ஆன்மீக அரசு

கடந்த 30 வருடங்களாக மேற்கொண்ட ஆராய்ச்சியின் முடிவுகளை மக்களின் நலனுக்காக இதுவரை இந்த வலை தளத்தில்வெளியிட்டு வந்துள்ளோம், இனிமேல் உங்களின் ஆன்மீக சம்பந்தமான அனைத்து எனது நேரடி பார்வையில் பதில் வரும்,. இதற்கான உங்கள் கேள்வி அனைத்தும் மின்அஞ்சல் மூலமாகவே வரவேண்டும் மற்றும் அனைத்து விதமான கேள்விகளுக்கும் aanmigakkadal@gmail.com,aanmigaarasoo@gmail.com. தொடர்புகொள்ள வேண்டும். இதில் மின்அஞ்சல் தவிர வேறு எந்தவிதமான கைபேசி எண் மற்றும் மின்அஞ்சல் முகவரியும் இல்லை என்று தெரிவித்துக்கொள்கிறேன்-சகஸ்ரவடுகர்

Items filtered by date: November 2017

 

 

 

 

 

ஓம் ஸ்ரீ மகா கணபதியே நமஹ

 

 

 

தென்னாடுடைய சிவனே போற்றி !!

 

 

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !!

 

 

 

கார்த்திகை:

 

    தமிழ்நாட்டில் கார்மேகம் சோணைமழை பொழியும் மாதம் கார்த்திகை மாதம். கார் என்றும், கார்த்திகை என்றும் வழங்கப்படும் காந்தள் பூ மிகுதியாக மலரும் காலம் கார்த்திகை மாதம். கார்த்திகை எனப்படும் விண்மீன் கூட்டம் கீழ்வானில் மாலையில் தோன்றும் மாதம் கார்த்திகை மாதம். கார்த்திகை நட்சத்திரம் ஆயிரக்கணக்கான நட்சத்திரங்களைக் கொண்டிருந்த போதிலும் அதிலுள்ள ஏழு நட்சத்திரங்கள் பிரகாசமானவை. இதிலுள்ள மிகப்பிரகாசமான ஆறு நட்சத்திரங்களே கார்த்திகை நட்சத்திரக் கூட்டம் (Pleiades) எனப்படுகிறது.

 

 

 

 

 

 

 

 

 

பண்டைய தமிழர்கள் ஒரு மாதத்தில் உள்ள நாட்களை  27 நாள்மீன்பெயர்களால் வழங்கி வந்தனர். அந்த நாள்மீன்களில் ஒரு நாள்மீன் கார்த்திகை-நாள். இவ்வாறு ஒவ்வொரு மாதமும் வருகின்ற கார்த்திகை-நாள் முக்கியமான நாளாக தமிழர்களால் வழிபடப்பட்டு வருகின்றது.

 

 

புராணக் குறிப்புகள்:

 

 

 

    கார்த்திகை நட்சத்திரத்தைச் சுற்றி பல புராணங்களும், கவிதைகளும் வளர்ந்துள்ளன. ஆறு நட்சத்திரங்கள் சேர்ந்து சேரவன தொட்டியில் ஆறு குழந்தைகளாகப் பிறக்கின்றன. எனவே அவர் கார்த்திகேயர் என அழைக்கப்படுகிறார். ஆறு மூலிகைகளான தத்ரூபூசம், அக்ராம், சாதியோஜதம், வாமதேவன், ஈசானம், அடோம்கம். அந்த ஆறு குழந்தைகளுக்கு ஆறு கதாபாத்திரங்கள் மற்றும் ஆறு குழந்தைகளுக்கு, ஆறு கார்த்திகை பெண்களால்  வளர்க்கப்பட்டு பின்னர் தாயார் பார்வதி அவர்களால் ஒன்றிணைக்கப்பட்டுள்ளது. ஆறுமுகம் (ஆறுமுகம் மற்றும் பன்னிரண்டு கைப்பற்றப்பட்ட கடவுள்) ஆகியவற்றில் இணைந்த போது, ​​அவரது ஆறு நாடகங்களுடன் சித்தரிக்கப்பட்டார், மேலும் ஆறு பெயர்களுடன் வணங்கினார்.

