ஆன்மீக அரசு

கடந்த 30 வருடங்களாக மேற்கொண்ட ஆராய்ச்சியின் முடிவுகளை மக்களின் நலனுக்காக இதுவரை இந்த வலை தளத்தில்வெளியிட்டு வந்துள்ளோம், இனிமேல் உங்களின் ஆன்மீக சம்பந்தமான அனைத்து எனது நேரடி பார்வையில் பதில் வரும்,. இதற்கான உங்கள் கேள்வி அனைத்தும் மின்அஞ்சல் மூலமாகவே வரவேண்டும் மற்றும் அனைத்து விதமான கேள்விகளுக்கும் aanmigakkadal@gmail.com,aanmigaarasoo@gmail.com. தொடர்புகொள்ள வேண்டும். இதில் மின்அஞ்சல் தவிர வேறு எந்தவிதமான கைபேசி எண் மற்றும் மின்அஞ்சல் முகவரியும் இல்லை என்று தெரிவித்துக்கொள்கிறேன்-சகஸ்ரவடுகர்

நிகழும் மன்மத ஆண்டின்- ஆடி அம்மாவாசை கிரிவலம்

கழுகுமலையில் ஈஸ்வரபட்டர் அய்யாவின் நினைவாக இரண்டாம் ஆண்டு கிரிவலம்

  • கழுகுமலையில் மகாயோகி ஈஸ்வரபட்டரின் அய்யாவின் நினைவாக ஒன்பதாவது ஆண்டு நிறைவாக குருநாதர் சகஸ்ரவடுகர் தலைமையில் இரண்டாம் ஆண்டு கிரிவலம் மற்றும் அன்னதானம் நடைபெறுகிறது.
  • கிரிவலம் சரியாக 14.08.15 அன்று 10.00am அளவில் கழுகாசமூர்த்தியின் சன்னதியில் இருந்து ஆரம்பிக்கிறது.
  • கிரிவலம் முடிந்த பின் சகஸ்ரவடுகர் அவர்களின் சொற்பொழிவு உள்ளது

 

மகாரிஷி அய்யா ஈஸ்வரபட்டர்

வணக்கம் .,
ஸ்ரீலஸ்ரீ ஈஸ்வர பட்டர் அவர்கள் கன்னட பிராமனர் குலத்தில் பிறந்து, திருமணம் செய்து கொள்ளாமலேயே, பல சித்த ஞானிகளிடம் ஆசி பெற்று, ஆன்மீகத்தில் பல்வேறு நிலைகளைக் கடந்து, இறுதியாக தென்னிந்தியாவை வந்தடைந்தார். இங்கிருக்கும் எளியோர்களுக்கு, அவர்கள் துன்பங்களில் இருந்து விடுபட அருள்புரிந்தார். பின் பழனியம்பதிக்கும் வந்து மக்களின் குறைகளை தீர்த்து பல சித்துகள் புரிந்தார். ஐயா அவர்கள் பழனி கிரிவலப்பாதையில் மலைக்கு அடியில் ஜீவ ஒளி வடிவமாகி 46 வருடங்கள் ஆகின்றது. இடும்பன் கோவில் அருகாமையில் ஜீவ அதிர்ஷடானம் அமைந்துள்ளது.

வாழ்க்கையின் பிரச்சினைகளின் பிடியில் உள்ளவர்கள் ஒம் ஈஸ்வர பட்டாய நமஹ என்று நம்பிக்கையோடு பிரார்த்தனை செய்தால் மகான் சூட்சுமமாக நம்மை சீர்படுத்துவார் - திரு மிஸ்டிக் செல்வம் ஐயா அவர்கள். இந்த மகானின் சீடர்தான் நம் குருநாதர் சகஸ்ரவடுகர்.

கிரிவலம்

வருகிற ஆடி அம்மாவசை (14.08.15) வெள்ளிக்கிழமை அன்று நடைபெற இருக்கிறது. நாம் நமது வாழ்வில் சந்திக்கும் ஏற்ற இறக்கங்களை எந்த ஒரு அளவீட்டாலுமோ அல்லது நுண்ணோக்கியினாலோ நம்மால் அளக்க முடியாது, அதனை சமன் செய்யவும் முடியாது, ஆன்மிக பிரார்த்தனைகளும், நமக்கு குருமார்களால் கிடைக்கப்படும் வழிகாட்டுதல்களும் அத்தைகைய பிரச்சனைகளில் இருந்து நம்மை விடுவிக்கிறது. அதற்கான சரியான முதல் படி, சித்தர்களின் தரிசனமும், அருளும், ஆசியும்தான். இப்படிபட்ட விஷேசதரிசனம் சக்திகளையும், அற்புதங்களையும் அளவில்லாமல் அருளக்கூடியவர்தான் மாகரிஷி ஈஸ்வரபட்டர். அவர்கள் நினைவாக நாம் மேற்கொள்ள இருக்கும் இந்த கிரிவலம் நமது இன்னல்களை முழுவதுமாக துடைத்து நம்மை நெறிப்படுத்தும்.

