சகஸ்ரவடுகர் ஐயா எழுதியுள்ள பைரவ வழிபாடு பற்றிய புத்தகம்!!!


 

நமது ஐயா அவர்கள் ஸ்ரீகால பைரவர்,ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் வழிபாட்டுமுறைகளை வீட்டிலேயே பின்பற்றும் விதமாக எளிமையான தமிழில் எழுதியிருக்கிறார்.இது முதல் பாகம் ஆகும்.

இதில்,பைரவர் ஓர் அறிமுகம்,பைரவ வழிபாட்டினால் கிடைத்த நற்பலன்கள்,எந்ததெந்த நாட்களில் எப்படி பைரவரை வழிபட வேண்டும்? பைரவர்களின் பட்டியல்,ஏழரைச்சனி,அஷ்டமச்சனி,கண்டச்சனி,அர்த்தாஷ்டமச்சனி இருப்பவர்கள் எப்படி ஸ்ரீகாலபைரவரை வழிபட்டால் அதிலிருந்து முழுமையாக மீளலாம்? என்பதைப்பற்றியும் விவரித்திருக்கிறார்.பைரவ வழிபாடு பற்றிய முழுமையான விளக்கங்கள் இதில் இருக்கின்றன;வீட்டிலேயே எப்படி வழிபட வேண்டும் என்ற விளக்கங்களும் நிரம்பியிருக்கின்றன;188 பக்கங்கள் அடங்கிய இந்த புத்தகத்துடன் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் படமும் விலைக்குப் பெறலாம்.

ஆன்மீக அரசு மற்றும் ஆன்மீகக்கடல் வலைப்பூக்களில் வெளிவராத சில முக்கிய மந்திரங்களையும் மக்களின் நலன் கருதி வெளியிட்டிருக்கிறார்.

விருப்பம் உள்ளவர்கள் This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.  க்கு  மின் அஞ்சல் அனுப்பி வாங்கிக் கொள்ளலாம். 

Subjectஇல் Wanted Bairavar Book என்று எழுதி,inbox இல் உங்கள் பெயர்,செல் எண்,வசிக்கும் ஊர்  போன்றவைகளை மட்டும் எழுதி அனுப்பினால் போதும்.

இந்தப் புத்தகம் நமது ஆன்மீக அரசு மற்றும் ஆன்மீகக்கடல் அறக்கட்டளையில் மட்டுமே கிடைக்கும்;வேறு எங்கும் கிடைக்காது;ஸ்ரீகாலபைரவப் பெருமானைப் பற்றி ஏராளமான புத்தகங்கள் வெளிவந்திருக்கின்றன;அவைகளில் இல்லாத பல எளிய வழிபாட்டுமுறைகளை மக்கள் நலனுக்காகவும்,உலக நன்மைக்காகவும் சகஸ்ரவடுகர் ஐயா அவர்கள் தெரிவித்திருக்கிறார்.அசைவம் சாப்பிடுவதை நிரந்தரமாக நிறுத்தினால் மட்டுமே தொடர்ந்து ஸ்ரீகாலபைரவப்பெருமான் வழிபாடு,ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவப் பெருமான் வழிபாடு செய்ய முடியும்.தொடர்ந்து பைரவ வழிபாடு செய்தால் மட்டுமே நமது கர்மவினைகள் விரைவாக தீரும்.

 

ஓம் சிவ சிவ ஓம் 

ஓம் சிவ சிவ ஓம் 

ஓம் சிவ சிவ ஓம்