ஆன்மீக அரசு

கடந்த 30 வருடங்களாக மேற்கொண்ட ஆராய்ச்சியின் முடிவுகளை மக்களின் நலனுக்காக இதுவரை இந்த வலை தளத்தில்வெளியிட்டு வந்துள்ளோம், இனிமேல் உங்களின் ஆன்மீக சம்பந்தமான அனைத்து எனது நேரடி பார்வையில் பதில் வரும்,. இதற்கான உங்கள் கேள்வி அனைத்தும் மின்அஞ்சல் மூலமாகவே வரவேண்டும் மற்றும் அனைத்து விதமான கேள்விகளுக்கும் aanmigakkadal@gmail.com,aanmigaarasoo@gmail.com. தொடர்புகொள்ள வேண்டும். இதில் மின்அஞ்சல் தவிர வேறு எந்தவிதமான கைபேசி எண் மற்றும் மின்அஞ்சல் முகவரியும் இல்லை என்று தெரிவித்துக்கொள்கிறேன்-சகஸ்ரவடுகர்

கிரிவலம் செல்வோம் !!! கிரகங்களை வெல்வோம் !!! கழுகுமலை கிரிவலம் : அய்யா சகஸ்ரவடுகர் அவர்களுடன்

  • aanmeegaarasoo
  • arunachaleswarar
  • girivalam
  • astalingam
  • annathanam

 

ஓம் சிவ சிவ ஓம் !!!


ஓம் அண்ணாமலையாரே போற்றி !!

ஓம் உண்ணாமலை தாயே போற்றி போற்றி !!



ஆன்மீக அன்பர்களுக்கு வணக்கம் .


கழுகுமலையில் ஈஸ்வரபட்டர்  அய்யாவின் நினைவாக மூன்றாம் ஆண்டு சித்தக்கிரிவலம்



    கழுகுமலையில்  ' மகாயோகி ஈஸ்வரபட்டரின் அய்யாவின் ' நினைவாக பத்தாம் ஆண்டு நிறைவாக   " குருநாதர் அய்யா சகஸ்ரவடுகர் அவர்கள் " தலைமையில் மூன்றாம் ஆண்டு சித்தக்கிரிவலம் மற்றும்  அன்னதானம்  நடைபெறுகிறது.


    கிரிவலம் சரியாக 2.8.2016 செவ்வாய்க்கிழமை அன்று சரியாக மதியம் 12 அளவில் கழுகாசமூர்த்தியின் சன்னதியில் இருந்து ஆரம்பிக்கிறது.


    கிரிவலம் முடிந்த பின்  நமது அய்யா சகஸ்ரவடுகர் அவர்களின் வாழ்வை வளமாக்கும் ஆன்மீகச் சொற்பொழிவு  உள்ளது.




மகாரிஷி அய்யா ஈஸ்வரபட்டர்

 

 




ஸ்ரீலஸ்ரீ ஈஸ்வரபட்டர் அவர்கள் கன்னட பிராமனர்  குலத்தில் பிறந்து, திருமணம் செய்து கொள்ளாமலேயே, பல சித்த ஞானிகளிடம் ஆசி பெற்று,  ஆன்மீகத்தில் பல்வேறு நிலைகளைக் கடந்து, இறுதியாக  தென்னிந்தியாவை வந்தடைந்தார். இங்கிருக்கும் எளியோர்களுக்கு, அவர்கள் துன்பங்களில் இருந்து விடுபட அருள்புரிந்தார். பின் பழனியம்பதிக்கும் வந்து மக்களின் குறைகளை தீர்த்து பல சித்துகள் புரிந்தார். ஐயா அவர்கள்  பழனி கிரிவலப்பாதையில் மலைக்கு அடியில்  ஜீவ ஒளி  வடிவமாகி  47 வருடங்கள் ஆகின்றது. இடும்பன் கோவில் அருகாமையில் ஜீவ அதிர்ஷடானம் அமைந்துள்ளது.


                       வாழ்க்கையின் பிரச்சினைகளின் பிடியில் உள்ளவர்கள் " ஓம் ஈஸ்வரபட்டாய நமஹ " என்று நம்பிக்கையோடு பிரார்த்தனை செய்தால் மகான் அவர்கள் " சூட்சுமமாக " நம்மை சீர்படுத்துவார் - திரு மிஸ்டிக் செல்வம் ஐயா அவர்கள்.  இந்த மகானின் சீடர்தான் நம் குருநாதர் சகஸ்ரவடுகர். 




கிரிவலம்

 


 

 

 

வருகிற ஆடி அமாவாசை (02.08.2016) செவ்வாய்கிழமை  அன்று நடைபெற இருக்கிறது.


