மிக சிறப்பாக நடைபெற்ற சொர்ண ஆகர்சண கிரிவல நிகழ்ச்சி நிறைவு - அய்யா சகஸ்ரவடுகர் அவர்களுக்கு நன்றி !!

ஆன்மீக அரசு

கடந்த 30 வருடங்களாக மேற்கொண்ட ஆராய்ச்சியின் முடிவுகளை மக்களின் நலனுக்காக இதுவரை இந்த வலை தளத்தில்வெளியிட்டு வந்துள்ளோம், இனிமேல் உங்களின் ஆன்மீக சம்பந்தமான அனைத்து எனது நேரடி பார்வையில் பதில் வரும்,. இதற்கான உங்கள் கேள்வி அனைத்தும் மின்அஞ்சல் மூலமாகவே வரவேண்டும் மற்றும் அனைத்து விதமான கேள்விகளுக்கும் aanmigakkadal@gmail.com,aanmigaarasoo@gmail.com. தொடர்புகொள்ள வேண்டும். இதில் மின்அஞ்சல் தவிர வேறு எந்தவிதமான கைபேசி எண் மற்றும் மின்அஞ்சல் முகவரியும் இல்லை என்று தெரிவித்துக்கொள்கிறேன்-சகஸ்ரவடுகர்

மிக சிறப்பாக நடைபெற்ற சொர்ண ஆகர்சண கிரிவல நிகழ்ச்சி நிறைவு - அய்யா சகஸ்ரவடுகர் அவர்களுக்கு நன்றி !!

Featured


  ஓம் ஸ்ரீ மகா கணபதியே நமஹ ! 

 

 

தென்னாடுடைய சிவனே போற்றி !!

 

 

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !!

 

 

         




ஓம் திரு அண்ணாமலையாரே போற்றி ! 

      

ஓம் தவத்திரு உண்ணாமலை தாயே போற்றி !






 

 

 

 


                                



ஆம் நமது அய்யா திரு சகஸ்ரவடுகர் அவர்கள் கூற்று படி குறித்த நாளில் குறித்த நேரத்தில் திரு அண்ணாமலையில் "  அவன் அருளாலே அவன் தாள் வணங்கி " சொர்ண ஆகர்ஷண கிரிவலம் (14-12-2017) மிக சிறப்பாக நடைபெற்றது.

என்ன வழக்கத்துக்கு மாறாக ஈசனின் சோதனை வருண வடிவில் நம்மை சோதித்ததுகுருவுடன் செல்கையில் குரு காட்டிய தெய்வம் நம்மை ஏது செய்ய இயலும்.

வருகை தந்து விழாவினை சிறப்பித்த அனைத்து அன்பர்களுக்கும் ஆன்மீகக்கடல் மற்றும் ஆன்மீக அரசு சார்பில் நன்றிகள் !!
ஓம் சிவசிவ ஓம் !  

 

 

இரட்டை விநாயகர் சன்னதி : 

 

 


   
அன்பர்கள் நமது அய்யாவின் வருகையினை எதிர் பார்த்து ' இரட்டை விநாயகர் கோவில்அருகில் காத்துக்கொண்டு இருந்தனர்இருளில் ஒளிரும் ஒரு தீக்குச்சியின் வெளிச்சம் போல் அய்யா அவர்கள் வருகையினை கண்டதும் நமது அன்பர்கள் அய்யா அருகில் கொடி போல படர்ந்தனர்




 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 






விழாவில் தொலைந்த தன் குழந்தையினை கண்ட தாய் போல அய்யா நம்மிடம் வந்து நலம் விசாரித்து பின் அய்யன் விநாயக பெருமான் ஆசி வாங்கி  தந்ததோடு மட்டும் அல்லாமல் அவர்களும் ஆசிர்வதித்து விபூதி மற்றும் பிரசாதம் வழங்கி "சொர்ண ஆகர்ஷண கிரிவலத்தினை தலைமை பொறுப்பேற்று வனம் சுற்ற ஒரு அடி எடுத்து வைத்தார்கள்இப்படி இனிதே தொடங்கியது நமது கிரிவல நிகழ்ச்சி







 

 

 

 

 

 

 

 

 

 

 

 





"
ஓம் சிவசிவ ஓம்என்னும் பிரணவத்துடன் கூடிய லோக சூட்சும மந்திரம் விண்ணை எட்டும் சத்தத்துடன் பூமியில் நடமாடும் இடி முழக்கமாய் வலம் வர தொடங்கியது அன்பர்கள் இயற்கையின் தன்மைக்கு ஏற்றார் போல தம்மை மாற்றிக்கொண்டு நமது அய்யாவின் திருவடி பற்றி நடக்க ஆரம்பித்தனர்.




