்கே செல்லும்.அந்த இரண்டாவது சாலையின் இடது பக்கத்தில்,ரயில் பாதையின் மிக அருகில் மாதவானந்த சுவாமிகளின் ஜீவசமாதி அமைந்திருக்கிறது.அருகில்,வெள்ளை மடத்துவிநாயகர் சன்னிதியும் அமைந்திருக்கிறது.  

 

                                                        

 

 

 

 

 

ஓம்   சிவசிவ   ஓம்!

 

ஓம்   சிவசிவ   ஓம்!!

 

ஓம்   சிவசிவ  ஓம்!!!

 

 

 • aanmeegaarasoo
 • arunachaleswarar
 • girivalam
 • astalingam
 • annathanam

 

 

 

 

 

ஓம் ஸ்ரீ மகா கணபதியே நமஹ ! 

 

 

தென்னாடுடைய சிவனே போற்றி !!

 

 

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !!

 

 

 

 

 

 

 

 

வள்ளலார்:

 

 "வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம்வாடினேன்என்று பாடியவர்,

வள்ளலார் பக்தி நெறி நின்றாலும் உலக வாழ்வில் மக்கள் சிறந்து வாழும் பக்குவநெறியும் கண்டவர்ஏழை பணக்காரன்மேல்சாதி கீழ்சாதிமுறைகளை வன்மையாகக் கண்டித்தவர்.

 

 

 

 

 
சாதி சமய வேறுபாடுகளைக் கடுமையாய் எதிர்த்தார்மக்கள் வாழப் பயன்படும் நெறியே நன்னெறி எனப் போற்றினார்.

இவர் சாதி சமய வேறுபாட்டுக்கு எதிரான தமது நிலைப்பாடு காரணமாகசமுதாயத்தின் பழைமைப் பற்றால் பெரிதும் பாதிக்கப்பட்டவர்வள்ளலாருக்கு எதிராக வழக்குமன்றத்தில் வழக்கு தொடர்ந்தவர் ஆறுமுக நாவலர்.

இவருக்கு இராமலிங்க அடிகள்திருவருட்பிரகாச வள்ளலார், சிதம்பரம் இராமலிங்க அடிகள் என பல்வேறு சிறப்பு பெயர்களைக் கொண்டவர்.

 

வாழ்க்கை வரலாறு:

 

 இவர் கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில்  இருந்து 10 மைல் தொலைவில் உள்ள மருதூரில் 05.10.1823இல் பிறந்தவர்பெற்றோர் இராமையாபிள்ளைசின்னம்மையார்இவரோடு சபாபதிபரசுராமன்உண்ணாமுலைசுந்தராம்பாள் ஆகிய நால்வரும் உடன்பிறந்தவர்கள்இராமலிங்கர் பிறந்த ஆறாம் மாதத்திலேயே தந்தையை இழந்தார்தாயார் குழந்தைகளோடு பொன்னேரி சென்று வாழ்ந்தார்பின்னர் சென்னையில்  ஏழுகிணறு பகுதி 39, வீராசாமி பிள்ளை தெருவில் உள்ள வீட்டில் குடியேறினார்அண்ணன் சபாபதி சமயச் சொற்பொழிவு செய்து வந்தார்.

 

இராமலிங்கருக்குச் செந்தமிழ்க் கடவுளாகிய முருகப்பெருமானது திருக்காட்சி இளமையிலேயே கிடைத்ததுமக்கட் பிறவியினரையே குருவாகப் பெறும் மானிடர் உலகில்மறைமுதல்வனின் மகனான முருகப்பெருமானையே குருவாய் ஏற்றதால்இராமலிங்கர் செந்தமிழும் வடமொழியும் ஆகிய இருபெரும் மொழிகளையும் ஓதி உணரும் பெரு ஞானம் கைவரப் பெற்றார்

 

