ஆன்மீக அரசு

கடந்த 30 வருடங்களாக மேற்கொண்ட ஆராய்ச்சியின் முடிவுகளை மக்களின் நலனுக்காக இதுவரை இந்த வலை தளத்தில்வெளியிட்டு வந்துள்ளோம், இனிமேல் உங்களின் ஆன்மீக சம்பந்தமான அனைத்து எனது நேரடி பார்வையில் பதில் வரும்,. இதற்கான உங்கள் கேள்வி அனைத்தும் மின்அஞ்சல் மூலமாகவே வரவேண்டும் மற்றும் அனைத்து விதமான கேள்விகளுக்கும் aanmigakkadal@gmail.com,aanmigaarasoo@gmail.com. தொடர்புகொள்ள வேண்டும். இதில் மின்அஞ்சல் தவிர வேறு எந்தவிதமான கைபேசி எண் மற்றும் மின்அஞ்சல் முகவரியும் இல்லை என்று தெரிவித்துக்கொள்கிறேன்-சகஸ்ரவடுகர்

மன்மத ஆண்டின் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்

அனைவருக்கும் வணக்கம் ,

உங்கள் அனைவருக்கும் என் இனிய விநாயக சதுர்த்தி வாழ்த்துக்கள் .

விநாயகர் என்பவர் நமது பாரம்பரியமிக்க தமிழ் கடவுள். இதற்கு சான்றாகவே நமது மூதாதையர் நமது கோவில், வியாபாரத்தளம், கல்விக்கூடம் போன்ற இடங்களில் விநாயகருக்கு இடம் அளித்து வந்துள்ளார்கள். இது நமது இரத்தத்தில் விதைக்கப்பட்ட நன்மை குண நலன்களில் ஒன்று . அதனால் நம் உயர்ந்த நாகரீகத்தில் இன்றளவும் இது ஆங்காங்கு பயன்பாட்டில் உள்ளது.

 