தேரடி முனீஸ்வரர் அய்யா ஆலயம் : 




திரு அண்ணாமலையில் எங்கும் நமது மஞ்சள் நிற வேஷ்டி - சேலைகள் தெரிய ஆரம்பித்ததுமக்கள் நம் கூட்டதை உற்று நோக்க ஆரம்பித்தனர்சிவ முழக்கம் வலுபெறும் வண்ணம்  இயற்கை நமக்கு கைகொடுத்தது ஆம் அந்த கொட்டும் மழையில் யாவரும் நிழற்குடையின் கீழ் இருக்கும் பட்சத்தில் நாம் நமது குருவுடன் அதும் ஓங்கார நாதத்துடன் வலம் வருவதை சிவதிருவிளையாடல் என்று சொன்னால் மிகையாகது.







 

 

 

 

 

 






"
மாதா பிதா குரு தெய்வம் " என்பது போல் பெற்றவர்களின் ஆசிர்வாதம் பெற்று இன்று குருவின் கையில் எங்களை தந்து அவர் காட்டும் கடவுளை காண வந்தோம் - என்று சொல்லாமல் சொல்லும் வண்ணமாய் நாங்கள் இயற்கையின் தொட்டிலில் குருவின் தாலாட்டில் துங்காமல் தூங்கி (தியானத்தில்வலம் வந்தோம் . 





இந்திர லிங்கம் :

இந்திர லிங்கத்தில் அய்யா ஆசி வழங்கநாங்கள் இறைவனுக்கு நன்றி செலுத்தினோம்எங்களது பயணம் தொடர ஆரம்பித்தது











எங்களுடன் தூய ஆத்மாக்கள் பல்வேறு ஸ்திர ரூபன்களுடனும் அரூபங்களாகவும் உடன் வரத்தொடங்கினர்ஓம் சிவசிவ ஓம் = ஓம் சிவசக்தி ஓம் !



அக்னி லிங்கம் : 


 










இங்கு நமக்கு தோன்றும் எதிர்மறை எண்ணங்களை தீயில் போட்டு எரிக்கும் வண்ணம் - அய்யா சகஸ்ரவடுகர் அவர்கள் நமக்கு அக்னி லிங்க ஆசி வழங்கினார்கள்சில சூட்சுமங்களை நாம் நமது வலைத்தளத்தில் எழுத இயலாது . இருந்தாலும் அய்யா சொல்லிற்கு இனங்கி  இந்த குறிப்பு சொல்லப்பட்டதுவந்தவர்கள் யாவரும் பாக்கியவான்களேஇதன் அர்த்தம் பின் வரும் காலங்களில் கட்டாயம் புரியும் என்பது அய்யாவின் சொல் . ஓம் சிவசிவ ஓம் !! 

 

 

 

 

 

எம லிங்கம் :





பயங்களில் "மரண பயமேமிக கொடிய பயம் என்பதை யாவரும் நன்கு அறிவோம்இந்த பயம் போக்கவே நமது குரு சூட்சும வடிவில் நமக்கு ஆசி வழங்கினார்கள்.












மேலும் தனித்தனியாக அன்பர்கள் அனைவருக்கும் அய்யா மரண பயம் நீங்க சிவ - நீறு அதாவது திரு என்னும் செல்வம் குறிக்கும் திருநீறு பூசி நமக்கு ஆசி வழங்கினார்கள்.. ஓம் சிவசிவ = ஓம் சிவசக்தி ஓம் !!




நிருதி லிங்கம் :




கிரிவல பாதையில் உள்ள நான்காம் லிங்கம் ஆகும்நற்பேறு-புகழ் மற்றும் நல்ல உடல் நலம் தருவது என்பதால் இவை யாவும் நாம் பெற  வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை அய்யா  சகஸ்ரவடுகர் அவர்கள் வணங்கி நமக்கும் ஆசிகளை வாங்கித்தந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.










 "யாதும் ஊரே யாவரும் கேளீர்" - என்ற கனியன் பூங்குன்றனார் அவர்களின் கூற்றுப்படி அன்பர்கள் ஒவ்வொருவரும் மற்றவரையும் தம்மை போல எண்ணி செல்லும் பொருட்டு அய்யா நம்மை வழிநடத்தினார்கள் . அன்பர்களுக்கும் அய்யா அவர்களுக்கும் நன்றி .

 

 

 

 

 

வீதிகள் தோறும் சிவ முழக்கங்கள்,





 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

ஓம் சிவசிவ ஓம் !!! 

 

 

 

 

 

சித்தர்கள் காட்டிய வழியில் - நவதானியத்தயங்கள் இயற்கைக்கும் , அன்னதாம் , சொர்ண தானம் வழங்கப்பட்டது 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 






வருண லிங்கம் :

ஆத்ம தாகம் தீர்க்கும் வண்ணம் வருணனை வரவழைத்து நம்மை ஆட்கொண்ட லிங்கம்தாகமாய் வந்தோர்க்கு இழைப்பற வந்த வற்றாத நீர் ஊற்று போல 

 









 

 






குரு அவர்களின் திருவடி ( கண்கள் ) ஆசிகள் பலவாறு செய்து எம்மை ஆட்கொண்டமைக்கு நன்றி - சிவசிவ சிவசிவா





வாயு லிங்கம் : 