 

 

 

 

 

 

 படைத்தல் தொழிலைச் செய்யும் பிரம்மனும் காத்தல் தொழிலைச் செய்யும் விஷ்ணுவும் நானே பெரியவன் என்று வாதாடிப் பலவருடங்கள் போரிட்டனர். சிவபெருமான் சோதிப்பிழம்பாகத் தோன்றினார். அடியையும் முடியையும் தேடும்படி அசரீரி கூறியது. இருவரும் அடிமுடி தேடிக் காணமுடியாமல் சிவபெருமானே முழுமுதற் கடவுள் என்று ஏற்றுக்கொண்டனர். அவர்கள் இருவரும் தாம் கண்ட சோதியை எல்லோரும் காணும்படி காட்டியருள வேண்டும் என்று விண்ணப்பிக்க அவர் திருக்கார்த்திகை நட்சத்திரத்தன்று காட்டியருளினார். இந்தத் தத்துவத்தை விளக்குவதே கார்த்திகை விளக்கீடு ஆகும்.

 
 
 

 

 

 

 விஷ்ணுவின் அம்சமான மோகினி மூலம் சைவ வைஷ்ணவ ஜோதியாக ஐயப்பன் பூலோகத்தில் அவதரித்தார். ஐயனின் வரவிற்காகக் காத்திருந்த தேவர்கள் பகவானை பொன்னம்பல மேட்டில் பூஜை செய்து மகிஷியினால்படும் துயரத்தைக் கூறினர். மணிகண்டன் தேவலோகம் சென்று மகிஷியை வென்று பூமிக்குத் தள்ள மகிஷி அழுதா நதிக்கரையில் விழுந்தாள்.

ஐயன் அவள்மேல் நர்த்தனமாடி, மகிஷியை உயிரிழக்க செய்தார். மகிஷி மீண்டும் சாப விமோசனம் பெற்று ஐயனை அடையும் ஆவலைத் தெரிவித்தாள். ஆனால் தான் பிரம்மச்சர்ய நிஷ்டையுள்ளவனானதால் அது சாத்தியமாகாது என்றும், தான் இருக்கும் இடத்தின் இடப்பக்கத்தில் மாளிகைப்புரத்தம்மா என்ற பெயருடன் அவர் விளங்கிவர ஐயன் அருள் செய்தார். மகிஷியின் கொடுமை நீங்கியதால் சந்தோஷமடைந்த தேவர்கள் மணிகண்டனை பலவிதமாக துதித்து பூஜித்தனர். மணிகண்டன் கட்டளைப்படி, அகத்திய முனிவரின் ஆலோசனையுடன் மன்னர் ஊண், உறக்கமின்றி தானே மேற்பார்வை செய்து சபரிமலையில் பதினெட்டு படியோடு கூடிய அழகிய கோயிலை கட்டினார். 

 

 

 

ஆண்டுதோறும் லட்சோப லட்சம் மக்கள் ஜாதி, மத பேதமின்றி கார்த்திகை மாதம் துவங்கியதும் ஐயப்ப பக்தர்கள் அனைவரும் மாலை அணிந்து 48 நாட்கள் கடும் விரதம் அனுசரித்து சபரிமலை வந்து புனித பதினெட்டுப்படி ஏறி ஐயப்பன் அருள் பெற்று வருகின்றனர். ஆண்டுதோறும் மகர சங்கராந்தி தினத்தன்று ஐயப்பன் பக்தர்களுக்கு ஜோதி வடிவில் காட்சியளித்து அருள்பாலிக்கிறார்.

 

பைரவ சஷ்டி கவசம்:

 

 

 

 

   இத்தகைய சிறப்பு மிக்க கார்த்திகை மாதத்தில், இது எல்லாவற்றையும் விட நம் பைரவருடைய சஷ்டி கவசம் பாடுவது மேலும் சிறப்பாகும் . என்ன இது கார்த்திகை மாதத்தில் கந்த சஷ்டி கவச பாடலை பாடுவது தான் வழக்கம், வழக்கத்துக்கு மாறாக புதிதாக பைரவ  சஷ்டி கவச பாடலை பாடுவது சிறப்பு மிக்க தா?  என்ன கேள்வி உங்களுக்கு எழுகிறது அல்லவா!.

