ஆன்மீக அரசு

கடந்த 30 வருடங்களாக மேற்கொண்ட ஆராய்ச்சியின் முடிவுகளை மக்களின் நலனுக்காக இதுவரை இந்த வலை தளத்தில்வெளியிட்டு வந்துள்ளோம், இனிமேல் உங்களின் ஆன்மீக சம்பந்தமான அனைத்து எனது நேரடி பார்வையில் பதில் வரும்,. இதற்கான உங்கள் கேள்வி அனைத்தும் மின்அஞ்சல் மூலமாகவே வரவேண்டும் மற்றும் அனைத்து விதமான கேள்விகளுக்கும் aanmigakkadal@gmail.com,aanmigaarasoo@gmail.com. தொடர்புகொள்ள வேண்டும். இதில் மின்அஞ்சல் தவிர வேறு எந்தவிதமான கைபேசி எண் மற்றும் மின்அஞ்சல் முகவரியும் இல்லை என்று தெரிவித்துக்கொள்கிறேன்-சகஸ்ரவடுகர்

சூட்சமமாக நிறைவடைந்த கழுகுமலை கிரிவலமும், ஆடி அமாவசை அன்னதானமும்

வணக்கம்:

 

 

 

 

 

 

 

 

காலை சரியாக ஏழு மணி அளவில் நமது முன்னோர்களை நினைத்து சிறப்பு வழிபாடு நமது கழுகாச மூர்த்தியின்  சன்னதியில் நடத்த ஏற்பாடு செய்யப்படிருந்தது . அதன் பின் நமது குருநாதர் சரியாக ஓன்பது மணி அளவில்  நமது கழுகாசமூர்த்தியின்   சன்னதியை வந்தடைந்தார். பின் அனைவரையும் அழைத்துக்கொண்டு கலுகாசமூர்த்தியின் சன்னதிக்கு அழைத்து சென்று அனைவருக்கும் சிறப்பு வழிபடு செய்யப்பட்டது.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

பின் கோவிலின் தெற்கு  வாசல் பகுதிக்கு வந்த நமது குருநாதர்வந்த அனைத்து மக்களையும் அமர வைத்து,  இந்த கிரிவல நோக்கம் என்ன? மற்றும் நாம் என்ன செய்ய வேண்டும்? என்பதனை வந்தவர்களுக்கு கிரிவலம் குறித்த தகவலை தெரிவித்தார் நம் குருநாதர். பின் பத்து அளவில் நமது கிரிவலம்சன்னதியின்  தெற்கு   வாசலில் இருந்து தொடங்கியது.

 

 

 

மிளகாய்ப்பழ சித்தர்:

 

 

 

கழுகுமலை மக்களின் அன்போடும்அவர்களின் இணைவோடும் நமது பயணம் மிளகாய்ப்பழ சித்தர் ஜீவசமாதியை அடைந்தது. அங்கு பக்தர்கள் அனைவருக்காகவும்  சிறப்பு வழிபாட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அங்கு வந்திருந்த அனைவருக்கும் தனித்தனியாக சிறப்பு அர்ச்சனைகள் நடந்தததுஅங்கு அனைவருக்கும் நமது குருநாதர்,  ஈஸ்வர பட்டர் பெருமானின் மகிமையை எடுத்துரைத்தார். பின் மகாரிஷி ஈஸ்வரபட்டர் அவர்களின் திருஉருவப்படம் வந்திருந்த அனைவருக்கும் விநியோகிக்கப்பட்டது.

 

 

கிரிவலத்தில் சூட்சமமாக கலந்து கொண்ட 

சித்த பெருமான்கள்:

 

 மக்களின் அன்போடும்அவர்களின் இணைவோடும் நமது பயணம் மிளகாய்ப்பழ சித்தர் ஜீவசமாதியை அடைந்தது. அங்கு பக்தர்கள் அனைவருக்காகவும்  சிறப்பு வழிபாட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அங்கு வந்திருந்த அனைவருக்கும் தனித்தனியாக சிறப்பு அர்ச்சனைகள் நடந்தததுஅங்கு அனைவருக்கும் மகாரிஷி ஈஸ்வரபட்டர் அவர்களின் திருஉருவப்படம் வந்திருந்த அனைவருக்கும் விநியோகிக்கப்பட்டு தியானம் நடைபெற்றது. பின்பு நமது குருநாதர்,  ஈஸ்வர பட்டர் பெருமானின் மகிமையை எடுத்துரைத்தார். அப்போது நமது குருநாதர் அவர்களைச் சூட்சமாக சித்த பெருமான்கள் சிறு சிறு வெள்ளை நிற பௌர்ணமி ஓளியைப் போல வந்து கிரிவலத்தில் கலந்து கொண்டனர்.

 

                 

 

                 

 

 

 

தர்ப்பணம்:

 

 

 

 

 

 

 

 

 

மிளகாய்ப்பழச்சித்தர் ஜீவசமதியில்  இருந்து தொடர்ந்த கிரிவலம் நேராக மலையின் பின் பகுதியில் உள்ள மிகவும் சக்திவாய்ந்த ஆம்பல் ஊரணியை அடைந்தது. அங்கு குருநாதர்கள் அவர்கள்தர்பை மூலம் தர்ப்பண நிகழ்ச்சியை தொடங்கிவைத்தார். அதன்பின் பக்தர்கள் அனைவரும்ஒருவர் பின் ஒருவராக தங்கள் முன்னோர்களை மனதில்  நினைத்துதர்ப்பணம் செய்தனர்.

 

 

அன்னதானம்:

 

 

 

 

 

 

அன்பர்கள் அனைவரும்  குருவை தொடர்ந்தபடி சரியாக பனிரெண்டு மணி அளவில் சன்னதியின் தெற்கு வாசலை அடைந்தனர். பின் கழுகுமலை  ஊர்மக்கள் அனைவரும்நமது குருநாதரை வந்து சந்தித்து ஆசி பெற்றுபின் அனைவருக்கும்நமது குருநாதர் தமது கைகளால் அன்னதானத்தை துவக்கி வைத்தார். மேலும் கிரிவலம் மற்றும் அன்னதானத்தில் கலந்துகொண்ட அனைத்து பக்தர்களுக்கும் நமது குருநாதர்காசி உட்பட 108 சிவா ஆலயங்களில் வைத்து விஷேச பூஜை செய்யப்பட்ட சொர்ணநாணயங்கள் வழங்கப்பட்டது.

 

 

நன்றி:

 

இந்த கிரிவலம் மகாரிஷி ஈஸ்வரபட்டர் அவர்களின் ஆசியாலும்,கழுகாசமூர்த்தியின் அருளாலும் கிரிவலம் இனிதாக நிறைவடைந்தது. இதில் கலந்துகொண்ட அனைத்து  அன்பர்களுக்கும்அனுமதி அளித்து உறுதுணையாக இருந்த கலுகாசமூர்த்தி ஆலய நிர்வாகத்தினர்,கழுகுமலை காவல்துறை ஆய்வாளர்தூத்துக்குடி மாவட்ட ஊடக நண்பர்களுக்கும் மற்றும் கழுகுமலை பொதுமக்களுக்கும் ஆன்மிகஅரசுமற்றும் ஆன்மிகக்கடல் குழுமம் சார்பாக நன்றியை தெரிவித்துகொள்கிறோம்.

 

ஓம் சிவ சிவ ஓம்! 

ஓம் சிவ சிவ ஓம்!!

ஓம் சிவ சிவ ஓம்!!!

 

 

 

302 Found

302 Found


nginx