வாயு - காற்று ;  நம்மை சுற்றிலும் நிறைத்த அந்த காற்றின் அரசன் தான் இந்த சிவலிங்கம் ;  நமது உடலில் மேலும் சக்திகளை கிரகித்து வைத்துக்கொள்ள 








 

 

 

 

 

 







நம் அய்யா நம்மை இங்கு -  இந்த தளத்தில் தான் ஆயத்த (தகுதி ) படுத்தினார்கள். 'நம்பிக்கையே நல்ல மருந்துஎன்பது இலை மறை காய் - சகஸ்ரவடுகர்




குபேர லிங்கம் :

சொர்ண ஆகர்ஷண கிரிவலம் அல்லது குபேர கிரிவலம் இந்த லிங்கத்திடமே கோரிக்கையாக வைக்கப்பட்டதுஇங்கு தான் பல வியப்பூட்டும் அதிசயங்கள் நிகழ்ந்தது ஆம் அன்பர்களேகிரிவலத்திற்கு வந்தவர்கள் நிச்சயம் பேறு பெற்றவர்கள் தாம்

 

 

 

 

 

 







நமது அன்பர்களுள் ஒருவர் "வரலாற்று சிறப்பு பெற்ற மேலும் ஓதுவார்களுக்கு உதவிய பைரவ சன்னதியில் இருந்து நமக்காக அய்யாவின் உத்தரவின் பெயரில் சொர்ண அபிஷேகம் செய்து அந்த சொர்ணங்களை கொண்டு வந்தார்கள்,திரு அண்ணாமலைக்கு.மேலும் இந்த பைரவ தளம் சைவ சமய நால்வர்களால் போற்றி பாடப்பட்ட இடம் என்பது குறிப்படத்தக்கது.ஈசனின் ஆட்டம் தொடங்கியதுசகஸ்ரவடுகர் அவர்கள் ஆலயத்தில் வழிபாடுகளை முடித்து விட்டு அருகில் இருந்த மரத்தடிக்கு சென்றார்கள்


















பின்பு அய்யா "வரலாற்று சிறப்பு பெற்ற மேலும் ஓதுவார்களுக்கு உதவிய பைரவ சன்னதியில் இருந்து நமக்காக அய்யாவின் உத்தரவின் பெயரில் சொர்ண அபிஷேகம் செய்த அந்த சொர்ணங்களை  மீண்டும் " குபேர லிங்கதிடமும் " வைத்து தரும் படி அர்த்தகரிடம் கூறிஅனுமதி பெற்று ஆசி வாங்கி பின் அன்பர்களுக்கு ' சகஸ்ரவடுகர் அய்யா ' விபூதி,பிரசாதம்   மற்றும் சொர்ணங்கள்  வழங்கி  ஆனந்தம் அடைந்தார்கள்பின் அய்யா சில ரகசியங்களையும் உண்மைகளையும் கூற ஆரம்பித்தார்கள்






 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 





 



 

ஈஸான்ய லிங்கம் : 

 

 

 





    

 

 

 

 

 

 

 






அஷ்ட லிங்கங்களுள் எட்டாவதுஈசன்யத்தில் அமைத்தது - பற்று அற்ற நிலையினை எய்தும் பொருட்டு, 






 

 

 

 

 

 






திரு சகஸ்ரவடுகர் அய்யா நமக்கு ஆசி வழங்கி (ஒளி - சிவதரிசனம் ) பயணம் முடியும் பொருட்டு நடை தொடர்ந்தது.





பூத நாராயணன் கோவில் :






 

 

 

 

 

 

 

 

 





ஈசான்ய லிங்கத்தில் தொடங்கிய நடை பூத நாராயணன் திருவடியில் வந்து நின்றது நமது அய்யா அவர்களோடுஇங்கு திரு சகஸ்ரவடுகர் அவர்கள் இறுதி உரை தந்து அன்பர்களை ஆசிர்வதித்து ,








 

 

 

 

 

 







லட்டு பிரசாதம் வழங்கி கிரிவல நிகழ்ச்சியினை நிறைவு செய்து வைத்தார்கள் . கிரிவலம் இனிதே நிறைவு உற்றதுஓம் சிவசிவ ஓம் !!! 

 






 

 

 

 

 

 

 

 

நன்றி

 

 
 

எங்களுடன் ஒத்துழைப்பு தந்த அனைத்து திருவண்ணாமலை மக்களுக்கும், ஊடக மற்றும் திருவண்ணாமலை காவல்துறையினர்களுக்கும் மற்றும் நமது ஆன்மீகஅன்பர்களுக்கும் ஐயா சகஸ்ரவடுகர் அவர்களின் சார்பாகவும் மற்றும் ஆன்மீககடல், ஆன்மீகஅரசு சார்பாக மீண்டும்  எங்கள் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

 

 

 

 

 

 

 

 

ஓம்   சிவசிவ   ஓம்!

 

ஓம்   சிவசிவ   ஓம்!!

 

ஓம்   சிவசிவ  ஓம்!!!