 

 

 

 

 

 

ஆம் அதை விட சிறப்புடையது தான்  இந்த பைரவ சஷ்டி கவசம். பைரவ சஷ்டி கவச பாடலை எப்போது பாட வேண்டும், அதனால் கிடைக்கும் நன்மைகள்  பற்றி நமது குரு திரு சகஸ்கரவடுகர் அய்யா கூறிய வழிபாட்டு  முறையை இக்கட்டுரையில் பார்ப்போம்.

 

 

பைரவ சஷ்டி கவச பாடல் :

 

 

 

 

வணங்குவோர்க்கு வாழ்வு தரும்

வாழ்த்துவோர்க்கு வசதி தரும்

போற்றுவோர்க்கு புகழ் தரும்

தூற்றுவோர்க்கும் இன்பம் தரும்

 

நினைத்தாலே நிம்மதி தரும்

நீடு வாழ் பைரவ சஷ்டி கவசமே!

பக்தர் பரவசமுற பலன் தரும்

பைரவர் திருவடியே கதி

 

சஷ்டியின் சிறப்பில் சண்டபைரவர்

திருஷ்டியால் காக்கும் காலபைரவர்

அகிலம் போற்றும் அஷ்ட பைரவர்

அன்பால் காக்கும் ஆனந்த பைரவர்

 

சொர்ணம் தருவார் சொர்ண பைரவர்

சுகமே தருவார் சுப்பிரமணிய பைரவர்

சங்கடம் தீர்ப்பார் சட்டநாத பைரவர்

சகலமும் தருவார் சர்வதேவ பைரவர்

 

வருக வருக வடுகபைரவா வருக

வளம்தர வருக வஜ்ரபைரவா வருக

வருக வருக உக்கிரபைரவா வருக

உவகைதர வருக உலகபைரவா வருக

 

பைரவி போற்றும் பைரவா வருக

ஆனந்த நடனா ஆனந்த பைரவா வருக

ஆணவம் அழிக்கும் ஆக்ரோஷ பைரவா வருக

ஆபத்தில் காக்கும் ஆபதோத்தாரண பைரவா வருக

 

காலத்தின் நாயகா கால பைரவா வருக

கலக்கம் போக்கும் கதாயுத பைரவா வருக

நலம் தரும் நரசிங்க பைரவா வருக

நாளும்காக்கும் நாக பைரவா வருக

 

கோபம் போக்கும் கோவிந்த பைரவா வருக

ஞாலம் போற்றும் ஞானபைரவா வருக

தாகம் தீர்க்கும் தராபாலன பைரவா வருக

மோகம் போக்கும் முண்டனப்பிரபு பைரவா வருக

 

அவலம் போக்கும் அஸிதாங்கபைரவா வருக

குவலயம் காக்கும் குரோதன பைரவா வருக

உலகம் புரக்கும் உன்மத்த பைரவா வருக

திருவருள் புரியும் திகம்பர பைரவா வருக

 

சண்டைகள் தடுக்கும் சண்டபைரவா வருக

ருசியான  உணவுதரும் ருருபைரவா வருக

சந்தோஷம் தரும் சம்கார  பைரவா வருக

பித்தம் போக்கும் பீஷணபைரவா வருக

 

வருகவருக வரமருளும் வரதபைரவா வருக

தருகதருக தாராளமாய் தரும் தயாள பைரவா வருக

பருகபருக பழரசம் தரும் பிதாமக பைரவா வருக

பெருகபெருக செல்வம் தரும் பிசித பைரவா வருக

 

நடனம் புரியும் நர்த்தன பைரவா வருக

சதிராடும் சர்ப்ப பைரவா வருக

ஆட்டமாடும் ஆனந்த பைரவா வருக

பாட்டுபாடும் பர்வத வாகன பைரவா வருக

 

சுடரொளி வீசும் ஜ்வாலா மகுடமும்

முப்புரமெரி செய் முக்கண்ணும்

முகவழகு கூட்டும் நாசியும்

சீற்றம் காட்டும் சிங்க பல்லும்

 

இடது செவியில் பொன்னாபரணமும்

இன்பமூட்டும் இள நகையும்

அழகிய தோளும் அற்புத அழகும்

மார்பில் பஞ்சவடி தரும் எழிலும்

 

எழில் மிகு இடுப்பில் நாகாபரணமும்

இளமை காட்டும் வாலிபமும்

மணி ஓசை தரும் கிண்கிணியும்

கையிலே கபாலமும் சூலமும்

 

