ஆன்மீக அரசு

கடந்த 30 வருடங்களாக மேற்கொண்ட ஆராய்ச்சியின் முடிவுகளை மக்களின் நலனுக்காக இதுவரை இந்த வலை தளத்தில்வெளியிட்டு வந்துள்ளோம், இனிமேல் உங்களின் ஆன்மீக சம்பந்தமான அனைத்து எனது நேரடி பார்வையில் பதில் வரும்,. இதற்கான உங்கள் கேள்வி அனைத்தும் மின்அஞ்சல் மூலமாகவே வரவேண்டும் மற்றும் அனைத்து விதமான கேள்விகளுக்கும் aanmigakkadal@gmail.com,aanmigaarasoo@gmail.com. தொடர்புகொள்ள வேண்டும். இதில் மின்அஞ்சல் தவிர வேறு எந்தவிதமான கைபேசி எண் மற்றும் மின்அஞ்சல் முகவரியும் இல்லை என்று தெரிவித்துக்கொள்கிறேன்-சகஸ்ரவடுகர்

ம ஹாலய அமாவாசை

ஆன்மீக அன்பர்கள் அனைவருக்கும் வணக்கம்!'

நாம் யார் ? நம் பிறப்பு ? நம் தோன்றலின் நோக்கம் ? இப்படி ஆராய்ச்சி கேள்விகள் ஆயிரம் உண்டு. இதன் பதில்கள் தேடலினால் மட்டுமே சாத்தியமாகும்.

அப்படிப்பட்ட தேடலில், நம் பிறப்பு நம் முன்னோரின் வழி நிற்கிறது, ஆம் அவர்கள் வழியில் தான், நம்மை இப்பூமியில் தந்து நிலைத்து நிற்கும். அவர்களுக்கு நாம் என்ன செய்தோம் ? இருக்கும் போதும் இயற்கையோடு கலந்த பின்னும் ??

 

இருக்கும் பொழுது அன்புடன் பராமரித்த நாம் இறந்த பின், அவர்களது ஆத்மாவை சாந்திபடுத்த தவறிவிட்டோம். காரணம் இந்த இயந்திர வாழ்க்கை. தன்னையும் தன் குடும்பத்தில் இருப்பார்களை கவனிக்க நேரம் இல்லாத இந்த கலியுகத்தில் மனிதன் தனது முன்னோரை நினைக்ககூட தவறி விடுகிறான், தவறியதன் விளைவு முன்னோர் சாபம். ஆம் மக்களே., எப்படி இந்த உடல் வளர்க்க உணவு முக்கியமோ அது போலவே அவர்க்களுக்கும் உணவு முக்கியம் ! குதர்க்கமான எண்ணம் தோன்றலாம் - உடலின்றி அவர்கள் எப்படி உண்பார்கள் என்று - அவர்கள் கடவுளுக்கு நிகர் ஆனவர்கள் கருவறையில் இருக்கும் இறைவனை போன்றவர்கள் நம் முன்னோர்கள்.கருவறையில் இருக்கும் தெய்வத்திற்கு (நாம்) படைக்கும் நெய்வேத்தியம் எப்படி சென்றடைகிறது அப்படி தான் இங்கும் !!! நாம் முன்னோர்களை இப்பொழுதேனும் சற்று நினைத்து பார்ப்போமா அன்பர்களே !!

அவர்களுக்கு எந்த நாட்களிலும் நாம் தர்ப்பணம் செய்யலாம் தனிப்பட்ட கால நேரம் இல்லை எனினும் "அமாவாசை" மிகுந்த சிறப்பு வாய்ந்தது. அதிலும் இம்மாதத்தில் வரும் அமாவாசை குறிப்பிடதக்கது. இம்மாத அமாவாசையை நாம் " மஹாலய அமாவாசை " என்று கூறுவோம். ஆம் அன்பர்களே வருகின்ற 12/10/2015 சோம தினத்தில் (திங்கட்கிழமை) அதிகாலை 3.08 முதல் 13/10/2015 அதிகாலை 6.28 வரை உள்ளது, இந்த தினத்தில் (12/10/2015) நாம் தர்ப்பணம் செய்வது மிகுந்த பலன் தரும் அதாவது முன்னோர் பசி தீரும், நம் சாபம் போக்கும். மேலும் கடந்த 12 ஆண்டுகள் செய்ய தவறியவர்களும் இந்த நாள் செய்வதால் , வருடம் தவறாமல் செய்வதால் கிடைக்கும் பலனைவிட அதிகம் பெறுவார்.

தர்ப்பணம் மட்டும் இன்றி இந்த நாளில் செய்ய வேண்டிய சில விஷயங்கள் இருக்கிறது அன்பர்களே! இதை செய்ய நாம் முற்பிறவியில்( குறைந்தது 3 ) சான்றோருடன் இருந்திருக்க வேண்டும் அல்லது நல்லோர் நட்புடன் இருந்திருக்க வேண்டும்.

செய்ய வேண்டியவை :

  • முதியர்களுக்கு / இயலாதவர்களுக்கு காலனிகள் ( செருப்பு ) வாங்கி கொடுக்க வேண்டும்.
  • முதியர்களுக்கு / இயலாதவர்களுக்கு அன்னதானம் ( தங்கள் வீட்டில் தயார் செய்து ) வழங்க வேண்டும் . மிக எளிய செயல் என்றாலும் செய்வது அரிது! செய்தால் பலன் நிச்சயம் !!
  • முதியோருக்கு குடை வாங்கிக்கொடுக்கலாம்.

எல்லோரும் இன்புற்று வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுவோம் !!!

ஓம் சிவசிவ ஓம் ! ஓம் சிவசிவ ஓம் ! ஓம் சிவசக்தி ஓம் ! ஓம் சிவசக்தி ஓம் !