நமக்கு வளமான வாழ்க்கையை அருளும் பைரவர் வழிபாடு!!!

 

 

சிவபெருமான் ஒருபோதும் அவதாரம் எடுப்பதில்லை;ஆனால்,தேவைப்படும்போது தனது சக்தியை அனுப்புகிறார்.அப்படி சிவனின் மனதிலிருந்து உருவான சிவசக்தியே பைரவர் ஆவார்.நவக்கிரகங்களை தனது காலச் சக்கரத்தால் இயக்கிவருபவர் பைரவரே! பெரும்பாலான சிவாலயங்களில் காவல் தெய்வமாக இருப்பவர் பைரவர் ஆவார்.ஒரு சில வைஷ்ணவ ஆலயங்களிலும் காவல் தெய்வமாக ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் இருக்கிறார்.பைரவர்களில் மொத்தம் 64 அம்சங்கள் இருக்கிறார்கள்.கோவிலில் வைத்து வழிபடத் தக்கவர்  கால பைரவர் ஆவார்.வீட்டில் வைத்து வழிபடத்தக்கவர்         ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவரே!!!

 

 

 

செல்வ வளத்துக்கு மஹாவிஷ்ணு,மஹாலட்சுமி,குபேரன் இவர்களை வழிபட வேண்டும்;பல வருடங்களாக இப்படி வழிபட்டுவந்தாலும்,ஒரு சிலருக்கே செல்வ வளம் விரைவில் கிடைக்கிறது.பெரும்பாலானவர்களுக்கு விரைவான பணக்கஷ்டம் நீங்குவதில்லை;இதற்கான காரணத்தை ஜோதிட ரீதியாக மட்டுமே கண்டுபிடிக்கமுடிந்தது. கடுமையான கர்மவினைகள் ஒருவருக்கு இருக்கும்போது,அவர்கள் மஹாவிஷ்ணுவை வழிபடும்போது பல ஆண்டுகளுக்குப் பிறகே அவர்களுக்குச் செல்வ வளம் உண்டாகிறது.கர்மவினையை நீக்கும் சக்தி எல்லாக் கடவுளர்களுக்கும் இருக்கும்போது, விரைவாக நீக்கும் ஆற்றல் உள்ள தெய்வம் பைரவருக்கே இருக்கிறது.

 

சரி,எப்படி பைரவரை வழிபட வேண்டும்?

 

 

முதலில் அசைவம் சாப்பிடுவதைக் கைவிட வேண்டும்.அசைவம் சாப்பிடுபவர்களுக்கு எந்த ஒரு கடவுளின் அருட்கடாட்சமும் கிடைக்காது .அடுத்தபடியாக ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் வழிபாடு செய்ய வேண்டும்.வீட்டில் செய்வதற்கு என்று சில விதிமுறைகள் உண்டு.மாதம் ஒருமுறை தேய்பிறை அஷ்டமியன்று ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் சன்னதிக்குச் சென்று,அந்த நாளில் வரும் இராகு காலத்தில் வழிபாடு செய்ய வேண்டும்.இப்படி குறைந்தது 12 தேய்பிறை அஷ்டமிகளுக்கு வழிபாடு செய்தாலே நமது கடுமையான கர்மவினைகள் நீங்கி,மகத்தான செல்வ வளம் கிடைத்துவிடும்.அரசியலில் இருப்பவர்கள் மாபெரும் அரசியல் வெற்றியைப் பெறுவார்கள்;நீண்டகாலக் கடன்கள் தீர்ந்துவிடும்; நீண்டகாலமாக வராத கடன் வசூலாகிவிடும்;கர்மநோயால் அவதிப்படுபவர்கள் நோயின் தீவிரம் குறைவதை உணருவார்கள்.

 

 

ஏன் தேய்பிறை அஷ்டமியன்று ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண் ஆகர்ஷண பைரவரை வழிபட வேண்டும்?

 

 

மனிதர்களாகிய நமக்குச் செல்வ வளத்தை அள்ளித்தருவது அஷ்டலட்சுமிகள் ஆவர். அவரவர் முன் ஜன்ம பூர்வபுண்ணியத்துக்கு ஏற்ப நமக்கு வேலை அல்லது தொழில் அல்லது சேவை மூலமாக தினமும் பணம் கிடைத்துக்கொண்டிருக்கிறது.இப்படி நமக்குச் செல்வ  வளத்தை தருவதால்,அஷ்ட லட்சுமிகளின் செல்வ ஆற்றல் குறைகிறது.எனவே,ஒவ்வொரு தமிழ் மாதமும் வரும் தேய்பிறை அஷ்டமியன்று வரும் இராகு காலத்தில் அஷ்டலட்சுமிகளும் பூமியில் இருக்கும் ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண     ஆகர்ஷண பைரவர் சன்னதிக்கு வந்து வழிபாடு செய்கின்றனர்.அவ்வாறு வழிபாடு செய்வதை ஆன்மீக ஆராய்ச்சியாளர் திரு.சகஸ்ரவடுகர் ஐயா 30 ஆண்டுகளுக்கு முன்பு கண்டறிந்துள்ளார்.நாமும் அதே நேரத்தில் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் சன்னதிக்குச் சென்று வழிபட்டால்,நமக்கு விரைவான செல்வச் செழிப்பு உண்டாகும் என்பது அனுபவ உண்மை.

 

 

ஆன்மீக அரசு மற்றும் ஆன்மீகக்கடலுக்குத் தொடர்புகொண்டு ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் போட்டோவையும்,வழிபாட்டுமுறையையும் தட்சிணை கொடுத்து வாங்கிக்கொண்டு,வீட்டில் வைத்து தினமும் வழிபாடு செய்துவரவும்.யார் வழிபாடு செய்கிறார்களோ,அவர்கள் மட்டும் அசைவம் சாப்பிடாமல் இருந்தால் போதுமானது.இப்படி ஒரு நாளுக்கு ஒரு முறை வீதம் குறைந்தது 6 மாதங்களுக்கு வழிபட்டு வந்தால்,பணப்பிரச்னைகள் தீரும்;செல்வச் செழிப்பு அதிகரிக்கும்;வராத கடன் வசூலாகிவிடும்;கொடுக்க வேண்டிய கடனை கொடுக்குமளவுக்கு வருமானம் படிப்படியாக உயரும்;அரசியலில் ஈடுபட்டிருப்போர் முன்னேற்றத்தை அடைவார்கள்;நோயாளியாக இருப்பவர்கள் நோயிலிருந்து மீள்வார்கள்.

 

 

ஒவ்வொரு தேய்பிறை அஷ்டமியன்றும் பின்வரும் நகரங்களில் இருக்கும் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் சன்னதிகளுக்கு இராகுகாலத்தில் வழிபட வேண்டும்.அவருடைய மூலமந்திரத்தை 330 தடவை ஜபிக்க வேண்டும்.அவ்வாறு ஜபித்துவிட்டு,நேராக அவரவர் வீடுகளுக்கு மட்டும் செல்ல வேண்டும்.கோவில்களில் தரப்படும் எந்த ஒரு பானகத்தையும்,மோரையும் கோவிலுக்குள் நுழையும்போதும்,கோவிலில் வழிபாடு முடித்துவிட்டு வெளியேறும்போதும் ஒருபோதும் அருந்தக் கூடாது.அப்படி அருந்தினால்,நீங்கள் சொர்ண பைரவரிடம் வாங்கிய வரம்,உங்களோடு வராது.

 

 

1.திண்டுக்கல் அருகில் இருக்கும் தாடிக்கொம்பு

 

2.திருச்சி மலைக்கோட்டை அருகில் இருக்கும் பெரியகடைவீதி

 

3.வயிரவன் பட்டி(பிள்ளையார்பட்டி அருகில்) 700 ஆண்டு பழமையான கோவில் சித்தர்களே வந்து வழிபட்ட      ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் இவர்!!!

 

4.இலுப்பைக்குடி(காரைக்குடி அருகில்)சித்தர்கள் காலம்முதல் இருக்கிறது.கொங்கண சித்தரின் ஜீவசமாதி இது.

5.சிதம்பரம்

6.திருச்சி டூ புதுக்கோட்டை சாலையில் திருச்சியிலிருந்து 45 கி.மீ.தூரத்தில் இருக்கும் தபசுமலை

7.காஞ்சிபுரம் அருகில் இருக்கும் அழிபடைதாங்கி

8.சென்னை அருகில் இருக்கும் வானகரம்

9.சென்னையின் ஒரு பகுதியான பள்ளிக்கரணை பஞ்சாயத்து போர்டு அருகில் இருக்கும் ஒரு திருமண மண்டபம்

10.சென்னை படப்பையில்  இருக்கும் ஸ்ரீஜெயதுர்கா பீடம்

11.திருஅண்ணாமலை கோவிலின் உட்பிரகாரம்

12.திரு அண்ணாமலையிலிருந்து  காஞ்சி(காஞ்சிபுரம் அல்ல) செல்லும் சாலையில் 12 கி.மீ.தொலைவில் இருக்கும் காகா ஆசிரமம்(சித்தர்களின் முறைப்படி ஸ்தாபிக்கப்பட்டது)

13.(விரைவில்)பெரம்பலூர்

 

ஓம் சிவ சிவ ஓம் 

ஓம் சிவ சிவ ஓம் 

ஓம் சிவ சிவ ஓம் 

 

அட்ட வீரட்டானம் : அய்யன் பைரவர் வழிபாடு

 


பைரவரின் எட்டு படைவீடுகளுக்கு அட்ட வீரட்டானங்கள் என்று பெயர்.பைரவர் வீரதீரச் செயல்கள் புரிந்த இடங்களாக இருப்பதால் இவை இந்தப் பெயர் பெற்றன.இந்த அட்ட வீரட்டானங்களுக்குச் சென்று பைரவரை முறையாக வழிபாடு செய்தால் மட்டுமே பைரவரின் திரு அருள் முழுமையாக ஒருவருக்குக் கிடைக்கும் என்பது நிரூபிக்கப்பட்ட பைரவ ரகசியங்களுள் ஒன்று !!!

தேவாரம் அருளிய நால்வரில் ஒருவராம் என்னப்பர் அப்பர் பெருமான் தேவாரத்தில் அட்ட வீரட்டானத்தின் பெருமையை விவரிக்கிறார்.

 

 

காவிரியின் கரைக்கண்டி வீரட்டானம்

கடவூர் வீரட்டானம்,காமருஞ்சீர் அதிகை

மேவீய வீரட்டானம்,வழுவை வீரட்டம்

வியன்பறியல் வீரட்டம்,விடையூர் திக்கிடமாம்

கோவல்நகர் வீரட்டம்,குறுக்கை வீரட்டம்

கோத்திட்டைக்குடி வீரட்டானமிரை கூறி

நாவில் நவின்று உரைப்பார்க்கு நணுகச் சென்றால்

நமன் தமரும் சிவன் தமர் என்று அகல்வர் நன்கே!