தோற்றமிகு கைகளிலே பலவகை ஆயுதமும்

ஏற்றம் தரும் தோற்றமாய்

பத்தினிப் பெண்டிரும் பார்த்து மகிழும் வண்ணம்

பரவசம் தர வருகவே வருகவே

 

மெய் உணவு கேட்ட மெய்யடியாரே

உய்ய வழிகாட்டும் உத்தமரே

பொய் புனைவோர் செயலறுக்கும் சீலரே

சேய் மகிழ விரைந்து வருவீரே

 

ஆணவ பிரமன் ஆர்ப்பரிக்க

அன்னை பார்வதி மனம் நொந்திடவே

ஆற்றல்மிகு மகா பைரவரும் வெளிகிளம்பி

அச்சம் தரும் வடிவுடனே பிரமசிரம் துண்டித்தார்

 

தலையொன்றை துண்டான பிரமனும் சாபமிட்டான்

தாயுமானவன் சிரித்தபடி ஏற்றான்

கையிலொட்டிய கபாலத்துடன் பிச்சை ஏற்றடவே

பூமி நோக்கி வந்திட்டான் பூமிபால பைரவனே

 

கற்றவர் போற்றும் காசியாம்

பாவம் போக்கும் பத்ரிநாத்தாம்

எங்கும் திரிந்தான் பரமன்

காசியிலே கபாலம் கையை விட்டுபோனதே

 

மூலப்பொருள் யாரென ஓர் தேடல் நடந்திட்ட வேளையிலே

ஜீவப் பொருளைத் தேடிய பிரமனும் பொய்யுரைத்தானே

பொய்யுரைத்த வேளையிலே பொங்கியெழுந்த பைரவனும்

கிள்ளியெடுத்திட்டான் அத்தலைதனை

 

வீடு தேடியொரு வேளையிலே

பிரம இல்லம் புகுந்து நின்ற பரமனையே

ஐந்தில் ஒருதலையே தூற்றியதாம்

தூற்றிய துஷ்டதலையினை கிள்ளிட்டான் ஈசனுமே

 

எத்தனை சொல்லினும் எப்படி சொல்லினும்

அகங்காரம் கொண்டோர் ஆணவமுள்ளோர்

அழிந்திடத் தான் வேண்டுமென்றே

பிரம சிரம் துண்டித்தான் எம்பிரானே

 

பத்ரிநாத்திலே பிரம்மகபாலம் தெறித்துவிழுந்ததாம்

காசியிலே கபாலம் கையைவிட்டகன்றதாம்

கண்டியூரிலே கபாலம் நீருக்குள் மறைந்ததாம்

மலையனூரில் பரமேஸ்வரின் காலில் மிதிபட்டதாம்

 

எல்லோர் ஆணவமும் பிச்சையேற்றிட்டார் பைரவர்

முனிவரும் தேவரும் அனைவருமிதில் அடங்குவர்

அன்னமளப்பவனுக்கே அன்னமிட்டாள் அன்னபூரணி

ஆண்டியாய் அகிலமெலாம் சுற்றிவந்தார் பரமனே

 

இரத்தபிட்சை பெற்றிட வைகுண்டமேகினார்

இடையே வந்த விஸ்வக்சேனர் சூலத்தில் சிக்கிட்டார்

விஷ்ணுவோ விரைந்து தந்தார் ரத்தம்

கபாலமே நிறையவில்லை மயங்கிட்டார் மகாவிஷ்ணு

 

கண்ணான கணவன் மயங்கிவிழவே

கதறி அழுதிட்டாள் மகாலட்சுமி

கணவனுயிரை தருமாறு சாவித்திரியானாள்

மணவாளன் உயிர் தந்தார் தங்கை மகிழ

 

மாண்டவர் மீண்டால் மகிழ்வாரன்றோ

மாயவனும் மகிழ்ந்திட்டார் வாக்குறுதி தந்திட்டார்

பத்து அவதாரமெடுத்து பகைவரையழித்தே

இரத்த மளித்து கபாலம் நிரப்பிடுவேன் என்றார்.

