பைரவ அருளை வாரி வழங்கும் வழிபாட்டு (பூஜை) பொருள்கள்:

 

பைரவருக்கு பிடித்தமானது சந்தன காப்புஇதில் வாசனை திரவியங்களான புணுகுஅரகஜாஜவ்வாதுகஸ்தூரிகோரோசனைகுங்குமப்பூபச்சை கற்பூரம் சேர்த்து சந்தனக் காப்பு செய்து வழிபடுவது என்பது தேவர்களின் வருடக் கணக்கில் ஒரு கோடி வருடம் பைரவ லோகத்தில் வாழ்ந்ததற்கு சமமாக இன்புற்று வாழ்வர் என்று சிவபுராணம் கூறுகிறதுபால்தேன்பன்னீர்பழரச அபிஷேகமும் மிக விசேஷம்.

 பைரவருக்கு தாமரைப்பூ மாலைவில்வ மாலைதும்பைப்பூ மாலைசந்தன மாலை அணிவித்து மல்லிகைப்பூ தவிர்த்து செவ்வரளிமஞ்சள் செவந்தி மற்றும் வாசனை மலர்களைக் கொண்டு அர்ச்சனை செய்வது உத்தமம்.எங்கே எப்படிச் செய்ய வேண்டும் என்பது தகுந்த நேரம் வரும் போது தகுதியான சீடர்களுக்கு உபதேசம் மூலமாகவோ ஆன்மீகப்பயிற்சி மூலமாகவோ கிட்டும்.

 

 பைரவப்பெருமானுக்கு சர்க்கரைப் பொங்கல்தயிர் சாதம்தேன்செவ்வாழைவெல்லப் பாயசம்பானகம்அவல் பாயசம்நெய்யில் போட்டு எடுக்கப்பட்ட உளுந்து வடைசம்பா அரிசி சாதம்பால் மற்றும் பல்வேறு பழ வகைகள் வைத்து வழிபாடு செய்வது மிகவும் உத்தமம்.

 

 ஓம் சிவ சிவ ஓம் 

ஓம் சிவ சிவ ஓம் 

ஓம் சிவ சிவ ஓம்