 

திருக்கண்டியூர், திருக்கடவூர்,திருவதிகை,வழுவூர்,திருப்பறியலூர்,திருக்கோவிலூர்,திருக்குறுக்கை,திருவிற்குடி ஆகிய தலங்களில் சென்று சிவலிங்கத் திருமேனியாக எழுந்தருளியிருக்கும் பைரவப் பெருமானை வழிபடும் அன்பர்களை எமன் எக்காலமும் நெருங்கிடான்.இவர்கள் சிவபெருமானுக்கு நெருக்கமானவர்கள் என எமன் இவர்களைக் கண்டு அஞ்சி வணங்கி ஒதுங்குவான்.

 

 

1.திருக்கண்டியூர்

இத்திருத்தலம் தஞ்சை திருவையாறு சாலையில் திருவையாற்றிற்கு மிக அருகில் அமைந்திருக்கிறது.இத்திருத்தலம் ஆதி வில்வாரண்யம் என வழங்கப்படுகிறது.

இறைவனின் திருநாமம்  பிரமசிர கண்டீஸ்வரர்.பிரம்மனின் அகந்தையை அழித்து அருள் கொடுத்த இடம்.இத் தலத்திற்கு வந்து பக்தியோடு வழிபாடு செய்தால்,மறுபிறவியில்லை;திருமணத்தடை நீக்கும் பரிகார ஸ்தலமாக விளங்குகிறது.இந்தக் கோவிலின் சுற்றுப்பிரகாரத்தில் வடமேற்குத் திசையில் பைரவரின் தனி சன்னதி உள்ளது.

ஞாயிறு,செவ்வாய்க்கிழமைகளில் வழிபாடு செய்வது சிறப்பு.இந்த நாட்களில் இலுப்பையெண்ணெய்,புங்கெண்ணெய்,நல்லெண்ணைய் கலந்து 8 விளக்கேற்றி மூலவருக்கு அர்ச்சனை,அபிஷேக ஆராதனை செய்ய வேண்டும்.

திரு மூலப்பெருமானும்

கொலையிற் பிழைத்த பிரசா பதியைத்

தலையத் தடிந்திட்டுத் தானங்கியிட்டு

நிலையுல குக்கிவன் வேண்டுமென் றெண்ணித்

தலையைப் பரிந்திட்டு சந்தி செய்தானே(திருமந்திரம் 340)

என்று திருமந்திரத்தில் விளக்கியுள்ளார்.இதுவே நான்முகனின் தலையை கொய்த வரலாற்றோடு தொடர்புடையது ஆகும்.

சுவாதிஷ்டமாகிய சக்கரத்திலிருந்து விந்து நாதம் செய்து கொண்டிருந்த அலையும் மனமாகிய நான்முகனை(மனம்,புத்தி,சித்தம்,அகங்காரம் என்ற நான்கு முகம்) ,விந்து நீக்கம் செய்வதைத் தடுத்து,சுத்தக்கினியால் இறையருளால் விந்து சக்தியை நிலைப்படுத்தி,மனதின் உலகச் செயல்களை செயல்படுமாறு செய்து குறும்பை,அகங்காரத்தை நசுக்கிக் காத்து அருள் செய்தார் பைரவர்.

 

 

2.திருக்கோவிலூர்

திருக்கோவிலூர் கோவல்நகர் வீரட்டம்,திருக்கோவிலூர் நகருக்குள்ளேயே தென்பெண்ணை நதி தீரத்தில் அமைந்துள்ளது.

இறைவனின் திருநாமம் அந்தகாசுர சம்ஹார மூர்த்தி.அன்னை சிவானந்தவல்லி என்ற பெரிய நாயகி.

ஆலயத்தில் ஈசானிய மூலையில் பைரவர் தனி சன்னிதியில் அருள் பாலிக்கிறார்.ஞாயிறு,வெள்ளி,வியாழக்கிழமைகளில் வழிபாடு செய்தல் சிறப்பு.

இங்குள்ள மஹாகணபதி சன்னதியில் தான் ஸ்ரீமஹா கணபதியின் வேண்டுகோளுக்கிணங்க அவ்வையார் விநாயகர் அகவலை அருளினார்.

இத்தலத்தில் அபிஷேகம் செய்தால்,நல்ல குருவின் திருவருள் முழுமையாக அமையும்.சோழச் சக்கரவர்த்தியாகத் திகழ்ந்த ராஜராஜ சோழன் பிறந்த ஊர் இது!!! ஸ்ரீராஜராஜசோழன்        ஸ்ரீகருவூரார் சித்தரின் அருளின் படி பைரவரை வணங்கி ஈடில்லாத புகழ் பெற்றார்.அவரது சாம்ராஜ்ஜியம் ஆசியா முழுவதும்,ஆஸ்திரேலியா வரையிலும் பரவியிருந்தது.

கருத்துறை அந்தகன் தன் போல் அசுரன்

வரத்தின் உலகத் துயிர்களை எல்லாம்

வருத்தஞ் செய்தானென்று வானவர் வேண்டக்

குருத்துயர் சூலங்கை கொண்டு கொன்றானே= திருமூலரின் திருமந்திரம் 339

(மனதில் பொறாமை,காமம் முதலான தீய எண்ணங்கள் இறை வழிபாடு விடாமல் செய்து வரும்போதுதான் எழுச்சி பெறும்;அவ்வாறு எழுச்சி பெற்று நம்மை ஆன்மீக முன்னேற்றத்தைத் தடுக்கும்;இப்படி காம,பொறாமை எண்ணங்கள் தோன்றிடக் காரணம் நான் என்ற அகங்காரம் தான்!!!இந்த எண்ணங்களை முறியடிக்க நாம் பைரவரை விடாமல் தொழுதால்,மனதில் மெய்ஞான எண்ணங்களை தோற்றுவித்து,நமது மனதில் தோன்றும் தேவையில்லாத எண்ணங்களை அழித்து,நல்லெண்ணத்தால் மெய் இறைஞான நிலையை பைரவரே உருவாக்கிவிடுவார்.

 

 

 

3.திருவதிகை

பண்ருட்டியிலிருந்து ஒரு கி.மீ.தூரத்தில் அமைந்துள்ள திருத்தலம் இது.இறைவனின் திருநாமம் வீரட்டானேஸ்வரர்.ஈசானிய மூலையில் இங்கு பைரவர் எழுந்தருளியுள்ளார்.திரிபுரம் எரித்த இடம் இதுவே! வித்யுமாலி,தாரகாசுரன்,கமலாக்ஷன் ஆகிய அசுரர்களை அழித்த இடம் இது.வெள்ளி,புதன் கிழமைகளில் இங்கு வழிபடுவது சிறப்பாகும்.தீராத நோய்கள் தீர இங்கு வந்து வழிபட வேண்டும்.

சுந்தரமூர்த்தி நாயனார் திருவடி தீட்சை பெற்ற இடம் இது.சமண சமயத்திலிருந்து சைவ சமயத்திற்கு திரும்பிய திருநாவுக்கரசரின் தீராத குன்ம வியாதியை நீக்கி தடுத்தாண்ட தலம் இது.உடல் நோய்களும்,பிறவி நோய்களும் நீங்கும் இடம் இதுவே! நமது கர்மத்தடைகளை நீக்கி,யோக மற்றும் ஞான நிலைகளை வழங்கும் திருத்தலமும் இதுவே தான்!!!

அப்பணி செஞ்சடை ஆதிபுராதனன்

முப்புரஞ்செற்றனன் என்பர்கள் மூடர்கள்

முப்புரமாவது மும்மல காரியம்

அப்புரம் எய்தமை யாரறிவாரே! (திருமூலரின் திருமந்திரம் 343)

காமம்(உடல் இச்சை மட்டும் காமம் அல்ல;பேராசை;பணத்தாசை;பொன்னாசையும் தான்!), கோபம்,தாபம்(நீண்ட கால ஏக்கம்) ஆகிய மும்மலங்களை(நம்மை ஆன்மீக வாழ்க்கையில் வளரவிடாமல் தடுக்கும் கழிவுகள் அனைத்தும் மலம் ஆகும்)எரித்து நமது மூலாக்கினியை ஞானக்கினியால் சேர்த்து யோக சித்தி,ஞான சித்தி அருளும் சிறப்பான திருத்தலமே இந்த திருவதிகை ஆகும்.

 

 

4.திருப்பறியலூர்

மாயவரம் திருக்கடையூர் சாலையில் 8 கி.மீ.தூரத்தில் செம்பொனார் கோவில் இருக்கிறது.இந்த செம்பொனார் கோவிலில் இருந்து 2 கி.மீ.தூரத்தில் திருப்பறியலூர் இருக்கிறது.

சுவாமியின் திருநாமம் வீரட்டேஸ்வரர்.அம்பாளின் பெயர் இளங்கொம்பனையாள். அகந்தை கொண்ட தட்சனை அழித்த இடம் இது.தட்சன் யாகம் செய்த இடமே  தற்சமயம் கோவிலின் குளமாக இருக்கிறது.இங்கு வந்து வழிபட்டால்,தீராத கடன்கள் தீரும்;பூர்வ ஜென்மங்களில் ஏற்பட்ட சாபங்கள்,தோஷங்கள்  ஆகியவற்றை நீக்கி,நல்வாழ்வு தருமிடம் இதுவே!!!

 

 

5.திருவிற்குடி

திருவாரூர் நாகூர் சாலையில் திருப்பயந்தங்குடியிலிருந்து பிரிந்து 2கி.மீ.தூரம் சென்றால் திருவிற்குடியை அடையலாம்.

மேற்கு நோக்கிய திருக்கோவிலாக இது அமைந்திருக்கிறது.இந்தக் கோவிலின் இறைவனின் திருநாமம் ஸ்ரீஜலந்தராசுரவத மூர்த்தி.

திருமால் சுதர்ஸன சக்கரம் வேண்டி இறைவனுக்கு துளசியால் அர்ச்சித்து அருளையும்,சுதர்ஸன சக்கரத்தையும் பெற்றார்.எனவே,இங்கு சிவபெருமான் வடிவில் இருக்கும் பைரவருக்கு துளசியால் அர்ச்சனை செய்யப்படுகிறது.இங்கு திருமால் தனது தேவியான லட்சுமியோடு இருக்கிறார்.

