நாம் ஏன் பைரவர் வழிபாடு செய்ய வேண்டும்?

இந்துதர்மப்படி காலத்தை நான்காகப் பிரித்துள்ளனர் நமது பெருமைமிக்க முன்னோர்கள்.அவை கிருதயுகம்,திரேதாயுகம்,துவாபரயுகம்,கலியுகம் ஆகும்.கிருதயுகம் 17,28,000 ஆண்டுகளைக் கொண்டது.இந்த யுகத்தில் மனிதனும்,கடவுளும் நண்பர்களாகவே வாழ்ந்தனர்.இந்த யுகத்தில் தான் இராமாயணம் நமது பாரத நாட்டில் நிகழ்ந்தது;இந்த யுகத்தில் ஒவ்வொரு மனிதனும் தான் விரும்பும்போது மரணம் அடையலாம்;தர்ம தேவதை என்ற பசுவுக்கு நான்கு கால்கள் இருந்தன;எனவே,வேதனைகளும்,சோகங்களும் அறவே கிடையாது.மனிதனாகப்பிறந்த ஒவ்வொருவருக்குமே சாஸ்திர,சம்பிரதாய ஞானம் இருந்தது.எனவே,யாரும் சாஸ்திர சம்பிரதாயத்தின் மூலமாக ஏமாற்றிடமுடியாது.அதே சமயம் ,இந்த யுகத்தில்தான்  குரங்கிலிருந்து பரிணாம வளர்ச்சி அடைந்து மனிதனாக மாறத்துவங்கிய காலம் ஆகும்.அப்படி மாறிய யுகத்தில்தான் மனித இனம் தனது படைப்பிலேயே உன்னதமான மனிதப்படைப்பை உருவாக்கியது.அந்த மனித படைப்புதான் மாருதி எனப்படும் ஆஞ்சநேயர்!!!இராமாயண காலத்தில் தான் தனது ஸ்ரீஇராமச்சந்திர மூர்த்திக்காக காசிக்குப் பறந்து சென்று,காசியின் கடவுளாம் காலபைரவரின் அனுமதியின்றி சிவலிங்கங்களை எடுத்துச் சென்று,அவரின் சாபத்துக்கு ஆளானார் மாருதி! பிறகு,அவரிடம் சரணடைந்து,அவரின் அன்புக்குப்பாத்திரமானார்.(ஆக,வட பாரதத்தில் இருக்கும் காசியும்  தென் பாரதத்தில் இருக்கும் ராமேஸ்வரமும் சுமார் 20,00,000 ஆண்டுகள் பழமையானது என்பதை இதன் மூலம் நாம் உணர்ந்துகொள்ளலாம்.இந்தப் பெருமை உலகின் வேறு எந்த மதத்துக்காவது உண்டா?)

 

 

இரண்டாவது யுகமான திரேதாயுகம் 12,96,000 ஆண்டுகளைக் கொண்டது.யாகங்கள் தோன்றின.மனம் வருந்தி வேண்டினால்,கடவுள் நேரில் வந்து அருள்புரிவார்;இந்த யுகத்தில் மனிதனது ஆயுள் சில ஆயிரம் ஆண்டுகளாகக் குறைந்தன.இந்த யுகத்தில் மனிதன் ஒவ்வொருவரின் மரணநாளும் அவனு/ளுக்குத் தெரியும்.ஆனால்,மனிதன் நினைத்தால் தனது மரணத்தைத் தள்ளிப்போடலாம்.பாவமும்,சோகமும் தலைதூக்கத்துவங்கின;இந்த யுகத்தில் தர்மதேவதை என்னும் பசுவுக்கு மூன்றுகால்கள் இருந்தன.எனவே,சிறிது போராடி தர்மம் பாதுகாக்கப்பட்டு வந்தது.

 

 

 

மூன்றாவது யுகமான துவாபர யுகமானது 8,64,000 ஆண்டுகளைக் கொண்டது.இந்த யுகத்தின் ஆரம்பத்தில் கோவில்கள் உண்டாயின.இந்த யுகத்தின் மனிதனின் ஆயுள் ஓரு ஆயிரம் ஆண்டுகளாகச் சுருங்கின.கொடூரம் நிறைந்த மனிதர்கள் பிறக்கத் துவங்கினர்.இந்த யுகத்தின் முடிவில்தான் நமது பாரத நாட்டில் மஹாபாரதம் நிகழ்ந்தது.இந்த யுகத்தில் ஒரு சிலருக்கு மட்டுமே தனது ஆயுள்காலம் அறியும் வித்தை தெரிந்தது.தர்மதேவதைக்கு இரண்டே இரண்டுகால்கள்! எனவே,ஆன்மீகத்தில் பித்தலாட்டம் ஆரம்பமானது;சாஸ்திரத்தை பின்பற்றுபவர்களை விட,அதை முகமூடியாகக் கொண்டவர்கள் பிரபலமடையத்துவங்கினர்.மக்களுக்கு தவறான ஆன்மீகவழிகாட்டுதல்கள் தரப்பட்டு,அந்த தவறான வழிகாட்டுதலால் படாதபாடு பட்டனர்.இந்த யுகத்திலும் ஆஞ்சநேயர் வாழ்ந்துவருகிறார்.

