சகஸ்ரவடுகர்

 

 

 

 

 

 

34 ஆண்டுகளாக ஆன்மீக ஆராய்ச்சியாளராக இருந்து,பல்லாயிரக்கணக்கான மக்களின் வாழ்வில் நிம்மதி ஒளியேற்றியவர் நமது ஆன்மீக குரு திரு.சகஸ்ரவடுகர் அவர்கள்!

 

 

இவரது ஆன்மீக ஆராய்ச்சிமுடிவுகள் இன்று பல ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு கர்மவினைகள் நீங்கக் காரணமாக அமைந்திருக்கின்றன;

 

சராசரி மக்களுக்கு ஆன்மீகம் பற்றிய உண்மைகளை உரைக்கின்றன;இவரது ஆன்மீக ஆலோசனைகளை சிறிதும் மாறாமல் பின்பற்றியவர்கள் மிகக் குறுகிய காலத்திலேயே தமது பல வருட சிக்கல்களிலிருந்து மீண்டுள்ளனர்.

 

பொருளாதார நெருக்கடி,முன் ஜன்ம கர்மவினை,முன்னோர்கள் கர்மவினை,குடும்பக் குழப்பம்,உறவாடிக் கெடுப்பவர்களின் நயவஞ்சகம்,உறவினர்கள் செய்யும் நிழலான சதிகள்,கணவன் மனைவிக்குள் உருவாகும் உறவுச் சிக்கல்கள் போன்றவைகளுக்கும்,

 

ஆன்மீக வாழ்க்கையில் முன்னேற விரும்புவோருக்கும்,ஆன்மீக முன்னேற்றங்களில் பல படிநிலைகள் இருக்கின்றன;ஒவ்வொரு நிலையில் ஏற்படும் தடுமாற்றம் அல்லது சந்தேகங்களுக்கும் இவரது ஆலோசனைகள் சரியாகவே இருக்கின்றன.

 

தமிழ்நாட்டில் தற்போது வாழ்ந்து வரும் பலர் முற்பிறவிகளில் சித்தராகவோ,சித்தர்களின் சீடராகவோ இருந்துள்ளனர்.அவர்களின் கர்மவினைகள் தீர்ந்து மீண்டும் உயர்ந்த வாழ்க்கை வாழ விரும்புவோருக்கும் சரியான வழிகாட்டியாக நமது ஆன்மீககுரு திரு.சகஸ்ரவடுகர் அவர்கள் திகழுகிறார்.

 

 

 

 

 

 

 

திரு.சகஸ்ரவடுகர் அவர்கள் 34 ஆண்டுகளுக்கும் மேலாக ஆன்மீக ஆராய்ச்சியாளராக செயல்பட்டுவருகிறார்.இவரது விஷேசமான சுபாவத்தை நேரில் சந்தித்துப் பேசுவதால் மட்டும் புரிந்துகொள்ளமுடியாது;பழகியபின்னரே உணர்ந்துகொள்ளமுடியும்.

 

கி.பி.2003 டூ 2004 ஆம் ஆண்டில் பாண்டிச்சேரி முதலமைச்சரால் ரமணர் விருது இவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

 

 

கி.பி.2005 டூ 2006 ஆம் ஆண்டில் தஞ்சாவூரில் வாழ்ந்துவரும் ராஜராஜசோழனின் வழிவம்சத்தவர்களால் மகாவீர் விருது வழங்கப்பட்டுள்ளது.

 

 

கி.பி.2006 டூ 2007 ஆம் ஆண்டில் சென்னையில் எம்.ஜி.ஆர்.பல்கலைக்கழகத்தில் உலகசித்த தத்துவ மாநாடு நடைபெற்றது.அந்த மாநாட்டில் திரு.ராம் மோகன்  என்பவரால் மகா சித்தர் என்ற விருது வழங்கப்பட்டுள்ளது.

 

பெங்களூர் திரு.நாராயணசுவாமிகளால் திருக்குற்றாலத்தில் கி.பி.2008 டூ 2009 இல் ஆன்மீகச் செம்மல் என்ற விருது வழங்கப்பட்டுள்ளது.

 

5.9.2009 அன்று புளியங்குடி D,S.P.அவர்களால் ஆன்மீக சேவைக்கான விருது வழங்கப்பட்டுள்ளது. இது தவிர ஏராளமான ஆன்மீக விருதுகளும் இவருக்கு,இவரது ஆன்மீகச் சேவையைப் பாராட்டி வழங்கியிருக்கின்றனர்.

 

 

 

 

 

  ஓம் சிவ சிவ ஓம் 

 ஓம் சிவ சிவ ஓம் 

 ஓம் சிவ சிவ ஓம்