 

அந்தகாசுரனென்னும் புதல்வனும் அசுரனானான்

அகிலத்தையே ஆட்டி படைத்தான்

அன்னையுருவு கண்டு ஆசைப்பட்டான்

அவனை அழித்து அல்லல் அகற்றினார்

 

மணிமல்லர்கள் செய்திட்ட கொடுமை அதிகம்

இனியொரு விதி செய்தே மக்களை காக்க

கனிதரும் காயகல்பன் மார்த்தாண்ட பைரவனாகியே

மதிகெட்டவர்களை அழித்திட்டார்.

 

முண்டகன் என்றொரு கொடியவன்

கண்டபடி தந்தான் துன்பங்களை

அண்டம் நடுங்க ஆட்டிப்படைத்தான்

பிண்டமாய் வீழ்த்தினார் பைரவரே

 

எண்ணங்களிலே மாற்றம் தரும்

இதயத்திலே எழுச்சி தரும்

அடியவருக்கு அருள்புரியும்

பைரவ புராணத்தை பாடிடுவோம்

 

காலத்தின் நாயகன் கால பைரவனென்றே

ஜோதிடமும் ஆன்மீகமும் கூறிடுமே

விதியும் அவனே வெற்றியும் அவனே

வேதமும் அவனே வேதநாயகனும் அவனே

 

அட்டவீரட்ட தலங்கள் அற்புதத்தலங்கள்

ஆர்ப்பாட்டம் செய்தோரை அழித்த இடங்கள்

அம்பலவாணன் பைரவரூபமான இடங்கள்

அகிலத்தோரை காத்திட தலங்கள்

 

தெய்வமொன்றுக்கு ஒரு மதம் என்றார்

ஐந்துமுக பைரவருக்கோ ஐந்து மதம் கண்டார்

எத்தனை பிரிவோ அத்துணைக்கும் இவரோ தெய்வம்

அத்துணை மகத்துவமுடையோர் அருள் பெறுவோமே

 

எங்கும் பைரவர் எதிலும் பைரவர்

என்றோதி மகிழும் நெஞ்சோர் வாழ்க

ஐந்து தலையரசே ஆகாசபைரவரே

அல்லல் நீங்கிட வருவீரே

 

தலைதனை தராபாலன பைரவர் காக்க

கேசந்தனை கேசர பைரவர் காக்க

நெற்றிதனை நிர்பய பைரவர் காக்க

கண்ணிரெண்டும் கதாதர பைரவர் காக்க

 

செவிதனை ஸ்வஸ்கந்த பைரவர் காக்க

நாசிதனை நர்த்தன பைரவர் காக்க

வாய்தனை வஜ்ர அத்த பைரவர் காக்க

நாக்கினை நானாரூப பைரவர் காக்க

 

கழுத்தினை கராள பைரவர் காக்க

தோள்தனை திரிநேத்ர பைரவர் காக்க

கைகளிரெண்டும் கபாலபூடண பைரவர் காக்க

மார்பினை மந்திரநாயக பைரவர் காக்க

 

விலாவினை விருபாச பைரவர் காக்க

வயிறுதனை விஷ்ணு பைரவர் காக்க

இடுப்பினை இரத்தபிட்சா பைரவர் காக்க

மறைவுப் பகுதிதனை மங்கள பைரவர் காக்க

 

தொடைகளிரெண்டும் திரிபுராந்தக பைரவர் காக்க

முழுங்கால்களை முத்தலைவேல் பைரவர் காக்க

பாதமிரண்டும் பரம பைரவர் காக்க

விரல்களைத்தும் விஜய பைரவர் காக்க

 

இன்னல்தரும் இதயநோய் போக்குவாய் போற்றி

சங்கடம் தரும் சர்க்கரைநோய் போக்குவாய் போற்றி

சீரழிக்கும் சிறுநீரகநோய் போக்குவாய் போற்றி

உயிர்க்கொல்லி நோய் போக்குவாய் போற்றி

 

உன்மத்தம் போக்குவாய் போற்றி

குருட்டை நீக்குவாய் போற்றி

கர்ப்பதோஷம் போக்குவாய் போற்றி

உஷ்ணரோகம் போக்குவாய் போற்றி

 

ஒவ்வாமை அகற்றுவாய் போற்றி

இளைப்பு நோய் நீக்குவாய் போற்றி

சளித்தொல்லை போக்குவாய் போற்றி

சருமத்தொல்லை நீக்குவாய் போற்றி

 