 

 

தற்போது நாம் வாழும் யுகமே கலியுகம் ஆகும்.இதன் கால அளவு 4,32,000 ஆண்டுகள் ஆகும்.ஒவ்வொரு மனிதனின் ஆயுளும் 100 வருடங்களுக்கும் குறைவே!தர்ம தேவதை என்னும் பசுவுக்கு ஒரே ஒரு கால்தான் இருக்கும்;எனவே,கலியுகத்தில் தர்மம்,நீதி,நேர்மைக்கு மதிப்பு மிகக் குறைவாகவே இருக்கும்;அல்லது தர்ம நியாயத்தைத் தேட வேண்டியிருக்கும்;

 

 

 

     கலியுகத்தின் ஆரம்பத்தில் பைரவ வழிபாடு பரவலாக எல்லோரிடமும் காணப்பட்டது.இன்று கலியுகம் துவங்கி 5122 ஆண்டுகள் ஆகின்றன.இதில் சுமார் 2500 ஆண்டுகளாக பைரவ வழிபாடு செய்பவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்து போய்விட்டனர்.இதற்கு பல காரணங்கள் இருந்தாலும்,கடந்த ஆயிரம் ஆண்டுகளாக நமது பாரத நாடு பிற மதங்களின் தாக்குதலால் பலவிதமான கஷ்டங்களுக்கு உள்ளானதே முதல் காரணம் ஆகும்.இந்த சூழ்நிலையில்,பைரவ வழிபாட்டை நாம் பின்பற்றும் சூழ்நிலை உருவாகியிருக்கிறது.

 

 

இன்று சாஸ்திர,சம்பிரதாயங்களை பாதுகாக்கவேண்டியவர்களே,அவர்களின் ஐந்து தலைமுறை முன்னோர்கள் செய்த தவறுகளின் விளைவாகவும்,பேராசையாலும் இன்று மிகவும் கஷ்டங்களையும்,சிரமங்களையும் அனுபவித்துவருகின்றனர்.அவர்களின் குழந்தைகள்     அதாவது 1970 முதல் பிறந்தவர்கள் இன்று திருமண வாழ்க்கை கூட கிடைக்காமலும்,பூர்வீகச் சொத்துக்கள் கோடிக்கணக்கான ரூபாய்கள் பெறுமானவுள்ளவையாக இருந்தும் கூட அவைகளை அனுபவிக்க முடியாமலும், தீரவே தீராத நோய்களுடனும் நிம்மதியிழந்து தவித்துவருகின்றனர்.இந்த தவிப்பினை தீர்க்க ஒரே ஒரு வழிமுறை பைரவ வழிபாடு மட்டுமே!

 

 

 

சாஸ்திர,சம்பிரதாயங்களின் பிரதிநிதிகளாக இருப்பவர்களுக்கே இந்த நிலை என்றால்,அவர்களைத் தவிர பிற சமுதாயத்தைச்சேர்ந்தவர்கள் என்ன பாடு படுவார்கள்?(சாமிக்கே சைக்கிள் இல்லையாம்?பூசாரிக்கு புல்லட் கேட்குதோ என்று நாம் கிண்டல் செய்கிறோமே அதற்கான உள்ளார்த்தம் இதுதான்)இந்து சமுதாயத்தினை ஆன்மீகரீதியாக வழிநடத்திட உருவாக்கப்பட்ட சமுதாயமானது,வேற்றுமத வருகை மற்றும் ஆதிக்கத்தினால் நமது  தர்மத்தை பாதுகாக்கத்தெரியாமலும்,வழிநடத்திட முடியாமலும் போனதால்,பைரவ வழிபாடும் மங்கிப்போனது.எனது குருவருளாலும்,இறையருளாலும் பைரவர் வழிபாடு பற்றிய எளிமையான முறைகளை ஆன்மீக அரசு மற்றும் ஆன்மீகக்கடல் மூலமாக வெளிப்படுத்திட நான் என்ன புண்ணியம் செய்தேனோ?

 

 

பைரவ வழிபாடு செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்தால்,அந்த தேசமானது துடிப்புள்ளதாகவும்,செல்வச் செழிப்புள்ளதாகவும்,பாதுகாப்பு மற்றும் முக்காலமும் உணரும் விதமுள்ள ஆட்சியாளர்களே நிர்வகிக்கும் விதமாகவும் மாறிவிடும்.எனவே, எனது ஆன்மீக அரசு மற்றும் ஆன்மீகக்கடல் வாசக,வாசகிகளே!

 

ஓம்சிவசிவஓம்

ஓம்சிவசிவஓம்

ஓம்சிவசிவஓம்