 உலகியல் முறைக்கேற்பக் காஞ்சிபுரம் மகாவித்துவான் சபாபதி முதலியாரையும்சகோதரர் சபாபதிப் பிள்ளையையும் ஆசான்களாகப் பெற்றார்சபாபதிப் பிள்ளையின் அன்பினும் அவர் மனைவியாரின் அரவணைப்பிலுமே வளர்ந்தார் 

 

கருவிலே திருவுடையவராக அவர் தோன்றியமையால்இளம்போதிலேயே கவி எழுதும் பேராற்றலைப் பெற்றார்இராமலிங்கர் பல்வேறு ஆற்றல்களின் உறைவிடமாக விளங்கினார்.

 

 இளமையில் முருகப்பெருமானைக் கடவுளாகவும்திருஞான சம்பந்தரைக் குருவாகவும்திருவாசகத்தை வழிபடும் நூலாகவும் கொண்டார்பின்னர் ஒற்றியூரில் வாழும் இறைவனின் இணையற்ற பக்தராகவும்பின் தில்லையம்பல நாதரின் பக்தராகவும் விளங்கினார்முடிவில் அருட்பெருஞ்சோதி அடியவராகத் திகழ்ந்தார்.

அவர் புலவராககவிஞராகசொற்பொழிவாளராகஉரைநடை எழுத்தாளராகநூலாசிரியராகஉரையாசிரியராகஞானாசிரியராகபோதகாசிரியராகமருத்துவராகஇவர்களுக்கெல்லாம் மேலாகத் துறவியாகஞானியாகசித்தராகக் காட்சி தந்தார்.

 

 

சத்திய தரும சாலை - சத்திய ஞான சபை: 

 

  உலகங்கள் எல்லாவற்றையும் இயக்கி வரும் முழுமுதற் பொருள்களான கடவுள்அனைவர் உள்ளங்களிலும் சோதி வடிவாகத் திகழ்கின்றார்அத்தகைய அருட்பெருஞ்சோதி ஆண்டவரின் தனிப்பெருங் கருணையே உலக உயிர்களையெல்லாம் வாழ வைக்கிறதென்றும் கண்டார்.

 

பொருளை வாரி வழங்கியவர்கள் பொருள் வள்ளல்கள்அருளை வாரி வழங்கியோர் அருள் வள்ளல்கள்அருள் வள்ளல்களில் ஒருவராகி அதேபொழுதுதம் தனிப்பண்பாலும் ஒருவராகிவள்ளல் என்ற தனிப் பெயரையே பெற்றுத் திகழும் வெற்றிபெற்றவர் நம் இராமலிங்கர் 

மரணமில்லாப் பெருவாழ்வு எனச் சாகாக்கலையை உலகிற்கு உணர்த்தியவர் வள்ளலார்அவர் பொன் செய்யும் ஆற்றலையும் பெற்றிருந்தார் 

இவ்வுண்மையினை மனத்திற் கொண்டுசாதிமத வேறுபாடின்றிஎல்லா உயிர்களிடத்திலும் இரக்கமுடையவராய் வாழும் ஆன்மநேய ஒருமைப்பாட்டினை நல்கும் சீவகாருண்ய ஒழுக்கமே உலகில் உயர்ந்தது என அறிந்து தெளிந்தார்.

 

இதனால் சமரச சன்மார்க்க நெறியைக் கைக்கொண்டார் 

தம் நெறிதழைக்க இறைவன் கருணைதனைப் பெற்றார்பயிர்கள் வாடுவதையே பார்க்கப் பொறுக்காத இராமலிங்கர்பசியால் வாடும் மக்களின் துயர் துடைக்க முன்வந்தார்வடலூரில் சன்மார்க்க சங்கம் - என்னும் மூன்று அருள் நெறி காக்கும் அமைப்புகளை நிறுவினார்அப்பெருமான் தனிக்கொள்கையைதனிக்கொடியைதனிச்சபையைதனிமார்க்கத்தைதனி மந்திரத்தைவழிபாட்டைக் கண்டார்.