விநாயகர் சதுர்த்தி

விநாயகர் நம் வழிபாட்டு கடவுளாக மாறியதற்கு ஒரு முக்கியமான கதை ஒன்று உள்ளது. இதை இந்த நல்ல நேரத்தில் உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். அன்றைய நமது பாடசாலை என்பது காடுகள் தான், அங்கு சென்று நமது அரசன் முதல் சாமான்யன் வரை அனைவரும் சென்று கல்வி கற்றுகொள்வார்கள். அப்படி செல்பவர்கள் தினமும் குருவிடம் எதாவது சந்தேகம் கேட்டு கொண்டிருப்பது வழக்கம். அப்படி ஒரு நாள் ஒரு சீடன் குருவிடம் " குருவே எனக்கு ஒரு சந்தேகம்?, மரம், செடி, போன்றவை எல்லாம் வழிபட்டு உரிய பொருளாகி வருகிறது. இதில் நாம் ஆராயிந்து பார்க்க போது பார்க்கும் போது நன்மை என்று எடுத்துக் கொண்டால், காடுகளில் வேறு எதாவது இருக்கிறதா? என்று கேள்வியை கேட்டவுடன்., அதற்கு எப்போதும்போல் தனக்கே உரிய பாணியில் சிரித்துகொண்டே மாணவர்களைப் பார்த்து நீங்கள் அனைவரும் இன்று கட்டுக்குள் பயணம் மேற்கொள்ளுங்கள் சிறிது நேரம் கழித்து உங்களால் பார்வையிலும், சிந்தனையிலும் பதிந்த விஷயங்களை கொண்டே உங்கள் சக மாணவனின் கேள்விக்கான விடையை தெரிந்து கொள்ளலாம் என்றார். அனைவரும் எழுந்து சென்று சரியாக குரு சொன்ன மணி நேரத்திற்குள் வந்து குருவின் முன் அமர்ந்தார்கள். அந்த கேள்வி கேட்ட சீடன் மட்டும் எழுந்து குருவே என்னுடைய பயண அனுபவத்தில் என் கருத்துக்களை உங்கள் முன் எடுதுரைக்க விளைகிறேன் என்றான். குரு இசைந்தவுடன், அவன் தன்னுடைய அனுபவத்தை சொல்ல ஆரம்பித்தான், நான் செடிகளைப் பார்த்தேன் அதில் மூலிகை வைகைகள் இருப்பதால் அதனை தெய்வங்கள் தமது அருகில் வைத்துக்கொண்டு இருப்பதால், மனிதர்களுக்கு செடி பற்றிய விஞஞான அறிவியல் வழிபாடு இருப்பதை உணர்ந்தேன், மரம் நமது உடலின் சுவாச வெளிபாட்டையும், அந்த சுவாசமிக்க உடல் பிற உயிர்களுக்கு பயன் உள்ளதாக அமைய வேண்டும் என்றும் புரிகிறது , இறுதியாக மிருகங்களின் அமைப்பை என்னால் புரிந்து கொள்ள எதுவும் இல்லையே? என்று தோன்றுகிறது, ஆனால் நான் சென்று வந்த வழியில் விநாயகரைத்தான் கண்டேன் மிருகங்கள் ஒன்றையும் நான் காணவில்லை என்னால் அதை மட்டும் புரிந்து கொள்ள முடியவில்லை. நான் திரும்பவும் சென்று மிருகம் ஏதாவது தெரிகிறதா? என்று பார்துவிட்டு வரட்டுமா? அதற்குள் தாங்கள் கால அவகாசம் வேறு முடிந்துவிட்டது, என்னை தெளிவுபடுத்துங்கள் குருவே என்று கூறி முடித்தான், இதை கேட்டுவிட்டு குரு, சற்று எழுந்து மாணவர்களே உங்கள் நண்பன் கூறிய அனைத்தும் உண்மை. நீ வரும் வழியில் மிருகத்தையும் கண்டுவிட்டாய் என்றார், அதுதான் ஈசன் அன்றைய நாளில் நடத்திய திருவிளையாடல் புரிந்திரருக்கும் இவ்வுலகிற்கு. அதிலும் களியின் (யானை) உருவத்தில்தான் மிக முக்கிய இரகசியம் மானவை என்று அந்த மாணவர்களுக்கு கூறினார். அதுதான் விநாயகர் உருவம்.அப்படி பட்ட இந்த உருவ அமைப்பை நாம் எப்படி வழிப வேண்டி நம்முடைய இன்னல்களை தீர்த்துக்கொள்ள வேண்டும் என்று இரகசியத்தை அவர்களிடம் கூறினார். அந்த இரகசியம் பின்வருமாறு அதிலும் அதன் சிறப்பு விநாயகர் சதுர்த்தி அன்று மிகவும் வலிமை பெற்றதாக மாறும் என்பதை அவர் தெரிவித்தார்.

சிறப்பு வழிபாட்டு முறை

சதுர்த்தி அன்று விநாயகர் பெருமானை நாம் உரிய முறையில் வழிபடுவோமேயானால் நிச்சயம் நமது அனைத்துப் பிரச்னைகளிலும் இருந்து ஒரு நிரந்தர தீர்வு ஒன்று கிட்டும். அந்த இரகசியத்தை உங்களிடம் பகிர்ந்து கொள்வதில் மிகவும் சந்தோஷம் கொள்கிறேன். பின்வரும் விதிமுறையை சரியாக கடைபிடிக்கவும்

நீங்கள் அனைவரும் யானைமுகனின் தோற்றத்தில் உள்ள யானைக்கு., நீங்கள் கரும்பு வாங்கி கொடுத்தால்., உங்கள் துயரம் முற்றிலும் அகலும் என்ற செய்தியோடு., என்னுடைய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் தெரிவித்துக்கொள்கிறேன். நன்றி

ஓம் ஹ்ரீம் மஹா பைரவாய நமஹ

- சகஸ்ரவடுகர்