அம்மாவாசையில் ஏன் கிரிவலம்

இந்து சமயம் மற்றும் ஜோதிட சாஸ்திர மரபுப்படி அம்மாவாசை தினங்களில்தான் மறைந்த நம் முன்னோர் தங்களின் சந்ததியினரின் வழிபாடுகளை ஏற்க பூவுலகுக்கு வருகிறார்கள் என்பது நம்பிக்கை. எல்லா தமிழ் மாத அம்மாவசை தினங்களுமே சிறப்பானவைதான். ஆனால் ஆடி அம்மாவாசை மற்றும் தை அம்மாவாசை தினங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. அதில் அம்மாவாசையின் பொழுது பூமி எண்ணற்ற நற்கதிர்களை ,ஈர்க்கும்,.அப்போது நாம் செய்யும் நமது பித்ரு சாபவிமோச்சனம் வழிபாடு வெற்றி பெறம் மற்றும் நம் மனதில் இருக்கும் இருள் வெளிச்சம் பெற அம்மாவசை தினங்களே மிகவும் சரியான நாள். இன்னும் அறிவியல் வாயிலாக சொல்லப்போனால்கூட நம் உடலும், மனதும் நமது பிரார்த்தனைக்கு ஒருங்கிணையும் என்பது அனுபவ உண்மை.

தர்ப்பணம்

பூர்வ ஜென்ம கர்மாவினால் பாதிக்கப்படுவோர், இந்நாளில் ராமேஸ்வரம் கடல் தீர்த்தத்திலோ, முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரியில் உள்ள தீர்த்தத்திலோ நீராடினால் பாவம் நீங்கி சுபிட்சம் பெறுவர் என்பது நம்பிக்கை. இதனாலேயே கன்னியாகுமரி கடற்கரையிலும் பித்ரு நினைவாக தை அமாவாசை நாளில் தர்ப்பணம் செய்வர். இதுபோல், நெல்லை மாவட்டம் குற்றாலம், பாபநாசம் உள்ளிட்ட அருவிகளில் புனித நீராடும் வழிபாடு தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. ஆனால் நமது சித்தர்கள் மிகவும் எளிமையான தர்ப்பண முறையையும் நமக்காக உருவாக்கி இருக்கிறார்கள். அதை குருநாதர் நமக்காக விளக்கி நம்மையும் செய்ய வைக்க விருக்கிறார். நாம் தர்ப்பணம் செய்து நமது பாவங்களை முற்றிலுமாக கரைத்துவிடலாம்.

பல ஆண்டுகளாக மூதாதையர்களை நினைக்கத் தவறியவர்கள், மகாரிஷி ஈஸ்வரபட்டர் நினைவாக நடைபெறும் கிரிவல நிகழ்ச்சியில் கலந்து கொண்டாலே, ஆண்டு முழுவதும் தர்ப்பணம் செய்ததற்கு சமம் என்பது சிவனடியார்களின் வாக்கு. ஆடி மாதம் கழுகுமலையில் சித்தர்களின் வருகைகள் அதிகமாக இருக்கும், இந்த புண்ணி ய பூமியில் இன்னும் மனிதர்களின் கண்ணில் அகப்படாமல் பல ஜீவசமாதிகள் உள்ளன. அந்த மகான்களின் ஆசியும் இந்த வேலையில் அதிகமாக வெளிப்படும். அவர்களை வரவேற்கவே ஆடி அமாவாசையில் தர்பணம் தரப்படுகிறது.

குறிப்பு

கிரிவலத்தில் கலந்து கொள்ள வரும் அணைத்து அன்பர்களும் மஞ்சள் நிற ஆடையுடன் கழுகாசமூர்த்தியின் சன்னதியின் முன்பாக சரியாக 14.08.15 அன்று காலை 09.30am அளவில் வந்து சேறுமாறு ஆன்புடன் குருநாதர் சகஸ்ரவடுகர் அவர்கள் மற்றும் ஆன்மிகக்கடல் மற்றும் ஆன்மிகஅரசு குழுமம் சார்பாக அனைவரையும் வரவேற்கிறோம்.

ஓம் ஹ்ரீம் மஹா பைரவாய நம்ஹ

302 Found

302 Found


nginx