  நாம்  நமது வாழ்வில் சந்திக்கும் ஏற்ற இறக்கங்களை எந்த ஒரு அளவீட்டாலுமோ அல்லது நுண்ணோக்கியினாலோ  நம்மால் அளக்க முடியாது, அதனை சமன் செய்யவும் முடியாது,  ஆன்மிக பிரார்த்தனைகளும், நமக்கு  குருமார்களால்   கிடைக்கப்படும் வழிகாட்டுதல்களும்  எல்லாவித  பிரச்சனைகளில் இருந்து நம்மை விடுவிக்கிறது. அதற்கான சரியான முதல் படி, சித்தர்களின் தரிசனமும், அருளும், ஆசியும்தான். இப்படிபட்ட விஷேசதரிசனம் சக்திகளையும், அற்புதங்களையும்  அளவில்லாமல் அருளக்கூடியவர்தான் மகரிஷி  ஈஸ்வரபட்டர்  அவர்கள். அவர்தம் நினைவாக நாம் மேற்கொள்ள இருக்கும் இந்த கிரிவலம் நமது இன்னல்களை முழுவதுமாக துடைத்து நம்மை நெறிப்படுத்தும். வாழ்வை வளப்படுத்தி முன்னேற்றும்.

 

 

அமாவாசை கிரிவலம்  ??

 


 

 


இந்து சமயம்  மற்றும் ஜோதிட சாஸ்திர மரபுப்படி அமாவாசை தினங்களில்தான் மறைந்த நம் முன்னோர், தங்களின் சந்ததியினரின் வழிபாடுகளை ஏற்க பூவுலகுக்கு வருகிறார்கள் என்பது நம்பிக்கை. எல்லா தமிழ் மாத அம்மாவசை  தினங்களுமே சிறப்பானவைதான். ஆனால் ஆடி அமாவாசை மற்றும் தை அமாவாசை தினங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. அதில்  அமாவாசையின் பொழுது  பூமி எண்ணற்ற நற்கதிர்களை ஈர்க்கும்,.அப்போது  நாம் செய்யும்  நமது பித்ரு சாபவிமோச்சன வழிபாடு வெற்றி பெறும் மேலும் நம் மனதில் இருக்கும்  இருள் நீங்கி அருள் என்னும் வெளிச்சம் பெற அமாவாசை தினங்களே மிகவும் சரியான நாள். 

 

 

 

தர்ப்பணம்

 

 

 

 

பூர்வ ஜென்ம கர்மாவினால் பாதிக்கப்படுவோர், இந்நாளில் ராமேஸ்வரம் கடல் தீர்த்தத்திலோ, முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரியில் உள்ள தீர்த்தத்திலோ நீராடினால் பாவம் நீங்கி சுபிட்சம் பெறுவர் என்பது நம்பிக்கை. இதனாலேயே கன்னியாகுமரி கடற்கரையிலும் பித்ரு  நினைவாக  தை அமாவாசை நாளில் தர்ப்பணம் செய்வர். இதுபோல், நெல்லை மாவட்டம் குற்றாலம், பாபநாசம் உள்ளிட்ட அருவிகளில் புனித நீராடும் வழிபாடு தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. ஆனால்   நமது  சித்தர்கள் மிகவும் எளிமையான தர்ப்பண முறையையும் நமக்காக உருவாக்கி  இருக்கிறார்கள். அதை   குருநாதர்  நமக்காக  விளக்கி நம்மையும் செய்ய வைக்க விருக்கிறார்.  நாம் தர்ப்பணம் செய்து நமது பாவங்களை முற்றிலுமாக கரைத்துவிடலாம்.

                                                         பல ஆண்டுகளாக மூதாதையர்களை நினைக்கத் தவறியவர்கள், மகாரிஷி ஶ்ரீ ஈஸ்வரபட்டர் நினைவாக நடைபெறும் கிரிவல நிகழ்ச்சியில் கலந்து கொண்டாலே,  ஆண்டு முழுவதும் தர்ப்பணம் செய்ததற்கு சமம் என்பது  சிவனடியார்களின் வாக்கு. ஆடி மாதம் கழுகுமலையில் சித்தர்களின் வருகைகள் அதிகமாக இருக்கும், இந்த புண்ணிய பூமியில் இன்னும் மனிதர்களின் கண்ணில் அகப்படாமல்  பல ஜீவசமாதிகள் உள்ளன. அந்த மகான்களின் ஆசியும் இந்த வேலையில் அதிகமாக வெளிப்படும்.   அவர்களை வரவேற்கவே  ஆடி அமாவாசையில் இந்த கிரிவலத்தினை நமது ஆன்மீக வழிகாட்டி குருநாதர் அய்யா சகஸ்ரவடுகர் அவர்கள் இறையருளால் நடத்தி வருகின்றார்கள்.


 

 

 

 

கழுகுமலை வரும் வழி

 

 

 

 


நம்மை வழிநடத்தும் ஆன்மீக அரசு!!!

 

ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ

302 Found

302 Found


nginx