பெரும் வறுமை நீங்கிட அல்லது மகத்தான செல்வ வளம் வேண்டுவோர்,இங்கு

16 வெள்ளிக்கிழமைகளுக்கு வர வேண்டும்.வந்து விநாயகர்,சுவாமி,அம்பாள்,இலக்குமி,பைரவர் ஆகியோருக்கு அபிஷேகம் ஆராதனைகள் செய்ய வேண்டும்;இதைச் செய்ய இயலாத அளவுக்கு பொருளாதாரத்தில் சாதாரண நிலையில் இருப்போர் அர்ச்சனை செய்தால் போதும்.இவ்வாறு செய்து முடித்தால், வறுமை நீங்கும்;செல்வ வளம் பெருகும்.

குழந்தைப்பாக்கியம் இல்லாதவர்கள் 27 செவ்வாய்க்கிழமைகளுக்கு மேற்கூறியவாறு வழிபாடுகள் செய்து விட்டால்,தடைகள் எதுவாக இருந்தாலும் அவை நீங்கி புத்திரபாக்கியம் பெறுவது நிச்சயம்.

திருமணமாகாதவர்கள் தங்களால் இயன்ற அளவுக்கு தங்கக் காசுகளை சுவாமிக்கு காணிக்கையாக வேண்டி ஒன்பது மாதங்கள்(வெள்ளி அல்லது தேய்பிறை அஷ்டமியன்று) வேண்டிக்கொள்ள ,நல்ல முறையில் திருமணம் நடக்கும்.

தொழிலில் நசிந்தோர்கள்,இலாபமில்லாதவர்கள் இங்கு பைரவருக்கு அபிஷேகங்கள் செய்துவர அற்புதமான பலன்களை அனுபவத்தில் உணரமுடியும்.நீங்கள் இவ்வாறு வழிபாடுகள் செய்து வர,நாய்கள் உங்களைத் தொடர்ந்து வருவதையும் அனுபவத்தில் காணலாம்.

எங்கும் பரந்தும் இரு நிலந்தாங்கியும்

தங்கும் படித்தவன் தாளூணர் தேவர்கள்

பொங்கும் சினத்துள் அயன் தலை முன்னற

அங்கு அச்சுதனை உதிரங்கொண்டானே(திருமூலரின் திருமந்திரம் 341)

 

 

6.வழுவூர்

மயிலாடுதுறையிலிருந்து திருவாரூர் செல்லும் சாலையில் 8 கி.மீ.தூரம் சென்றதும்,வலப்புறம் திரும்ப வேண்டும்.அங்கிருந்து அரை கி.மீ.தூரத்தில் இருப்பது வழுவூர் ஆகும்.

இறைவன் கிருத்திவாஸர் என்ற திருநாமத்தோடு அருள்பாலித்துவருகிறார்.

அகங்காரத்துடன் தான் என்ற அகந்தையில் இருந்த முனிவர்களின் ஆணவத்தை அழித்து,திருக்காட்சி கொடுத்து அவர்களுக்கு ஞானச் செல்வம் தந்தருளும் இடம் இது.

ஸ்ரீஐயப்பன் அவதரித்த இடமும் இதுவே!!! எத்தனையோ பேர்கள் தியானம் செய்கிறேன்;தவம் செய்கிறேன் எனக்கு எந்த முன்னேற்றமும் இல்லை என புலம்புபவர்கள்,இங்கு வருகைதந்து,இறைவனை வழிபட வேண்டும்.மாதம் ஒரு நாள் வீதம் பத்து நாட்களுக்கு இங்கிருக்கும் மூலவரின் முன்பாக அமர்ந்து தியானம் செய்ய வேண்டும்;இவ்வாறு செய்வதால்,அவர்களின் தியானம் சித்திக்கும்;கூடவே இறைவனின் திருவருட்காட்சியும்(தரிசனம்!!!) பெற்று இறைமார்க்கத்தில் முன்னேறமுடியும்.

இத்தலத்தில் அமர்ந்து தியானம் செய்து வந்தால், ‘பார்க்கும் இடமெல்லாம் நீக்கமற நிறைந்த பரிபூரண ஆனந்தமே’ என்னும் வாக்கினை அனுபவபூர்வமாக உணரலாம்.

இங்கும் ஈசான மூலையில் பைரவர் எழுந்தருளியுள்ளார்.இவருக்கு அருகிலேயே சனீஸ்வரர் அமர்ந்திருக்கிறார்.

ஏழரைச்சனி,அஷ்டமச்சனி,கண்டச்சனி,அர்த்த அஷ்டமச்சனி(4 ஆம் இடத்துச்சனி),சனி திசையால் பாதிப்புக்கு உள்ளானவர்கள் 8 சனிக்கிழமைகளுக்கு இங்கு வர வேண்டும்;அவ்வாறு வந்து,இவரது சன்னிதியில் 8 தீபம் நல்லெண்ணெய் ஊற்றி,ஏற்ற வேண்டும்.அதன்பிறகு அபிஷேகம் ஆராதனை செய்ய வேண்டும்;முடியாதவர்கள் அர்ச்சனை செய்து வர சனிக்கிரகத்தின் பாதிப்புகள்,தொல்லைகள் நீங்கி,எல்லையில்லாத மனநிம்மதியைப் பெறலாம்.

 

 

7.திருக்குறுக்கை

மயிலாடுதுறையிலிருந்து மணல்மேடு சாலையில் கொண்டல் என்ற இடம் வந்ததும்,பிரிந்து செல்ல வேண்டும்.அங்கிருந்து 3 கி.மீ.சென்றால் திருக்குறுக்கை வரும்.

இறைவனின் திருநாமம் வீரட்டேஸ்வரர்.இறைவியின் திருநாமம் ஞானாம்பிகை ஆகும்.காமனை எரித்த இடம் இதுவே!!!

தியானம் செய்பவர்கள்,இறை நெறி செல்பவர்கள் இங்கு வந்து வழிபட்டால் சுழுமுனை கூடி,வாக்கு சித்தியும் தவ உயர்வும் பெறமுடியும்.

குழந்தை இல்லாதவர்கள் இங்கு வந்து 8 வியாழன் அல்லது 8 செவ்வாய்க்கிழமை அல்லது மாதாந்திர வியாழன் அல்லது மாதந்திர செவ்வாய்க்கிழமை என்று  8 முறை வழிபட்டு,அன்னதானம் ஒவ்வொரு தடவையும் செய்ய வேண்டும்.இவ்வாறு செய்தால் கண்டிப்பாக மழலைச் செல்வம் பெறுவார்கள்.

இருந்த மனத்தை இசைய இருத்திப்

பொருந்தி இலிங்க வழியதுபோக்கி

திருந்திய காமன் செயலழித்தங்கண்

அழுந்தவ யோகங்கொறுக்கை அமர்ந்ததே(திருமூலரின் திருமந்திரம் 346)

இந்தக் கோவிலுக்கு வந்துவிட்டு,வீடு சென்றவர்களுக்கு கனவில் பைரவர் அல்லது கூட்டமாக நாய்களையோ காண்பார்கள்.ஸ்ரீபைரவரின் திருவருளுக்கு இது ஒரு சான்று ஆகும்.

 

 

8.திருக்கடவூர்

திருக்கடையூர் என்ற திருக்கடவூர் ஆதியில் வில்வாரண்யம் என்ற பெயரில் விளங்கியது.

அமிர்தகடேஸ்வரர்,அபிராமி என்ற பெயர்களில் அப்பாவும் அம்மாவும் அருள்பாலித்து வருகின்றனர்.எமனை சம்ஹாரம் செய்து மார்க்கண்டேயரைக் காத்தருளிய இடம் இதுவே!!!

இதய நோயில் வருந்துவோர்கள்,ஆயுளுக்கு கண்டமுள்ளவர்கள் இங்கு வந்து வில்வத்தால் அர்ச்சனை செய்ய வேண்டும்.அதன்பிறகு தியானம் செய்ய வேண்டும்.இவ்வாறு 8 சனிக்கிழமைகளுக்குச் செய்து வந்தால்,மரண பயம் அகன்று நீடூழி வாழலாம்.

பிரம்ம தேவருக்கு உபதேசம் செய்த இடம் இது.

மூலத்துவாரத்து மூளும் ஒருவனை

மேலைத் துவாரத்து மேலுற நோக்கி முற்காலுற்று

காலனைக் காய்ந்தங்கி யோகமாய்

ஞாலக் கடவூர் நலமாய் இருந்ததே(திருமூலரின் திருமந்திரம் 345)

இது சித்தர்கள் தவம் செய்த பூமி ஆகும்.இங்கு ஈசான மூலையில் அமர்ந்திருக்கும் பைரவரை ஒரு நாளுக்கு ஒரு மணி நேரம் வீதம்  8 நாட்களுக்கு தவம் செய்து,வில்வம் மற்றும் செண்பகப் பூக்களால் அர்ச்சனை செய்து வந்தால்,அஷ்டமாசித்திக்குச் செல்ல நமக்கு நல்ல குருவை,சித்தரை அடையாளம் காட்டும்.இந்த ஊருக்கு 2 கி.மீ.தொலைவில் திருக்கடவூர் மயானம் என்னும் இடத்துக்குச் சென்று பிரம்மபுரீஸ்வரர்,மலர்க்குழல் மின்னம்மை தம்பதியராக இருக்கும் அருள்ஞான பெற்றோர்களை வழிபட,மெய்ஞானம் கைகூடும்.

கொன்றாய் காலனை; உயிர் கொடுத்தாய் மறையோனுக்கு,

மான் கன்றாருங் காவாக்கடவூர் திருவீரட்டத்துள்

என் தாதை பெருமான் எனக்கு யார் துணை நீயலதே என்பது சுந்தரரின் தேவாரப்பாடல் ஆகும்.