 

 

சத்திய ஞானசபை:

 

 தன் வாழ்வின் பெரும்பகுதியைச் சென்னையில் கழித்த இவர்நவீன சமுதாயங்களின் பிரச்சினைகளை உணர்ந்திருந்தார்அனைத்துச் சமய நல்லிணக்கத்திற்காகவும் சன்மார்க்கத்திற்காகவும் தன் வாழ்நாளை அர்ப்பணித்துப் பணியாற்றினார்.

 

 

இந்நோக்கத்தை அடையும் பொருட்டு சிதம்பரம் அருகே உள்ள வடலூரில்  சத்திய ஞானசபையை அமைத்தார். 1867ஆம் ஆண்டில் சத்திய தரும சாலையையும் நிறுவினார்அவர் வாழ்ந்த காலத்தில் அவருடைய சிந்தனைகள் மிகவும் முற்போக்குடையதாக கருதப்பட்டாலும்தற்பொழுது உலகெங்கும் அவருடைய சிந்தனைகளுக்கு ஒத்த கொள்கைகள் புரிந்துகொள்ளப்பட்டு பின்பற்றப்படுகின்றன.

இங்கு பொற்சபை, சிற்சபை என இரு சபைகள் உள்ளன. மொத்தம் ஏழு கதவுகள் கொண்ட தனித்தனி அறைகள் உள்ளன, அதில் ஜோதி சொருபம்மா வள்ளலார் ஜோதி வடிவமாக கொண்டு ஒவ்வாரு அறைக்கும் ஒரு விளக்கினைவைத்து வழிபாடுகள் நடைபெறுகிறது.

 

 

 

 

இங்கு தினந்தோறும் இரவு 7 மணி முதல் 8 மணிவரை முதலாவது அறையை திறக்கப்பட்டு  வள்ளலார் ஜோதி வடிவமாக காட்சியளிக்கிறார், அந்தவேளையில் அருட்பெரும்ஜோதி! அருட்பெரும்ஜோதி!! தனிபெருங்கருணை அருட்பெரும்ஜோதி!!! என மந்தரத்தை ஜெபிக்கின்றனர்.

 

 

 

 

 
இங்கு ஆண்டுதோறும்  தைப்பூசத் திருவிழாவில், ஏழு கதவுகள் கொண்ட தனித்தனி அறைகள் திறக்கப்பட்டு வள்ளலார் ஜோதி வடிவமாக காட்சியளிக்கிறார்.
 

 

 

 

 

 

 

 

தருமசாலை:

 

 இராமலிங்க அடிகள் 2351867 அன்று வடலூர் மக்களிடம் இருந்து 80 காணி நிலம் பெற்று தருமசாலையை தொடங்கினார்இந்த தருமசாலைக்கு வந்தவர்களுக்கு 3 வேளையும் உணவு வழங்கப்பட்டது.தற்போது தருமசாலைக்கான உணவுப்பொருட்களை தமிழக அரசு குறைந்த விலைக்கு வழங்கி வருகிறது என்பது பாராட்டுக்கு உரியதாகும்.

 

மக்களின் மிகுந்த துயரங்களுள் ஒன்றான பசியை போக்கிட வள்ளலார் வழி வகுத்தார்இன்றளவும் வள்ளலார் பெயரால் லட்சக்கணக்கான மக்களுக்கு பசியாற்றப்படுகிறதுவடலூரில் தலைமை இடம் இருந்தாலும்உலகமெங்கும் அவரது கொள்கையைப் பின்பற்றுகின்றவர்கள் பசியாற்றுகிறார்கள்.

 

மேலும் இங்கு வள்ளலார் அவர்களால் ஏற்றப்பட்ட ஆணைய அடுப்பு உள்ளது. இது அன்று முதல் இன்று வரையிலும் அணையாமல் உள்ளது. பருப்பு தான உண்டியல் உள்ளது, அன்னதானத்தை அடுத்து இங்கு பருப்பு தானம் அதிகமாக பக்கதர்களால் வழங்கபடுகிறது.
 

