ஆன்மீக அரசு

கடந்த 30 வருடங்களாக மேற்கொண்ட ஆராய்ச்சியின் முடிவுகளை மக்களின் நலனுக்காக இதுவரை இந்த வலை தளத்தில்வெளியிட்டு வந்துள்ளோம், இனிமேல் உங்களின் ஆன்மீக சம்பந்தமான அனைத்து எனது நேரடி பார்வையில் பதில் வரும்,. இதற்கான உங்கள் கேள்வி அனைத்தும் மின்அஞ்சல் மூலமாகவே வரவேண்டும் மற்றும் அனைத்து விதமான கேள்விகளுக்கும் aanmigakkadal@gmail.com,aanmigaarasoo@gmail.com. தொடர்புகொள்ள வேண்டும். இதில் மின்அஞ்சல் தவிர வேறு எந்தவிதமான கைபேசி எண் மற்றும் மின்அஞ்சல் முகவரியும் இல்லை என்று தெரிவித்துக்கொள்கிறேன்-சகஸ்ரவடுகர்

குழந்தையம் கிட்டும் இறைஅருள் இருந்தால்

ஆன்மீகக் கடல் அன்பர்கள் அனைவருக்கும் வணக்கம் .

இல்லற வாழ்வின் சான்றாக விளங்குவது குழந்தை பேறு. நம் குலம் இப்பூமியில் நிலை பெற்று விளங்க நம் சந்ததி அவசியம் .ஆம் இந்த கலி யுகத்தில் பல் வேறு இடர்பாடுகளில் சிக்கி தவிக்கும் மானுடர்களின் மற்றொரு வேதனை குழந்தை இன்மை. இது பெரும்பாலும் கர்ம வினையின் பொருட்டு வருவதே என்றாலும் இறை அருளும் குருவின் திருவருளும் இருந்தால் விதியை வென்றிடலாம்

 

குழந்தை பேறு இல்லை என்று இனியும் கவலை வேண்டாம் .இதோ அதற்கான வழி நம் சித்தர் கட்டிய வழி,

முதல் படி

இதை பின்பற்றி மக்கட்செல்வம் பெறுவீர்களாக !!! டொட்டமல்லுர் , சன்னபத்னா (பெங்களூர் - மைசூர் நெடுஞ்சாலை ) இங்கு உள்ள " நவநீத கிருஷ்ணனை" வெள்ளிகிழமை அன்று மாலை 4.30 -6.00 pm குள் தங்கள் பெயர் ஜன்ம நட்சத்திரம் சொல்லி "குழந்தை வரம் வேண்டி என்று சொலி அர்ச்சனை செய்யவேண்டும்.

இரண்டாம் படி

பின்பு தொடர்ந்து ஆறு வாரங்கள் அருகில் உள்ள நவநீத கிருஷ்ணனன் ஆலயம் சென்று வழிபடலாம் அல்லது ஜீவ சமாதி(ஒரே ) சென்று வழிபட வேண்டும் . கிழமையும் நேரமும் ஒன்றே . 6 வரங்கள் கட்டாயம் வழிபடவேண்டும்

நெய் வேத்யமாக

  • முதல் வாரம் 27லட்டு
  • இரண்டாம் வாரம் 27 மகிழம்பூ முருக்கு
  • 3ம் வாரம் 27 முந்திரி கொத்து
  • 4ம் வாரம் 27 கற்பூர வள்ளி பழம்
  • 5ம் வாரம் 1/4 வெண்ணெய்
  • 6ம் வாரம் அவல் பாயசம்

ஒவ்வொரு வாரம் வழிபாடு செய்யும் போது தங்கள் பெயர் நட்சத்திரம் கூறி அர்ச்சனை செய்து வழிபாட்டின் நோக்கத்தைக் கூறி வழிபட வேண்டும் .

இப்படி நம்பிக்கையுடன் செய்து வர கட்டாயம் இறை அருளால் குழந்தை பேறு கிட்டும் என்பதில் ஐயம் இல்லை - சகஸ்ரவடுகர்

ஓம் சிவ சிவ ஓம் ! ஓம் சிவசக்தி ஓம் !!