 

ஓம் சிவ சிவ ஓம் 

ஓம் சிவ சிவ ஓம் 

ஓம் சிவ சிவ ஓம் 

 

 

 

 

 

 

 

 

 

 


        

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

அஷ்ட பைரவர்களும் - அவர்களின் வாகனங்களும்

 

 

 

அஷ்ட பைரவர்கள்: 

 1. அசிதாங்க பைரவர்
 2. ருரு பைரவர்
 3. சண்ட பைரவர்
 4. குரோத பைரவர்
 5. உன்மத்த பைரவர்
 6. கபால பைரவர்
 7. பீஷண பைரவர்
 8. சம்ஹார பைரவர்

மேலும், வடுக பைரவர், ஸ்வர்ணாகர்ஷண பைரவர் என இரு நிலைகளும் உள்ளன.  வடுக பைரவரின் உருவங்களை நான்கு கரங்களுடனும், எட்டு கரங்களுடனும் காணலாம்.எட்டு பைரவர்களின் வாகனங்கள்:

 

 1. அசிதாங்க பைரவர் -அன்ன வாகனம்
 2. ருரு பைரவர்– காளை வாகனம்
 3. சண்ட பைரவர்– மயில் வாகனம்
 4. குரோத பைரவர் -கருட வாகனம்
 5. உன்மத்தபைரவர் -குதிரை வாகனம்
 6. கபால பைரவர் -யானை வாகனம்
 7. பீஷண பைரவர் -சிம்ம வாகனம்
 8. சம்ஹார பைரவர் -நாய் வாகனம்

 

 

ஓம் சிவ சிவ ஓம் 

ஓம் சிவ சிவ ஓம் 

ஓம் சிவ சிவ ஓம் 

 

அஷ்ட பைரவர்களும் அவர்களின் கோவில்களும்

 

 

 

 


 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

அஷ்ட பைரவர்களின் கோவில்கள் காசியில் மட்டுமே அமைந்திருப்பதாகத் தெரிகிறது.காசியில் அனுமன் கட்டில் ருரு பைரவர் கோவிலும்,துர்கா மந்திரில் சண்ட பைரவர் சன்னதியும்,விருத்த காளேஸ்வரர் ஆலயத்தில் உள்ள அமிர்த குண்டத்திற்கு முன்புறம் அசிதாங்க பைரவர் சன்னதியும்,லட் பைரவர் கோவிலில் கபால பைரவர் சன்னதியும்,காமாச்சாவில் வடுக பைரவர் என்ற பெயரில் குரோதன பைரவரும், தேவரா கிராமத்தில் உன்மத்த பைரவர் கோவிலும்,திரிலோசன கஞ்ச் என்ற இடத்தில் சம்ஹார பைரவர் கோவிலும்,காசிபுராவில் பூத பைரவர் என்ற பெயரில் பீஷண பைரவர் கோவிலும் அமைந்திருக்கிறது.இந்த எட்டு ஆலயங்களுக்கும் சென்று வழிபட்டால் அதுவே அஷ்டபைரவர் யாத்திரை எனப்படும்.

 

 

 ஓம் சிவ சிவ ஓம் 

ஓம் சிவ சிவ ஓம் 

ஓம் சிவ சிவ ஓம் 

முக்கிய பைரவர் ஸ்தலங்கள்

முக்கிய பைரவர் ஸ்தலங்கள்

 

 

 

 

வைரவன்பட்டிபிள்ளையார்பட்டி அருகே 1கி.மீ. தொலைவில் உள்ள இத்தலத்தில் பைரவரே தோண்டிய சுனை உள்ளது. இங்குள்ள பைரவர் மகா வரப்பிரசாதி. முறையோடு ஈசன் அம்மையை வணங்கி பின் பைரவரை வழிபட வேண்டும்.

 

திருக்கோஷ்டியூர்பயம் போக்கும் பைரவர்- பிரபலமான கோயில்கள்

பயம் போக்கும் பைரவர்- பிரபலமான கோயில்கள்

இங்கு தெப்பம் நடைபெறுகின்ற திருக்குளத்தில் அருகே உள்ளது டி. வைரவன்பட்டி. இங்குள்ள சிவாலயத்தில் பைரவர் குழந்தை வடிவில் காட்சி தருகிறார். நாய் வாகனம் இவருக்கு இல்லை. இவர் மகப்பேறு தரும் ஆற்றல் உடையவர்.

 

பைரவபுரம்திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டம், வெண்பாக்கம் அருகில் உள்ளது பைரவபுரம். ஸ்வர்ண கால பைரவர் கோயில் இங்கே உள்ளது.

 

சிவபுரம்: இது கால பைரவ ÷க்ஷத்திரமாகும். திருவாயிலுக்கு வெளியே தனிக்கோயிலாக விளங்குகிறது. இத்தலம் கும்பகோணம் -சாக்கோட்டைக்கு கிழக்கே 3 கி.மீ. தொலைவில் உள்ளது.

 

எமனேஸ்வரம்: எமனேஸ்வரமுடையார் கோயிலில் பைரவர் அருள்பாலிக்கிறார். பரமக்குடியிலிருந்து 2 கி.மீ. தொலைவில் உள்ளது.

 

காளையார் கோயில்: இங்கு இரண்டு சன்னதிகளில் பைரவர் உள்ளார். இவரை வணங்கினால் எண்ணியது வெகு விரைவில் நிறைவேறும் என்பது நம்பிக்கை.

 

திருநாகை: நாகைக் காரோணர் சன்னதிக்கு தென்பாகத்தில் புண்டரீக திருக்குளம் அமைந்துள்ளது. இத்தீர்த்தக் கரையில் தென்முகமாய் அமர்ந்திருப்பவரே கால சம்ஹார பைரவ மூர்த்தி.

 

மதுரை: இங்கு இம்மையில் நன்மை தருவார் கோயிலிலும்,  கீழ ஆவணி மூல வீதி புதுமண்டபம் எதிரிலும் தனி சன்னதியாக அருள்பாலிக்கும் கால பைரவர். மதுரையில் புட்டுத்தோப்பு புட்டு சொக்கநாதர் கோயிலில் உள்ள இரட்டை கால பைரவருக்கு இரண்டு நாய் வாகனங்கள் அமைந்துள்ளது. இது போன்ற அமைப்புள்ள பைரவரை காண்பது அரிது.

 

திருவண்ணாமலை: இங்குள்ள அருணாச்சலேஸ்வரர் கோயிலில் உள்ள பைரவர் மிகப்பெரிய அளவில் அருள்பாலிக்கிறார்.

 

திருமயம்: இக்கோயில் புதுக்கோட்டையில் அமைந்துள்ளது. இங்கு மிகப் பெரிய கோட்டை அமைந்துள்ளது. கோட்டையின் கீழ்ப் பகுதியில் காவல் தெய்வமான கால பைரவர் அருள்பாலிக்கிறார். இந்தக் கோட்டையை இவர் பாதுகாப்பதால் கோட்டை பைரவர் எனப்படுகிறார். திருமயம் கோட்டை பைரவர் சக்தி வாய்ந்தவர். இவருக்கு சிதறு காய் அடித்து வழிபட்டால் நினைத்தது நினைத்தபடி நடக்கும் என்பது நம்பிக்கை.

 

பொன்னமராவதி புதுப்பட்டி: இங்குள்ள பைரவர் ஆலயம் சிறப்பானது. நீண்ட நாட்கள் தீராத பிரச்சனை, தாமதமாகும் வழக்குகள் நல்லவிதமாய் முடிய இந்த பைரவரை வணங்கி வர நற்பலனை காணலாம். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ளது.

 

சேந்தமங்கலம்: இங்கு அகோர பைரவர் பத்து கைகளுடன் தன் வாகனமான நாயுடன் காணப்படுகிறார். எட்டு கைகளில் படைக்கலன்களும், மற்ற இரண்டு கைகளில் அபய, வரத முத்திரையும் கொண்டு காணப்படுகிறார். இது சிறப்பானதொரு திருஉருவமாகும்.

 

முறப்ப நாடு: எந்தக் கோயிலிலும் பைரவர் சன்னதியில் ஒரு பைரவர் மட்டுமே காட்சி தருகிறார். ஆனால் முறப்ப நாடு கோயிலில் இரண்டு பைரவர்கள் உள்ளனர். ஒரு பைரவர் வழக்கம் போல் நாய் வாகனத்துடன் காட்சி தருகிறார். மற்றொரு பைரவருக்கு வாகனம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. நாய் வாகனத்துடன் காட்சி தருபவரை கால பைரவர் என்றும், வாகனம் இல்லாத பைரவரை வீர பைரவர் என்றும் கூறுகின்றனர். இந்த ஊர் திருநெல்வேலியிலிருந்து தூத்துக்குடி செல்லும் சாலையில் 17கி.மீ. தொலைவில் உள்ளது.

 

திருவாஞ்சியம்: தஞ்சை மாவட்டம் திருவாஞ்சிய ஸ்தலத்தில் மட்டுமே பைரவர் அமர்ந்த நிலையில் காணப்படுகிறார். எனவே இவர் ஆசன பைரவர் என அழைக்கப்படுகிறார். யம பயம் நீக்கும் தலம்.

 

திருச்சேறை: கும்பகோணம் அருகிலுள்ள திருச்சேறை ஆலயத்தில் சர்வ பைரவர் சன்னதி உள்ளது. இவரை வழிபட்டால் பில்லி சூன்யம் விலகும்.

 

திருப்பாச்சேத்தி: மதுரை - ராமேஸ்வரம் சாலையில்  உள்ள திருப்பாச்சேத்தி ஆலயத்தில் பைரவர் இரண்டு நாய் வாகனங்களுடன் அருள்பாலிக்கிறார். ஒரு நாய் நின்ற கோலம், இன்னொரு நாய் அமர்ந்த கோலம். சரும நோய், வயிற்று நோய், வாத நோய், பித்த நோய், இருதய நோய் முதலிய நோய்களை நீக்குபவராக உள்ளதால் இவர் கஷ்ட நிவாரண பைரவர் என்று அழைக்கப்படுகிறார்.

 

நாகை: இங்கு சம்ஹார பைரவராக தெற்கில் சிம்ம வாகனத்துடன் அருள்பாலிக்கிறார்.

 

கும்பகோணம்: வலங்கைமான் அருகிலுள்ள ஆவூரில் ஒரே பீடத்தில் ஐந்து பைரவர்களாக எழுந்தருளி பிதுர் தோஷத்தை நிவர்த்தி செய்கிறார்கள். ஐந்து பைரவர்களை ஒரே நேரத்தில் வழிபடலாம்.

 

காளஹஸ்தி: இங்கு இரு பைரவர்கள் உள்ளனர். ஒன்று பைரவர். மற்றொன்று பாதாள பைரவர். கட்டுமானப் பணி தொடங்குமுன் இவர்களை வழிபட்டால் பணி தடையின்றி நடைபெறும்.

 

பழநி: அடிவாரத்தில் இந்தியாவிலேயே மிக உயரமான விஜய பைரவர் எழுந்தருளி, சகல தோஷங்களையும் நிவர்த்தி செய்கிறார்.

 

சீர்காழி: சட்டைநாதரும், திருவெண்காடு அகோர மூர்த்தியும் பைரவ வழிபாடே. இவர்களை ஞாயிற்றுக்கிழமை தரிசிப்பது மிக விசேஷமாகும். சீர்காழிக்கு செல்ல முடியாதவர்கள் சேலம் மாவட்டம், ஆத்தூர் வட்டம் ஆறகளூர் காமநாத ஈஸ்வரர் திருக்கோயிலில் பைரவர்களை வழிபட்டு இராஜகோபுரத்தில் எழுந்தருளியுள்ள முத்து சட்டைநாதருக்கு புனுகுசட்டை, கஸ்தூரி திலகமிட்டு தியான மந்திரம் கூறி வணங்கி அஷ்டபுஜத்துடன் கூடிய கால பைரவரை வணங்கி பயன் பெறலாம்.