 

வள்ளலார் நடத்திய அதிசயங்கள்:

 

 வள்ளலார்தோன்றிய காலம் தொட்டே பல அதிசயங்களை நிகழ்த்தி உள்ளார் 

 

அப்பெருமகனார் ஓராண்டுப் பருவத்தினராக இருந்தபோதே தில்லையம்பலநாதர் சந்நிதித் திரைச்சீலை தானே தூக்கப்பெற்று தரிசித்தார்.

 

ஒருமுறை திண்ணையிலிருந்து கீழே விழுந்தபோது இறைவி வந்து காப்பாற்றினார்.

 

ஒருநாள் பட்டினியோடு படுத்திருந்தபோது அவர் அண்ணியார் வடிவில் இறைவி காப்பாற்றினார்.

 

இளமையில் அண்ணன் சொற்பொழிவுகளுக்கு ஏடு படிக்கத் தொடங்கினார்ஒரு முறை அவர் நோய்வாய்ப் பட்டமையால் தாமே சொற்பொழிவு செய்யத் தொடங்கி நாடறிந்த பெருமகன் ஆனார் 

 

தண்ணீரில் விளக்கெரியச் செய்தார்இந்நிகழ்ச்சி நினைவாக சிதம்பரம் நடராச்சர் கோவிலில் தண்ணீரில் விளக்கெரியச் செய்யும் நிகழ்ச்சி இன்றும் நடைபெற்றுவருகிறது.

 

ஒரே இரவில் 1596 வரிகளை உடைய அருட்பெருஞ்சோதி அகவலைப் பாடி முடித்தார்.

 

தி்ருவருட்பா:

 

ஒத்தாரும் உயர்ந்தாரும் தாழ்ந்தாரும் ஆகிய அனைவரும் ஒருமை உள்ளவராகி உலகில் வாழ வேண்டும் என்ற பெருநோக்கோடு வள்ளலார் திருவாய் மலர்ந்தருளிய செந்தமிழ்த் திருப்பாடல்களின் தொகுதியே திருவருட்பா என்னும் கருவூலமாகும் 

 

அருளாளர்கள் பாடிய பாடல்கள் அனைத்தும் அருட்பாக்களேஆனால் திரு சேர்ந்து அப் பெயருடனேயே விளங்கும் அருட்பாவள்ளல் பெருமான் பாடிய பாடல்களின் தொகுதியே யாகும் 

 

ஆறு திருமுறைப் பகுதிகள் கொண்டு விளங்குகின்றது. 399 பதிகங்களையும் 5818 பாடல்களையும் கொண்டதுஎல்லாப் பாடல்களும் இறைவனை முன்னிறுத்திப் பாடப்பெற்றவையேஇது பக்திப்பா உலகில் ஒரு புதுமைதமிழ்மொழிக்கு மற்றொரு பெருமை 

 

ஆண்டவனை அனைவரும் நாள்தோறும் வேண்டிப் போற்றும் நிலையில் உரைநடை வேண்டுகோளாக அமைந்தவைசுத்த சன்மார்க்கச் சத்தியச் சிறு விண்ணப்பம்சுத்த சன்மார்க்கப் பெரு விண்ணப்பம்சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞான விண்ணப்பம்சமரச சுத்த சன்மார்க்க சங்க சத்திய ஞான விண்ணப்பம் என்பனவாகும்.

 

ஜீவ சமாதி:

 

வடலூரில் வள்ளலாரின் சீடரான கல்பட்டு அய்யா ஜீவ சாமதியும், கல்பட்டு அய்யாவின் மூன்று சீடர்கள் ஜீவ சாமதியும் சேர்த்து, மொத்தம் இங்கு நான்கு ஜீவ சாமதிகள் அமைத்துள்ளது.