விஷபயம் போக்குவாய் போற்றி

பொய்சூது பொல்லாங்கு நீக்குவாய் போற்றி

விலங்குகள் தொல்லை போக்குவாய் போற்றி

பகைமையை அழிப்பாய் போற்றி

 

உடன்பிறந்தோர் உபத்திரம் தீர்ப்பாய் போற்றி

அன்னையின் அகம் மகிழ்விப்பாய் போற்றி

தந்தைக்கு தளரா நெஞ்சம் தருவாய் போற்றி

முன்னோர்க்கும் நலம்தருவாய் போற்றி

 

நல்லதொரு துணைதருவாய் போற்றி

துணையின் துன்பம் களைவாய் போற்றி

சந்தானபாக்கியம் தருவாய் போற்றி

புத்திரதோஷம் போக்குவாய் போற்றி

 

கடன் தொல்லை நீக்குவாய் போற்றி

களிப்புடன் வாழ்விப்பாய் போற்றி

என்றும் புகழ் தருவாய் போற்றி

ஏற்றம் பெற செல்வம் தருவாய் போற்றி

 

பொல்லாதவர் கொடும் பார்வை துன்பம் நீக்குவாய் போற்றி

பில்லி சூன்யக் கொடுமை போக்குவாய் போற்றி

கெட்டவர் சதித்திட்டம் அழிப்பாய் போற்றி

பேய்,பிசாசு கொடுமை தீர்ப்பாய் போற்றி

 

சேட்டைகள் போக்கும் சேத்திர பாலனே வருக

பாசமிகு பைரவமூர்த்தியே வருக

காலனைவிரட்டும் கால பைரவா வருக

ஸமயோசித புத்தி தரும் ஸமயபைரவா வருக

 

கயவர்களுக்கு காலனாகும் காலாக்கினிபைரவா வருக

பாவிகளையழிக்கும் பாதாள பைரவா வருக

சுகமான வாழ்வுதரும் சுகாசன பைரவா வருக

சந்ததிதரும் சந்தான பைரவா வருக

ஆபத்தை நீக்கும் ஆதிபைரவா வருக

 

சிவபக்தியூட்டும் சிவஞான பைரவா வருக

வெற்றிதனை விரைந்து தரும் வீர பைரவா வருக

நிராயுதபாணிக்கும் நிம்மதிதரும் சூலாயுதபாணி பைரவா வருக

சுற்றம் காக்கும் சுவேட்சர பைரவா வருக

 

தடைகளிலிருந்து விடுவிக்கும் சுதந்திர பைரவா வருக

விசாலமனம் தரும் விசாலாக்ஷ பைரவா வருக

ஸம்ஸார வாழ்வுதரும் சம்ஸார பைரவா வருக

குறைவிலா செல்வம் தரும் குபேர பைரவா வருக

 

கல்வி உயர்வு தரும் கபால பைரவா வருக

மேன்மை தரும் மேகநாத பைரவா வருக

சோதனை நீக்கும் சோமசுந்தர பைரவா வருக

கற்பனை வளம் தரும் மனோவேக பைரவா வருக

 

அவமரியாதை போக்கும் அப்ரரூப பைரவா வருக

சங்கடம் நீக்கும் சசிவாகன பைரவா வருக

பூதபைசாசத்தினை விரட்டும் சர்பூத பைரவா வருக

தண்டனையிலிருந்து தப்புவிக்கும் தண்டகர்ண பைரவா வருக

 

காதலில் வெற்றிதரும் காமராஜ பைரவா வருக

லாபம் தரும் லோகபால பைரவா வருக

பூமிசெல்வம் தரும் பூமிபால பைரவா வருக

ஆற்றல் தரும் ஆகர்ஷண பைரவா வருக

 

கண்டத்திலிருந்து காத்திடும் பிரகண்டபைரவா வருக

அந்தகரையும் காக்கும் அந்தக பைரவா வருக

தட்சணை பெறுவோர்க்குமருளும் தட்சிணபித்தித பைரவா வருக

வித்தையிலே வெற்றிதரும் வித்ய ராஜ பைரவா வருக

 

அதிர்ஷ்டம் தரும் அதிஷ்ட பைரவா வருக

பிரஜைகளின் துன்பம் தீர்க்கும் பிரஜா பாலன பைரவா வருக

குலம் காக்கும் குல பைரவா வருக

சர்வமும் தரும் சர்வக்ஞ பைரவா வருக

 