 

சேலம்: இங்கே சிருங்கேரி சங்கர மடத்தில் பாரதீ தீர்த்த சுவாமிகளால் யந்திரஸ்தாபிதம் செய்யப்பட்ட பைரவர் சன்னதி உள்ளது. ஆபத்துத்தாரண மூர்த்தியாக உள்ள இந்தப் பைரவர் தனிச் சக்திமிக்கவராய் காணப்படுகிறார். மேலும் இங்குள்ள காசி விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதர் திருக்கோயிலில் எழுந்தருளியுள்ள காசி கால பைரவரையும் தரிசிக்கலாம்.

 

திருவான்மியூர்: சென்னையை அடுத்துள்ள திருவான்மியூரில் ஏழு பைரவர் சன்னதி அமைந்துள்ளன.

 

இலுப்பைக்குடி: இங்கே உள்ள தான்தோன்றீஸ்வரர் திருக்கோயிலில் தட்சிணாமூர்த்திக்கு இருபுறமும் சிறிய பைரவர்கள் உள்ளனர். இங்குதான் கொங்கண சித்தர் தட்சிணாமூர்த்தியின் பேரருளால் ரசவாதம் நீங்கி ஸ்வர்ணகால பைரவர் மந்திரம் கூறி செம்பைத் தங்கமாக்கினார் என்று குறிப்புகள் கூறுகின்றன.

 

அந்தியூர்: ஈரோட்டிலிருந்து வடக்கே 35 கி.மீ. தொலைவில் உள்ள அந்தியூரில் செல்லீஸ்வரர் திருக்கோயிலில் வீர பைரவர் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்.

 

காஞ்சிபுரம்: உத்திரமேரூர் சாலையில் உள்ள இந்த திருக்கோயிலில் ஈசான்ய திசையில் பைரவர் காட்சியளிக்கிறார். சனி பகவானே வந்து பைரவரை வழிபாடு செய்ததாக வரலாறு கூறுகிறது.

 

திருவியலூர் (திருவிசநல்லூர்): கும்பகோணத்துக்குக் கிழக்கே நான்கு மைல் தூரத்தில் உள்ளது. இத்திருக்கோயிலின் ஈசான்ய மூலையில் ஒரே வரிசையில் நான்கு பைரவர்கள் உள்ளனர்.

 

ஓம் சிவ சிவ ஓம் 

ஓம் சிவ சிவ ஓம் 

ஓம் சிவ சிவ ஓம் 

பைரவர் வழிபாட்டுக்கு ஏற்ற நாட்கள்


 


பைரவர் வழிபாட்டுக்கு ஏற்ற நாட்கள்

 

 

ஞாயிற்றுக்கிழமை

 

(சிம்ம ராசிக்காரர்கள் இந்த கிழமையில் வழிபடுவது சிறப்பு)

 

தள்ளிப்போகும் திருமணங்களுக்குப் பரிகாரம் காண மணமகனோ, மணமகளோ ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் இராகு காலத்தில் (4.30-6.00) பைரவருக்கு அர்ச்சனை, ருத்ராபிஷேகம், வடை மாலை சாற்றி வழிபட்டால் தடைகள் நீங்கித் திருமணம் கைகூடும். கடன் வாங்கி வட்டியும், அசலும் கட்ட முடியாமல் தவிப்பவர்கள் இராகு காலத்தில் காலபைரவருக்கு முந்திரிப்பருப்பு மாலை கட்டி, புனுகு சாற்றி, வெண் பொங்கல் நைவேத்தியம் இட்டு வழிபட்டு பிரார்த்தனை செய்தால் நலம் கிடைக்கும்.

 

திங்கட்கிழமை

 

 (கடக ராசிக்காரர்கள் இந்த கிழமையில் வழிபடுவது சிறப்பு)

 

வில்வார்ச்சனை செய்திட சிவனருள் கிட்டும். திங்கட்கிழமை அல்லது சங்கடஹர சதுர்த்தியன்று பைரவருக்கு பன்னீர் அபிஷேகம் செய்து சந்தனக் காப்பிட்டு புனுகு பூசி நந்தியாவட்டை மலர் மாலை அணிவித்து வழிபட்டு வந்தால் கண் சம்பந்தப்பட்ட நோய்கள் விலகும்.

 

செவ்வாய்க்கிழமை

 

(மேஷம், விருச்சிக ராசிக்காரர்கள் இந்த கிழமையில் வழிபடுவது சிறப்பு)

 

மாலையில் மிளகு தீபம் ஏற்றி வழிபட்டு வந்தால் இழந்த பொருளைத் திரும்பப் பெறலாம். எல்லா அஷ்டமிகளிலும் பைரவர் விரதம் இருக்கலாம். ஆனால் செவ்வாய்க்கிழமைகளில் அஷ்டமி இணைந்து வந்தால் அதைவிடச் சிறப்பான நாள் ஏதுமில்லை. குறைந்தபட்சம் 21 அஷ்டமிகள் தொடர்ந்து விரதம் இருக்க வேண்டும். அதிகாலையில் நீராடி, பைரவரை மனதில் நினைத்து வணங்க வேண்டும். பகலில் ஏதாவது ஒரு பொழுது மட்டும் எளிய உணவு சாப்பிடலாம். இரவில் கண்டிப்பாக சாப்பிடக்கூடாது. அன்று மாலை பைரவருக்கு வடை மாலை சாற்றி வழிபட வேண்டும். வசதி குறைந்தவர்கள் ஒரு தீபம் மட்டும் ஏற்றினால் போதும்.மறுநாள் நவமியன்று காலை மீண்டும் கோயிலுக்குச் சென்று விநாயகர், சிவன், அம்பாள், பைரவரை வணங்கி, ஏழைகளுக்கு அன்னதானம் அளிக்க வேண்டும். சிறிதளவு சர்க்கரைப் பொங்கல் செய்து, குழந்தைகளுக்கு கொடுத்தால் நல்லது. பிறகு வீட்டிற்கு வந்து பூஜையறையில் பூஜை முடித்து, இனி என்னால் யாருக்கும் எந்தக் கெடுதலும் வராது என உறுதிமொழி எடுக்க வேண்டும். சாப்பிட்டு விரதத்தை நிறைவு செய்ய வேண்டும். பைரவ விரதத்தின் நோக்கமே கேடுகளை அழிப்பதுதான்.

 

புதன்கிழமை:

 

(மிதுனம், கன்னி ராசிக்காரர்கள் இந்த கிழமையில் வழிபடுவது சிறப்பு)

 

நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் பூமி லாபம் கிட்டும்.

 

வியாழக்கிழமை

 

 (தனுசு, மீனம் ராசிக்காரர்கள் இந்த கிழமையில் வழிபடுவது சிறப்பு)

 

விளக்கேற்றி வந்தால் ஏவல், பில்லி சூன்யம் விலகும்.

 

வெள்ளிக்கிழமை:

 

 (ரிஷபம், துலாம் ராசிக்காரர்கள் இந்த கிழமையில் வழிபடுவது சிறப்பு)

 

மாலையில் வில்வ இலைகளாலும், வாசனை மலர்களாலும் சகஸ்ரநாம அர்ச்சனை செய்து வந்தால் வறுமை நீங்கி, செல்வப் பேறு கிட்டும்.

 

சனிக்கிழமை:

 

(மகரம், கும்ப ராசிக்காரர்கள் இந்த கிழமையில் வழிபடுவது சிறப்பு)

 

சனி பகவானுக்கு குரு பைரவர். ஆகவே சனிக்கிழமை அன்று இவரை பிரத்யேகமாக வழிபடுவதால் அஷ்டமச்சனி, ஏழரைச்சனி, அர்த்தாஷ்டமச் சனி விலகி நல்லவை நடக்கும்.

 

 

 

 கால பைரவர் உடலில் பூமியைத் தாங்கும் எட்டு நாகங்களும் மாலையாக இருந்து அலங்கரிப்பதால் இவரை வழிபட்டால் சர்ப்ப தோஷங்களும் நீங்கும்.

 

 சனி பிரதோஷத்தன்று பைரவருக்கு சகஸ்ரநாம அர்ச்சனை செய்து அவரவர் வசதிக்கேற்ப தேங்காய், தேன், தயிர் அன்னம் படைத்து வழிபட்டு பிரசாதமாகப் பக்தர்களுக்கு விநியோகிக்க வழக்குகளில் வெற்றி, வியாபாரத்தில் லாபம் கிட்டும்.

 

 எதிரிகளால் ஏற்படும் தொல்லை மற்றும் பில்லி, சூனியம் போன்ற மந்திரத் தொல்லைகளும் அடியோடு அகலும்.

 

 அஷ்டமி திதியில் மற்றும் பிரதி தமிழ் மாதம் எல்லாத் தேதியிலும் ஆயில்யம், சுவாதி, மிருகசீரிஷம் நட்சத்திர தினங்களிலும் பைரவரை வழிபட்டால் உத்தியோகத்தில் மதிப்பும், பதவி உயர்வும் கிட்டும். தொழிலில் லாபம் கிட்டும்.

 

தை மாதம் முதல் செவ்வாய்க்கிழமை தொடங்கி ஒவ்வொரு செவ்வாய் தோறும் பைரவரை வணங்கி கால பைரவ அஷ்டகம் படித்து வந்தால் எதிரிகளை அழித்து, கடன்கள் தீர்ந்து, யம பயம் மட்டுமில்லாது எவர் பயமுமின்றி நீண்ட நாள் வாழலாம்.

 

 தேய்பிறை அஷ்டமியில் பஞ்ச தீபம் ஏற்றி வழிபட்டால் காலத்தினால் தீர்க்க முடியாத தொல்லைகள் நீங்கும். நல்லருள் கிட்டும். பஞ்ச தீபம் என்பது இலுப்பை எண்ணெய், விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், பசு நெய் ஆகும்.

 

இவற்றை தனித்தனி தீபமாக ஏற்ற வேண்டும். அகல் விளக்கில் ஏற்றலாம்.

 

பைரவருக்கு இந்த பஞ்ச தீபம் ஏற்றி வழிபட்டால் எண்ணிய செயல்கள் நிறைவேறும் என்பது ஐதீகம்.

 

 

இழந்த பொருட்களை மீண்டும் பெற:

 

         பைரவரின் சன்னதி முன்னால் (27) மிளகை வெள்ளைத் துணியில் சிறு மூட்டையாகக் கட்டி அகல் விளக்கில் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி தீபமேற்றி 27 நாள் வழிபட்டால் இழந்த பொருட்களும் சொத்துக்களும் திரும்பக் கிடைக்கும்.

 

குழந்தைச் செல்வம் பெற:

 

              திருமணமாகி பல வருடங்களாகியும் குழந்தைப் பேறு இல்லாதவர்கள் ஆறு தேய்பிறை அஷ்டமி நாட்களில் சிவப்பு அரளிப் பூக்களால் பைரவரை அர்ச்சனை செய்து, ஏழை குழந்தைகளுக்கு அன்னதானம் வழங்கி வழிபடின் விரைவில் அத்தம்பதியருக்குக் குழந்தைச் செல்வம் கிட்டும்.