 

 

 

 

 

 

 

மேட்டுக்குப்பம்:

 

 

 

சத்திய ஞானசபை இருந்து சுமார் நான்கு கிலோமீட்டர் தொலைவில் மேட்டுக்குப்பம் அமைந்துள்ளது.இறைநெறியை ஆன்மநேயப் பெருநெறி ஆக்கிய வள்ளல் பெருமான் தைப்பூச நன்னாளில் மேட்டுக்குப்பம் சித்தி வளாக திருமாளிகை  உள்ள சித்திவளாகத்தில் ஓர் அறைக்குள் சென்று கதவினை மூடிக்கொண்டு அருட்பெருஞ்சோதி ஆண்டவரான இறைவனோடு இரண்டறக் கலந்து சோதி வடிவானார்அவர் சித்தி அடைந்த நாள் 30-1-1874 ஆகும்

 

 

 

 

 

தைப்பூச ஜோதி தரிசன விழா:

 

ஆறுமுக நாவலர் ஆன இவர் தைப்பூச நன்னாளில் (31.01.18) அருட்பெருஞ்சோதி ஆண்டவரான இறைவனோடு இரண்டறக் கலந்து 

சோதி வடிவானார்.

ஆண்டுதோறும் வடலுாரில்வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில்தைப்பூச ஜோதி தரிசன விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் ஜோதியை தரிசித்தனர்இதன் தொடர்ச்சியாகவள்ளலார் சித்தி பெற்றதிருமாளிகையில்திருஅறை தரிசனமும், பின்பு தரும சாலையில் இருந்துவள்ளலார் பயன்படுத்திய பொருட்கள் அடங்கிய பேழையை பல்லக்கில் வைத்துமீனவ சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள்மேட்டுக்குப்பம் சித்தி வளாக திருமாளிகைக்கு ஊர்வலமாக எடுத்து சென்றனர்.

 

 

 

 

 

 

வழியில்வள்ளலார் தண்ணீரில் விளக்கேற்றிய கருங்குழி இல்லம்அவர் வணங்கிய பெருமாள்பிள்ளையார் கோவில்கள்தீ சுவை ஓடை பகுதிகளில்பொதுமக்கள் பழத்தட்டுடன் ஆரத்தி எடுத்துவரவேற்பு அளித்தனர்பல்லக்கைமேட்டுக்குப்பம் சித்தி வளாக திருமாளிகையில்வள்ளலார் மறைந்த அறை முன் வைத்து,  திருஅறை திறக்கப்படும். ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்து.வள்ளலாரின் அருளைப் பெறுகின்றனர்.

 

 

வள்ளலாரின் போதனைகள்: 

 

கடவுள் ஒருவரே. அவர் அருட்பெரும்ஜோதி ஆண்டவர்.

புலால் உணவு உண்ணக்கூடாது.

எந்த உயிரையும் கொள்ளக்கூடாது.

சாதி மதம் இனம் மொழி முதலிய வேறுபாடு கூடாது.

இறந்தவர்களை எரிக்கக்கூடாது. சமாதி வைத்தல் வேண்டும்.

எதிலும் பொது நோக்கம் வேண்டும்.

பசித்தவர்களுக்கு சாதி மதம் இனம் மொழி முதலிய வேறுபாடு கருதாது உணவளித்தல் வேண்டும்.

சிறு தெய்வ வழிபாடு கூடாது. அவற்றின் பெயரால் பலி இடுதலும் கூடாது.

எல்லா உயிர்களும் நமக்கு உறவுகளே, அவற்றைத் துன்புறுத்தக் கூடாது.

மதவெறி கூடாது.

 

 

 

என வள்ளல் பெருமானின் கொள்கைகள் இன்று உலகெங்கும் பரவி வருகின்றது 

வாழ்கையில் ஒருமுறையாவது வடலூர் சென்று வள்ளல் பெருமானின் அருள்திறத்தையும்ஆன்மநேய ஒருமைப்பாட்டின் உயர்வையும்அறிந்து தெளிந்து திருவருட்பாக்களை நாளும் ஓதி நல் வாழ்வு பெறுவோமாக.