ஈனனையும் காக்கும் ஈசான பைரவா வருக

சிம்மமாய் வாழ்விக்கும் சிவராஜ பைரவா வருக

சீறிய சிந்தனைதரும் ஸீதாபாத்ர பைரவா வருக

கர்மவினை போக்கும் காலநிர்ணய பைரவா வருக

 

குற்றம் களையும் குலபால பைரவா வருக

சடுதியில் காத்திடும் வடுகநாத பைரவா வருக

கோரவடிவு மாற்றும் கோரநாத பைரவா வருக

புத்திதரும் புத்திமுக்தி பலப்ரத பைரவா வருக

 

லட்சுமி கடாட்சம் தரும் லலித ராஜபைரவா வருக

நிறைவான வாழ்வுதரும் நீலகண்ட பைரவா வருக

சிக்கல் தீர்க்கும் சீரிட பைரவா வருக

கஷ்டத்தில் காத்திடும் காலராஜ பைரவா வருக

 

பிதுர்களுக்கு சொர்க்கம் தரும் பிங்களேட்சண பைரவா வருக

மண்டலம் போற்றும் ருண்டமால பைரவா வருக

விருப்பமானவற்றை தரும் விஸ்வரூப பைரவா வருக

சலியாத வாழ்வுதரும் பிரளய பைரவா வருக

 

கத்தும் கடலும் வாழ்த்தும் ருத்ரபைரவா வருக

பட்டினிபோக்கும் பயங்கர பைரவா வருக

எதிர்ப்பழிக்கும் மகாரவுத்திர பைரவா வருக

சோபித வாழ்வுதரும் சோமராஜ பைரவா வருக

 

பீடுநடைபோட வைக்கும் பிரேசத பைரவா வருக

பூர்வீக சிறப்புதரும் பூதவேதாள பைரவா வருக

ரத்தபாசம் தரும் ரத்தாங்க பைரவா வருக

பசிக்குணவு தரும் பராக்கிரம பைரவா வருக

 

வினைகள் தீர்க்கும் விக்னராஜ பைரவா வருக

நிர்மலமான நெஞ்சம்தரும் நிர்வாணபைரவா வருக

சக்திக்கும்  பாதியுடல் தந்த சச்சிதானந்த பைரவா வருக

அட்டமாசித்தி தரும் ஓங்கார பைரவா வருக

 

பைரவப்ரியர் போற்றும் சிவபைரவா வருக

பண்ணாரிதாசனும் போற்றும் பாலபைரவா வருக

ராஜவேல் மைந்தன் வணங்கும் ராஜபைரவா வருக

முந்தைய சமணரும் வணங்கிய திகம்பர பைரவா வருக

 

பார்போற்றும் பைரவ சஷ்டி கவசம்

பக்தரைக் காக்கும் நல்லதொரு கவசம்

நவபைரவர் அருளும் நற்கவசம்

 

பைரவ சஷ்டி கவசம் இதனை

செப்பிடுவோர் ஜெகமாள்வர்

ஓதுவோர் ஓங்குபுகழ் பெறுவர்

கூறுவோர் கூற்றனை வெல்வர்

 

வாசிப்போர் வாழ்வுதனை பெறுவர்

பாடுவோர் பார்போற்ற பவனி வருவர்

சொல்வோர் சொத்துக்களை பெறுவர்

கேட்போர் கேடான நோய் நீங்கிடுவர்

 

சரணம் சரணம் பைரவா சரணம்

சரணம் சரணம் ஸ்ம்ஹார சரணம்

சரணம் சரணம் திருவடி சரணம்

 

-நன்றி திரு.பண்ணாரிதாசன்

 

வழிபாட்டு முறையும், நன்மைகளும்:

 

வரும் வளர்பிறை அஷ்டமியில் தொடங்கி அடுத்து வரும் வளர்பிறை அஷ்டமி வரை பாட வேண்டும்.அதிகாலை சூரிய உதிக்கும் முன்பு அல்லது மாலை  சூரிய மறைந்த பிறகு, கிழக்கு திசையில் அமர்ந்து பைரவ கவச பாடலை பாட வேண்டும். அப்படி பாடலை பாடும் முன்பு உங்களுக்கு இருக்கும் கஷ்டங்கள் , பிரச்சினை மற்றும் வேண்டுதல் என்பதை மனதில் நினைத்து கொண்டு பைரவ கவச பாடலை பதினாறு முறை பாட வேண்டும். மேலும் இவ்வாறு பிரத்தனை செய்யும் போது மஞ்சள் நிற அல்லது பிங்க் நிற துண்டினை பயன்படுத்துவது இன்னும் நல்லது.