 

சனி பகவானின் அருள் கிடைக்க, தோஷம் நீங்க

 

              சனீஸ்வரரின் குரு பைரவர் என்பதால், பைரவரை வணங்கினால், சனிபகவான் மகிழ்ந்து நமக்கு அதிக துன்பங்களைத் தரமாட்டார். எனவே, நாம் சனிக்கிழமைகளில் பைரவரை வணங்கினால் சனி பகவானால் உண்டாகும் இன்னல்கள் யாவும் நீங்கும்.

 

தடைபெற்ற திருமணம் நடக்கவும், எதிரிகள் தொல்லை நீங்கவும்

 

                          ஞாயிற்றுக்கிழமைகளில் இராகுகால நேரத்தில் பைரவரை வணங்க வேண்டும். அதனால் உடனே நன்மை உண்டாகும். பில்லி, சூனியம், ஏவல் அகலும். திருமணம் கைகூடும். 6 சனிக்கிழமைகளில் 6 எண்ணெய் தீபம் ஏற்றி வழிபட்டால் தடைபட்ட திருமணம் கைகூடும். தடைப்பட்ட அனைத்து காரியங்களும் நிறைவேறும். குடும்ப ஒற்றுமை நிலைக்கும்.

 

ஒவ்வொரு மாதமும் வழிபட வேண்டிய பைரவர்கள்:

 

                       துவாதச ஆதித்தியர்கள் அதாவது பன்னிரண்டு ஆதித்தியர்கள் ஒருங்கிணைந்து சூரியனாகி செயல்படுவதாகவும், சூரியனே பன்னிரண்டு வித தன்மைகளுடன் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு தன்மை உடையவராக செயல்படுவதாகவும் கூறுவார்கள். துவாதச ஆதித்யர்களை வழிபட்டு நலம் பெறலாம். காலத்தின் நாயகனும் சூரியனைத் தனக்குள் கொண்டவருமான சர்வேஸ்வரனின் திருவடிவமான பைரவர் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு பைரவராகக் காட்சி தருகிறார்.

 

எந்தெந்த மாதத்தில் எந்த பைரவர் ஆட்சி புரிகிறாரோ அந்த பைரவரை வழிபட்டு நன்மை அடையலாம்.

 

மாதங்கள் துவாதச ஆதித்தியர்கள் ஆதித்தியர்களின் பிராண தேவதை:

 

சித்திரை அம்சுமான் ---  சண்ட பைரவர்

வைகாசி தாதா          ---- ருரு பைரவர்

ஆனி ஸவிதா           ---- உன்மத்த பைரவர்

ஆடி அரியமான்       ----கபால பைரவர்

ஆவணி விஸ்வான்  --ஸ்வர்ணாகர்ஷண பைரவர்

புரட்டாசி பகன்        ---- வடுக பைரவர்

ஐப்பசி பர்ஜன்யன்  ---- க்ஷத்ரபால பைரவர்

கார்த்திகை துவஷ்டா --- பீஷண பைரவர்

மார்கழி மித்திரன்       ----அசிதாங்க பைரவர்

தை விஷ்ணு               ----  குரோதன பைரவர்

மாசி வருணன்          ----- ஸம்ஹார பைரவர்

பங்குனி பூஷா          -----சட்டநாத பைரவர்.

 

 

ஓம் சிவ சிவ ஓம் 

ஓம் சிவ சிவ ஓம் 

ஓம் சிவ சிவ ஓம் 

 

மஹா பைரவர் விரதம் இருப்பது எப்படி?

நாம் வாழும் பூமியானது கர்ம பூமியாகும்;கர்ம பூமியென்றால்,பூமிக்கு மேலே ஏழு  உலகங்களும்,பூமிக்குக் கீழே ஏழு உலகங்களும் உள்ளன.இந்த பதினான்கு உலகங்களுமே போக உலகம் ஆகும்.அப்படியென்றால்,நாம் கர்மபூமி எனப்படும் நமது பூமியில் நாம் செய்யும் நற்காரியங்களுக்கும்,தீயக் காரியங்களுக்கும் ஏற்றவாறு நாம் இறந்தப்பின்னர்,இந்த பதினான்கு உலகங்களில் ஏதாவது ஒன்றில் பிறப்போம்;அல்லது மீண்டும் இந்த பூமியிலேயே பிறப்போம்;

 

 

 

நாம் பிறருக்கு உதவி செய்தல்,அன்னதானம் செய்தல்,கோவில்களில் சம்பளம் வாங்காமல் வேலை செய்தல்,பக்தியை பிறருக்கு உருவாக்குதல்,நம்மால் முடிந்த அளவுக்கு பிறருக்கு பண உதவி அல்லது கருத்து உதவி அல்லது ஆலோசனை உதவி செய்தல் போன்றவைகளைச் செய்தால்,நாம் செய்யும் புண்ணியத்தின் அளவுக்கேற்ப பூமிக்கு மேலே இருக்கும் ஏழு உலகங்களில் ஒன்றில் சிறிதுகாலம்(பல நூறு ஆண்டுகள்) வாழ்ந்து வருவோம்;அப்படி வாழ்ந்து,நமது பூர்வ புண்ணியங்கள் தீர்ந்ததும்,மீண்டும் இந்த பூமியில் பிறப்போம்;அப்படிப் பிறக்கும்போது பெரும் செல்வந்தராகவும்,ஆன்மீக விஷயத்தில் அளவற்ற ஈடுபாட்டுடனும் பிறப்போம்.(நமது கல்வி ஏழு பிறவிக்கும் கூடவே வரும் என இந்து சாஸ்திரங்கள் கூறியிருப்பது இதைத்தான்!)

 

 

 

அடுத்த குடும்பத்தைக் கெடுத்தல்,ஒற்றுமையான கணவன் மனைவியை தந்திரமாகப் பிரித்தல்(இந்தக்காலத்தில் அந்த கணவனின் பெற்றோரே/மனைவியின் பெற்றோரே பிரிப்பதை பெருமையாக நினைக்கிறார்கள்),அப்பாவிகளை ஏமாற்றி அவர்களின் வீட்டை/சொத்தை எழுதி வாங்குதல்,பணத்துக்காக என்ன வேண்டுமானாலும் செய்தல்,ஈவிரக்கம் பார்க்காமல் பணத்தைக் குவிப்பதையே குறியாக இருத்தல்,தனக்கு மிஞ்சியதே தானம் என்று தெரிந்தும் கூட,தன்னால் தனது ரத்த உறவுகளுக்கு உதவி செய்ய முடியும் என்று தெரிந்தும் கூட உதவாமல் இருத்தல்,பிறரைப் பற்றி கேவலமாகப்பேசுதல், பிறரின் காம அவமானங்களை பிரபலப்படுத்துதல், பிறரின் தாம்பத்திய ரகசியங்களை(இக்காலத்தில் வீடியோ எடுத்து) வெளியிடுதல்,தன்னை விட தனது குழந்தைகள் கூட  புகழடைந்துவிடாமல் கவனமாகப் பார்த்துக்கொள்ளுதல்,பிறரின் அக்கிரமங்களைத் தடுக்க முடியும் சக்தியிருந்தும் வேடிக்கை பார்த்தல் வீம்புக்கென்றே பிறரின் செல்வாக்கைப் பயன்படுத்தி,இருவரின் நல்லுறவைப் பாழாக்குதல்; சுருக்கமாக அடுத்தவரை மனதால்,உடலால் நோகடித்தல் அல்லது சாகடித்தல் அல்லது சாவுக்குச் சமமாக சித்ரவதை செய்தல் போன்றவைகளில் ஏதாவது செய்தால்,மிகவும் இழிவான பிறப்பாக பிறக்க வேண்டியிருக்கும்.

இந்த சூழ்நிலையில் மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவருக்குமே மனம் திருந்துவதற்கு சந்தர்ப்பத்தை கடவுள் அடிக்கடி உருவாக்கித்  தருகிறார்.அப்படி உருவாக்கித் தரும்போது, அதை முறையாகவும்,முழுமையாகவும் பயன்படுத்திக்கொண்டு தன்னை கர்மவினைகளிலிருந்து பாதுகாத்துக்கொள்வது ஒருசிலர் மட்டுமே !

எந்தக் கடவுளைக் கும்பிட்டால்,நமது கர்மவினை அடியோடு விலகும்?

நமது மனிதர்களைவிடவும்,மகான்கள் சக்தி வாய்ந்தவர்கள்;அவர்களின் ஜீவசமாதி வழிபாடு செய்வது சிவ வழிபாடே தான்!!!(தொடர்ச்சியான ஓராண்டு ஜீவசமாதி வழிபாடு,நம்மை பைரவ வழிபாட்டுக்குக்கொண்டு செல்லும்)

மகான்களை விடவும் சித்தர்கள் சக்தி வாய்ந்தவர்கள்;சித்தர்களின் ஜீவசமாதிகளை சென்று அடிக்கடி வழிபடலாம்;

சித்தர்களை விடவும் நவக்கிரகங்கள் சக்தி வாய்ந்தவை;நவக்கிரகங்களை விடவும் அவைகளை இயக்கும் பெருமாள் என்ற மஹாவிஷ்ணு சக்தி வாய்ந்தவர் ஆவார்.மஹாவிஷ்ணுவை வழிபட,வழிபட நமது செல்வ வளம் பெருகும்.

மஹாவிஷ்ணு வழிபாட்டின் ஒரு அம்சமே குபேர பூஜை,குபேர கிரிவலம்,மஹா லட்சுமி வழிபாடு,மஹாலட்சுமியாகம்,சத்திய நாராயண பூஜை போன்றவைகளும்,ஸ்ரீராமஜெயம் எழுதுவதும்,ராமாயணம் படிப்பதும்.

மஹாவிஷ்ணு வழிபாட்டை விட உயர்ந்த வழிபாடு எனில் சிவ வழிபாடு ஆகும்.போதுமான மனப்பக்குவமும்,முதிர்ந்த ஞானமும் உள்ளவர்களே இந்த வழிபாட்டைப் பின்பற்ற முடியும்.பெரும்பாலான சிவவழிபாட்டு முறைகள் குப்தக்கலையாகவே இருக்கின்றன.குப்தக் கலை என்றால் ரகசியக்கலை என்றே பொருள்.சிவ வழிபாட்டு முறைகளில் மிகவும் ரகசியமானதே பைரவர் வழிபாட்டு முறை ஆகும்.