அருட்பெரும்ஜோதி!

அருட்பெரும்ஜோதி!!

தனிபெருங்கருணை அருட்பெரும்ஜோதி!!!

 

 

 ஓம்   சிவசிவ   ஓம்!

 

ஓம்   சிவசிவ   ஓம்!!

 

ஓம்   சிவசிவ  ஓம்!!!

 

 

 

 

 

 

 

 • aanmeegaarasoo
 • arunachaleswarar
 • girivalam
 • astalingam
 • annathanam

 

 

 

 

 

 

 

 

 

 

ஓம் ஸ்ரீ மகா கணபதியே நமஹ ! 

 

 

தென்னாடுடைய சிவனே போற்றி !!

 

 

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !!

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

நாம்  அனைவரையும் நலம் பெற வேண்டும்  மற்றும் வளம் பெற வேண்டும் என்ன நம் எல்லோரையும் ஆன்மிக வழியில் வழிநடத்தும் நமது குருநாதர் அய்யா சகஸ்கரவடுகர்  சார்பாகவும் ,

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

நமது ஆன்மிக வாசகர்களுக்கும் ,உலகிலுள்ள  ஆன்மிக அன்பர்கள் அனைவருக்கும்  ஆன்மிக  கடல்  மற்றும் ஆன்மிக அரசு சார்பாக இனிய பொங்கல் நல்வாழ்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறோம் .

 

 

 

 

 

 

 

ஓம்   சிவசிவ   ஓம்!

 

ஓம்   சிவசிவ   ஓம்!!

 

ஓம்   சிவசிவ  ஓம்!!!

 

 

 

 • aanmeegaarasoo
 • arunachaleswarar
 • girivalam
 • astalingam
 • annathanam

 

 

 

 

 

 

 

 

 

ஓம் ஸ்ரீ மகா கணபதியே நமஹ ! 

 

 

தென்னாடுடைய சிவனே போற்றி !!

 

 

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !!

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில் :

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

108 வைணவத் திருத்தலங்களுள் முதல் திருத்தலம்.காவிரி ஆற்றினால் சூழப்பட்டதும்சிறப்புமிக்க 108 வைணவத் திருத்தலங்களுள் முதன்மையான மிகப் பெரிய அரங்கநாதசுவாமி கோயிலின் ஏழு சுற்று மதில்களுக்குள் அமைந்துள்ளதுமான திருவரங்கம் (ஸ்ரீரங்கம்என்னும் ஊர், 600 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஒரு தீவு நகரம் ஆகும்இச்சுற்று மதில்களில் வாயில்களாக 21 கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளனஇவற்றுள் மிகப் பெரிதான இராஜகோபுரம், 72 மீட்டர் (220 அடிஉயரத்துடன்தென்னிந்தியாவிலேயே பெரிய கோபுரமாக விளங்குகின்றதுஇது 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாயினும், 1987 ஆம் ஆண்டு முழுமையாகக் கட்டி முடிக்கப்பட்டது.

 

 

 

 

தல வரலாறு:

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

திருவரங்கம் கோயில் விமானம் பிரம்மாவின் தவத்தால் திருப்பாற்கடலிருந்து வெளிப்பட்டு தோன்றியதாகும் (இதை சுயம்பு என்று கூறுவர்). பிரம்மா நித்திய பூசை செய்ய சூரியனை நியமித்தார்பிறகு சூரிய குலத்தில் பிறந்த அரசன் இட்சுவாகு இந்த விமானத்தை தனது தலைநகரமாகிய அயோத்திக்கு வழிபடக் கொண்டு சென்றான்ராமர் இவ்விமானத்தை இலங்கையிலிருந்து தனது பட்டாபிஷேகத்துக்கு வந்த விபீஷணனுக்கு பரிசாகக் கொடுத்தார்இதனை விபீஷணன் தனது தலையின் மீது சுமந்து இலங்கைக்கு எடுத்துச் செல்கையில் வழியில் காவிரியாற்றின் கரையை அடைந்தான்விமானத்தைக் கீழே இறக்கி வைத்துவிட்டு சிறிது நேரம் இளைப்பாறினான்பின்னர் அவன் மீண்டும் புறப்பட நினைத்து விமானத்தை எடுத்தான்எடுக்க முடியவில்லைஎவ்வளவோ முயன்று பார்த்தான்கலங்கினான்அங்கு ஆண்டுவந்த தர்மவர்ம சோழன் ஆறுதல் கூறினான்அரங்கநாதரும் காவிரிக்கரையிலேயே தங்கியிருக்க விருப்பம் தெரிவித்தார்விபீஷணனுக்காகதான் "தென்திசை இலங்கை நோக்கிபள்ளிகொண்டருள்வதாக உறுதியளித்தார்பின்னர் தர்மவர்ம சோழன் அவ்விமானத்தைச் சுற்றி கோயில் எழுப்பி வழிபாடு செய்தான்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

குடதிசைமுடியைவைத்துக் குணதிசைபாதம் நீட்டி
வட திசைபின்பு காட்டித் தென்திசையிலங்கை நோக்கி
கடல்நிறக் கடவுளெந்தை அரவணைத்துயிலிமாகண்டு
உடலொனக்குருகுமாலோ என்செய்கேனுலகத்தீரே.

ஸ்ரீ தொண்டரடிப் பொடி ஆழ்வார் முதலாயிரம் திருமாலை 19 வது பாட்டு.

தர்மவர்ம சோழன் கட்டிய திருவரங்கம் கோயில் காவிரியின் வெள்ளப் பெருக்கினால் மண்ணில் புதையுண்டு மறைந்ததுபின்னர் கிளிச் சோழன் ஒரு கிளியின் உதவியுடன் ("வைகுந்தத்திலுள்ள விஷ்ணுவின் கோயில் இருந்த இடம் இதுதான்அக்கோயிலை இப்போதும் இங்கு காணலாம்என்று ஒரு செய்யுளை திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்ததுமற்றும் அவனுக்கு வந்த கனவின் மூலமாக விமானம் இருந்த இடத்தைக் கண்டுபிடித்தான்விமானத்தின் கருவறையைச் சுற்றிக் கோயில் எழுப்பினான்.

 

 

 

 

 

இலக்கியங்களில் திருவரங்கம் கோயில்:

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

சங்கம் மறுவிய காலத்தில்மதுரகவி ஆழ்வார் நீங்கலாக அனைத்து ஆழ்வார்களும் (கிபி 5ம் நூற்றாண்டிலிருந்து 9ம் நூற்றாண்டு வரைதிருவரங்கத்தானை பற்றி பாடியுள்ளனர்நாலாயிய திவ்விய பிரபந்தத்தில், 247 பாசுரங்கள் திருவரங்கத்தான் மேல்தான்.

·         பெரியாழ்வார் 35

·         நம்மாழ்வார் 12

·         ஆண்டாள் 10

·         பேயாழ்வார் 2

 

 

 

 

 

விழாக்கள்:

 

 

 

1001 கலச அபிஷேகம், மார்கழி மாதத்தின் வளர்பிறை ஏகாதேசியானது 'வைகுண்ட ஏகாதேசிஎன்று அழைக்கப்படுகிறதுஇந்த விழா திருவரங்கத்தில் 21 நாட்கள் கொண்டாப்படுகின்றன.

 

 

 

 

 

 

 

 

இத்தலத்தில் மூன்று பிரமோற்சவங்கள் நடைபெறுகின்றனஆதி பிரம்மோட்சவம்பூபதி திருநாள் என்று இந்த பிரமோட்சவங்கள் அழைக்கப்படுகின்றன.