யார் நீதி நேர்மை தர்மம் நியாயம் என்று வாழ விரும்புகிறார்களோ,அவர்கள் மட்டுமே பைரவர் வழிபாட்டுமுறையைப் பின்பற்றிட முடியும்.வேறு யாராலும் பைரவர் வழிபாட்டுமுறையைப் பின்பற்றிட முடியாது.

 

நீங்கள் பைரவ வழிபாட்டை தொடர்ந்து செய்து வர, உங்களின் கர்மவினைகள் விரைவாக நீங்கும்;அதே சமயம் உங்களின் வருமானம்/லாபம் படிப்படியாக பெருகத் துவங்கும்;நல்லவர் மாதிரி நடிப்பவர்கள்,நியாயப்படி நடப்பதுபோல சீன் போடுபவர்களால் மாதம் தவறாமல் ஸ்ரீசொர்ண பைரவர் வழிபாடு/தினமும் கால பைரவர் வழிபாடு செய்ய முடியாது.இது அனுபவ உண்மை.

மஹா பைரவர் விரதம் இருக்கும் முறையை நமக்கு கொல்லிமலைச் சித்தர் ஸ்ரீகாகபுஜண்டர்  சுவாமிகள் அருளியிருக்கிறார்.இவர் திரு அண்ணாமலையில் வாழ்ந்து வருகிறார்.இந்த முறையை உங்களுக்கு அறிவிப்பதில் ஆன்மீக அரசு மற்றும்  ஆன்மீகக்கடல் பெருமை கொள்கிறது.

 

 

நீங்கள் 48 நாட்கள் விரதம் இருக்க வேண்டும்.

 

இந்த 48 நாட்களுக்கு மது,மாமிசம்,புகை மற்றும் உடலுறவு கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

 

தினசரி ஸ்ரீபைரவரை (உங்கள்  ஊரில் இருக்கும் சிவாலயத்தில்) வழிபட வேண்டும்.

 

வளர்பிறை மற்றும் தேய்பிறை அஷ்டமி நாட்களில் அன்னதானம் செய்ய வேண்டும்.

 

இயன்றவரையிலும் பைரவரை வழிபடுபவர்கள் கூட்டு வழிபாடு செய்யலாம்.

 

தினமும் அதிகாலை 4.30க்கு எழுந்து குளித்துவிட்டு,பைரவர் மூலமந்திரம் ஜெபிக்க வேண்டும்.(இந்த 48 நாட்களும்)

 

மாலை 6மணிக்கு மேல் 11 மணிக்குள் பைரவர் மூலமந்திரம் அல்லது பைரவர் 108 போற்றிகளை ஜபிக்க வேண்டும்.

 

சுத்தமான உணவு,ஹோட்டல் உணவைத் தவிர்த்தல்,அமைதியாக அடிக்கடி(ஒவ்வொரு நாளிலும் பலமுறை) தியானம் செய்தல்,தேவாரம்,திருவாசகம் பாடுதல்,சத் சங்கம் எனப்படும் கூட்டு வழிபாடு செய்தல் விரைவான,சக்திவாய்ந்த பலனைத் தரும்.

 

ஏழைகளுக்கு உதவினால்,பைரவருக்கு அளவற்ற மகிழ்ச்சி ஏற்படும்.அவரது அருள் விரைவாகக் கிடைக்கும்.

 

பத்து நாட்களுக்கு ஒருமுறை ஒரு வேளை உணவு உண்டு,அன்று பைரவரின் மந்திரங்கள்,போற்றிகளை வீட்டில் பாடலாம்.

 

 

 ஓம் சிவ சிவ ஓம் 

ஓம் சிவ சிவ ஓம் 

ஓம் சிவ சிவ ஓம் 

நாம் ஏன் பைரவர் வழிபாடு செய்ய வேண்டும்?

இந்துதர்மப்படி காலத்தை நான்காகப் பிரித்துள்ளனர் நமது பெருமைமிக்க முன்னோர்கள்.அவை கிருதயுகம்,திரேதாயுகம்,துவாபரயுகம்,கலியுகம் ஆகும்.கிருதயுகம் 17,28,000 ஆண்டுகளைக் கொண்டது.இந்த யுகத்தில் மனிதனும்,கடவுளும் நண்பர்களாகவே வாழ்ந்தனர்.இந்த யுகத்தில் தான் இராமாயணம் நமது பாரத நாட்டில் நிகழ்ந்தது;இந்த யுகத்தில் ஒவ்வொரு மனிதனும் தான் விரும்பும்போது மரணம் அடையலாம்;தர்ம தேவதை என்ற பசுவுக்கு நான்கு கால்கள் இருந்தன;எனவே,வேதனைகளும்,சோகங்களும் அறவே கிடையாது.மனிதனாகப்பிறந்த ஒவ்வொருவருக்குமே சாஸ்திர,சம்பிரதாய ஞானம் இருந்தது.எனவே,யாரும் சாஸ்திர சம்பிரதாயத்தின் மூலமாக ஏமாற்றிடமுடியாது.அதே சமயம் ,இந்த யுகத்தில்தான்  குரங்கிலிருந்து பரிணாம வளர்ச்சி அடைந்து மனிதனாக மாறத்துவங்கிய காலம் ஆகும்.அப்படி மாறிய யுகத்தில்தான் மனித இனம் தனது படைப்பிலேயே உன்னதமான மனிதப்படைப்பை உருவாக்கியது.அந்த மனித படைப்புதான் மாருதி எனப்படும் ஆஞ்சநேயர்!!!இராமாயண காலத்தில் தான் தனது ஸ்ரீஇராமச்சந்திர மூர்த்திக்காக காசிக்குப் பறந்து சென்று,காசியின் கடவுளாம் காலபைரவரின் அனுமதியின்றி சிவலிங்கங்களை எடுத்துச் சென்று,அவரின் சாபத்துக்கு ஆளானார் மாருதி! பிறகு,அவரிடம் சரணடைந்து,அவரின் அன்புக்குப்பாத்திரமானார்.(ஆக,வட பாரதத்தில் இருக்கும் காசியும்  தென் பாரதத்தில் இருக்கும் ராமேஸ்வரமும் சுமார் 20,00,000 ஆண்டுகள் பழமையானது என்பதை இதன் மூலம் நாம் உணர்ந்துகொள்ளலாம்.இந்தப் பெருமை உலகின் வேறு எந்த மதத்துக்காவது உண்டா?)

 

 

இரண்டாவது யுகமான திரேதாயுகம் 12,96,000 ஆண்டுகளைக் கொண்டது.யாகங்கள் தோன்றின.மனம் வருந்தி வேண்டினால்,கடவுள் நேரில் வந்து அருள்புரிவார்;இந்த யுகத்தில் மனிதனது ஆயுள் சில ஆயிரம் ஆண்டுகளாகக் குறைந்தன.இந்த யுகத்தில் மனிதன் ஒவ்வொருவரின் மரணநாளும் அவனு/ளுக்குத் தெரியும்.ஆனால்,மனிதன் நினைத்தால் தனது மரணத்தைத் தள்ளிப்போடலாம்.பாவமும்,சோகமும் தலைதூக்கத்துவங்கின;இந்த யுகத்தில் தர்மதேவதை என்னும் பசுவுக்கு மூன்றுகால்கள் இருந்தன.எனவே,சிறிது போராடி தர்மம் பாதுகாக்கப்பட்டு வந்தது.

 

 

 

மூன்றாவது யுகமான துவாபர யுகமானது 8,64,000 ஆண்டுகளைக் கொண்டது.இந்த யுகத்தின் ஆரம்பத்தில் கோவில்கள் உண்டாயின.இந்த யுகத்தின் மனிதனின் ஆயுள் ஓரு ஆயிரம் ஆண்டுகளாகச் சுருங்கின.கொடூரம் நிறைந்த மனிதர்கள் பிறக்கத் துவங்கினர்.இந்த யுகத்தின் முடிவில்தான் நமது பாரத நாட்டில் மஹாபாரதம் நிகழ்ந்தது.இந்த யுகத்தில் ஒரு சிலருக்கு மட்டுமே தனது ஆயுள்காலம் அறியும் வித்தை தெரிந்தது.தர்மதேவதைக்கு இரண்டே இரண்டுகால்கள்! எனவே,ஆன்மீகத்தில் பித்தலாட்டம் ஆரம்பமானது;சாஸ்திரத்தை பின்பற்றுபவர்களை விட,அதை முகமூடியாகக் கொண்டவர்கள் பிரபலமடையத்துவங்கினர்.மக்களுக்கு தவறான ஆன்மீகவழிகாட்டுதல்கள் தரப்பட்டு,அந்த தவறான வழிகாட்டுதலால் படாதபாடு பட்டனர்.இந்த யுகத்திலும் ஆஞ்சநேயர் வாழ்ந்துவருகிறார்.

 

 

தற்போது நாம் வாழும் யுகமே கலியுகம் ஆகும்.இதன் கால அளவு 4,32,000 ஆண்டுகள் ஆகும்.ஒவ்வொரு மனிதனின் ஆயுளும் 100 வருடங்களுக்கும் குறைவே!தர்ம தேவதை என்னும் பசுவுக்கு ஒரே ஒரு கால்தான் இருக்கும்;எனவே,கலியுகத்தில் தர்மம்,நீதி,நேர்மைக்கு மதிப்பு மிகக் குறைவாகவே இருக்கும்;அல்லது தர்ம நியாயத்தைத் தேட வேண்டியிருக்கும்;

 

 

 

     கலியுகத்தின் ஆரம்பத்தில் பைரவ வழிபாடு பரவலாக எல்லோரிடமும் காணப்பட்டது.இன்று கலியுகம் துவங்கி 5122 ஆண்டுகள் ஆகின்றன.இதில் சுமார் 2500 ஆண்டுகளாக பைரவ வழிபாடு செய்பவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்து போய்விட்டனர்.இதற்கு பல காரணங்கள் இருந்தாலும்,கடந்த ஆயிரம் ஆண்டுகளாக நமது பாரத நாடு பிற மதங்களின் தாக்குதலால் பலவிதமான கஷ்டங்களுக்கு உள்ளானதே முதல் காரணம் ஆகும்.இந்த சூழ்நிலையில்,பைரவ வழிபாட்டை நாம் பின்பற்றும் சூழ்நிலை உருவாகியிருக்கிறது.

 

 

இன்று சாஸ்திர,சம்பிரதாயங்களை பாதுகாக்கவேண்டியவர்களே,அவர்களின் ஐந்து தலைமுறை முன்னோர்கள் செய்த தவறுகளின் விளைவாகவும்,பேராசையாலும் இன்று மிகவும் கஷ்டங்களையும்,சிரமங்களையும் அனுபவித்துவருகின்றனர்.அவர்களின் குழந்தைகள்     அதாவது 1970 முதல் பிறந்தவர்கள் இன்று திருமண வாழ்க்கை கூட கிடைக்காமலும்,பூர்வீகச் சொத்துக்கள் கோடிக்கணக்கான ரூபாய்கள் பெறுமானவுள்ளவையாக இருந்தும் கூட அவைகளை அனுபவிக்க முடியாமலும், தீரவே தீராத நோய்களுடனும் நிம்மதியிழந்து தவித்துவருகின்றனர்.இந்த தவிப்பினை தீர்க்க ஒரே ஒரு வழிமுறை பைரவ வழிபாடு மட்டுமே!

 

 

 

சாஸ்திர,சம்பிரதாயங்களின் பிரதிநிதிகளாக இருப்பவர்களுக்கே இந்த நிலை என்றால்,அவர்களைத் தவிர பிற சமுதாயத்தைச்சேர்ந்தவர்கள் என்ன பாடு படுவார்கள்?(சாமிக்கே சைக்கிள் இல்லையாம்?பூசாரிக்கு புல்லட் கேட்குதோ என்று நாம் கிண்டல் செய்கிறோமே அதற்கான உள்ளார்த்தம் இதுதான்)இந்து சமுதாயத்தினை ஆன்மீகரீதியாக வழிநடத்திட உருவாக்கப்பட்ட சமுதாயமானது,வேற்றுமத வருகை மற்றும் ஆதிக்கத்தினால் நமது  தர்மத்தை பாதுகாக்கத்தெரியாமலும்,வழிநடத்திட முடியாமலும் போனதால்,பைரவ வழிபாடும் மங்கிப்போனது.எனது குருவருளாலும்,இறையருளாலும் பைரவர் வழிபாடு பற்றிய எளிமையான முறைகளை ஆன்மீக அரசு மற்றும் ஆன்மீகக்கடல் மூலமாக வெளிப்படுத்திட நான் என்ன புண்ணியம் செய்தேனோ?

 

 

பைரவ வழிபாடு செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்தால்,அந்த தேசமானது துடிப்புள்ளதாகவும்,செல்வச் செழிப்புள்ளதாகவும்,பாதுகாப்பு மற்றும் முக்காலமும் உணரும் விதமுள்ள ஆட்சியாளர்களே நிர்வகிக்கும் விதமாகவும் மாறிவிடும்.எனவே, எனது ஆன்மீக அரசு மற்றும் ஆன்மீகக்கடல் வாசக,வாசகிகளே!

 

ஓம்சிவசிவஓம்

ஓம்சிவசிவஓம்

ஓம்சிவசிவஓம்

 

ஸ்ரீ பைரவர் சிவனின் அம்சமாகும்

 

அந்தகாசூரன் என்ற ஒர் அரக்கன் தேவர்களை துன்புறுத்தினான். தேவர்கள் சிவபெருமானிடம் முறையிட்டனர். தாருகாபுரத்தை எரித்த அக்னி சிவனின் நெஞ்சில் சிறு குழந்தையாக இருந்தது. அதை சக்தி தேவி வள்ர்த்து வந்தாள்.

 

தேவர்களின் துயர் துடைக்க அக்னி குஞ்சுக்கு சிவன் ஆணையிட்டார். அதன் விஸ்வருபம் தான் பைரவ பெருமான்.

 

முதலில் 8 பிரிவாக செயல்பட்ட ஸ்ரீ பைரவர் பின் சிவன் மாதிரி 64 மூர்த்தங்களில் 64 சக்திகளுடன் அருள்புரிகின்றார்.

 

 

பைரவர் என்றால் பயத்தை நீக்குபவர், அடியார்களின் பாபத்தை நீக்குபவர் என்றும் பொருள் கூறப்படுகிறது. படைத்தல், காத்தல், அழித்தல் - அதாவது ஒடுக்குதல் ஆகிய முக்கிய இறையருள் தொழில்களைச் செய்து லட்சகணக்காண  உயிர்களையும் காப்பதால் அவருக்குத் திரிசூலம் அதிகார ஆயுதமாக அளிக்கப்படுகிறது.

 

படைத்தல் தொழிலை உடுக்கையும், காத்தல் தொழிலை கையில் உள்ள கபாலமும், அழித்தல் தொழிலை உடலில் பூசிய விபூதியும் குறிக்கும். இந்த கடவுளே அனந்த பைரவராக உலகைப் படைக்கிறார். பின்னர் கால பைரவரக உலகைப் படைக்கிறார். பின்னர் கால பைரவராக உலகை காக்கிறார். அதன் பின்னர் காலாக்கினி பைரவராக பிரளய காலத்தில் ஒடுக்க வருகின்றார். இவருக்குத் தகுந்த பூசைகள் செய்தல் மட்டுமே திருப்தியடைந்து நம்மை ஆபத்துகளிலிருந்து காப்பாற்றுவார் என்றில்லை. எவ்விதமான பூசைகள் செய்யாவிட்டாலும் கூட இக்கட்டான நேரத்தில் முழு மனதுடன் அவரை நினைத்தாலே கூட போதும். சந்தோசத்துடன் உடனே செயல் பட்டு நம்மை ஆபத்துகளிலிருந்து காப்பாற்றுவார்.

 

அந்தகாரத்தை நீக்கி உலகிற்கு ஒளியை கொடுப்பவர் ஸ்ரீ பைரவரே. திரிசூலத்தை மனக்கன்ணினால் எண்ணினாலே போதும். ஸ்ரீ பைரவர் உடன் வந்து அருள் செய்வார்.

 

பைரவரின் வாகனம் நாய் : இதுவே நான்கு வேத வடிவமாகும்.

 

பைரவருக்குண்டான பொது காயத்திரி :

 

சுவாநத்  வஜாய வித்மஹே

சூலஹஸ்தாய தீமஹி

தந்தோபைரவ பிரசோதயாத்

 

 

வழிபாடு

 

பைரவ வழிபாட்டிற்கு வளர்பிறை மற்றும் தேய்பிறை அஷ்டமி , தேய்பிறை சஷ்டி, மாத பரணி நட்சத்திரம்  மற்றும் ஞாயிறு மாலை 4.30-6.00 மிகவும் ஆற்றல் அளிக்கும் நாட்களாகும்.அருகில் இருக்கும் ஆலயத்து பைரவரை வழிபடலாம்.

 

 

நவக்கிரக தோஷங்கள் நீங்க சதுர்கால பைரவருக்கு செவ்வரளி பூவால் 9 வாரங்கள் ஸ்கஸ்ரநாமா அர்ச்சனை செய்ய வேண்டும்.

 

.

 

வறுமை நீங்க வளர்பிறை அஷ்டமிகளில் மாலை நேரத்தில் வில்வம் மற்றும் வாசனை மலர்களால் அஷ்டோத்திரமே ஸ்கஸ்ரநாமமோ அர்ச்சனை செய்யது 11 பைரவ தீபங்கள் ஏற்ற வேண்டும். அஷ்டமிகளில் தொடர்ந்து வழிபடவேண்டும்.

 

இழந்த சொத்தைத் திரும்பப் பெற 11 அஷ்டமிகள் பைரவ தீபங்கள் ஏற்ற வேண்டும் மிளகை சிறு மூட்டையாகக் கட்டி நெய் அல்லது நல்லெண்ணை இட்டு தீபம் ஏற்றுவது பைரவ தீபமாகும்.

 

சனி தோஷம் நீங்க பைரவருக்கு 9 சனிக்கிழமைகள் சிவப்பு நிறப் பூக்களால்அர்ச்சனை செய்யது 4 பைரவ தீபங்கள் ஏற்ற வேண்டும்.

 

திருமணத் தடை நீங்க ஞாயிறு இராகு காலத்தில் திருநீறு அபிஷேகம் செய்து மிளகு வடை மாலை சாத்தி அர்ச்சனை செய்ய வேண்டும்.

 

பகைபயம் நீங்க 9 முறை பைரவருக்கு அர்ச்சனை செய்து வசதிக்கு ஏற்ப நிவேதனங்கள் செய்ய வேண்டும். இப்படி 9 கிழமைகள் செய்தால் வியாபார நஷ்டம் விலகும், எல்லாத் தொல்லைகளும் அகலும்.

 

செல்வம் செழிக்க வளர்பிறை அஷ்டமிகளில் சதுர்கால பைரவருக்கு சொர்ணபுஷ்பம் அல்லது 108 காசுகளால் அர்ச்சிக்க வேண்டும். அந்தக்காசுகளை வீட்டில் பணப் பெட்டியில் வைக்க செல்வம் செழிக்கும்.

 

 ஓம் சிவ சிவ ஓம் 

ஓம் சிவ சிவ ஓம் 

ஓம் சிவ சிவ ஓம் 

பைரவர் என்ற பெயரின் விளக்கம்

பைரவர்  

 

 

 

சிவம் என்ற சொல்லுக்கு மங்களம் என்றும்,என்றும் இருப்பது என்றும் பொருள் உண்டு.முருகன் என்பதற்கு அழகு,இளமை என்று பொருள் உண்டு.அது போலவே பைரவர் என்ற சொல்லுக்கும் பொருள் உண்டு.

“ப” என்பது காத்தலைக் குறிக்கும்; “ர” என்பது அச்சத்தால் உணர்த்துதலைக் குறிக்கும்; “வ” என்பது படைத்தலைக் குறிக்கும்.முத்தொழிலையும்(படைத்தல்,காத்தல்,அழித்தல்)       இச்சொல் உணர்த்துகிறது.

இதேபோல் “ப” என்பது பரணத்தை(உயிர்களைப் படைக்கும் தொழிலை)க் குறிக்கும்; “ர” என்பது ரமணத்தை(உயிர்களைக் காப்பதை)க் குறிப்பிடுகிறது; “வ” என்பது வமனத்தை(உயிர்கலின் இயக்கத்தை அழித்து,பின் தன்னுள் ஒடுக்கிக் கொள்வதை) உணர்த்துகிறது.

பைரவம் என்னும் சொல்லுக்கு தன்னை உபாசிப்பவனைக் காப்பவன் என்ற பொருளையும், தன் அடியார்களை துன்புறுத்துவோர்களை பயமுறுத்தி அழிப்பவன் என்ற இருவேறுபட்ட பொருள்களையும் குறிக்கும்.

மூவர்க்கும் தேவர்க்கும் காண்பதற்கரிய இறைவன்,காதலாகிக் கசிந்துருகி,அன்புருவாய் மாறும் அடியவர்க்கு,இறங்கி வந்து காட்சி தந்து கருணை புரியும் சிவ வடிவமே மஹாபைரவர் ஆகும். கலியுகத்தில் பேசும் தெய்வமே காலபைரவர் ஆவார்.

 

 ஓம் சிவ சிவ ஓம் 

ஓம் சிவ சிவ ஓம் 

ஓம் சிவ சிவ ஓம்