 

 

 

 

இவ்வாறு பைரவ கவச பாடலை பாட பாட நாம் நம் பண நெருக்கடி, கடுமையான கடன்கள், பணம் சார்ந்த பிரச்னைகள்,

கடுமையானசோகங்கள், கர்மவினைகள், துயரங்கள், சிக்கல்கள், அவமானங்களுடன் வாழ்ந்து வருபவர்கள் அதிலிருந்து முழுமையாக விடுபடலாம்.

 

பில்லி,ஏவல்,சூனியம்,மாந்திரீகத் தாக்குதல்,பேய் பிசாசுத் தொல்லை இருப்பவர்கள் அதிலிருந்து விடுபடலாம்.மேலும் நம் வாழ்வில் வந்த துன்பங்கள் நீங்கி, நன்மைகள் கிடைக்கும்.

 

அதுமட்டுல்லாமல் எதிர்காலத்தில் நமக்குவரவிருக்கும்  தீமைகளிலிருந்து தடுத்து நன்மைகளை மட்டும் கொடுக்கும் ஒரு கவசமாக நம் அனைவரையும் காக்கும்.

 

இத்தகைய சிறப்பு மிக்க  பைரவ கவச பாடலைப் பற்றி சூட்சமமான ரகசியங்களைத் தெரிவித்த நமது குரு திரு சகஸ்கரவடுகர் அய்யா அவர்களுக்கு  ஆன்மீகக்கடல் மற்றும் ஆன்மிக ஆரசு சார்பாக நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

 

 

 

ஓம்சிவசிவஓம்!

 

ஓம்சிவசிவஓம்!!

 

ஓம்சிவசிவஓம்!!!

 

 

 

 

 

 

 

ஓம் ஸ்ரீ மகா கணபதியே நமஹ ! 

 

 தென்னாடுடைய சிவனே போற்றி !!

 

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !!

 

அண்ணாமலையுடனமர் உண்ணாமுலையம்மையே போற்றி !!!

 

அதென்ன சொர்ணாகர்ஷண கிரிவலம்?

 

 

நாம் விரும்பினாலும்,விரும்பாவிட்டாலும் நமது தினசரி வாழ்க்கைக்கு பணம் அத்தியாவசியத் தேவையாக இருக்கிறது, ஒரு நாளுக்கு 12 மணி நேரம் நாம் உழைத்தாலும்,நமது தேவைகளுக்கு ஏற்ப வருமானம் கிடைக்காமல் தவிப்பவர்களே நம்மில் அதிகம்;

 

இது போன்ற தெய்வீக ரகசியங்களை ஆன்மீகவாதிகள் அனைவருமே அல்லது பெரும்பாலானவர்கள் வலைப்பூ/இணையதளம் மூலமாக வெளியிடுகிறார்களா?

 

அப்படியே வெளியிட்டாலும்,உரிய தெய்வீக நிகழ்ச்சிகளை தாமே தலைமை தாங்கி நடத்துகிறார்களா?

 

இந்தப் பதிவினை வாசிக்கும்  நாம் ஒவ்வொருவரும் அவசியம் கலந்து கொள்ள வேண்டும்;இதனால்,நமக்கு நியாயமான முறையில் வர வேண்டிய சம்பள உயர்வு,பதவி உயர்வு,வராக் கடன்கள்,கிடைக்க வேண்டிய பூர்வீகச் சொத்து,நமது திறமைக்குரிய சம்பளம் தரும் வேலை அல்லது தொழிலில் நாம் எட்ட வேண்டிய  இலக்குகள்,நமது உழைப்புக்குரிய அங்கீகாரம் சித்தர்களின் ஆசியாலும்,அண்ணாமலையாரின் ஆசிர்வாதத்தாலும் நம்மை வந்து சேரும்.

 

 

 

பத்தாம் ஆண்டு  

 

 

இந்த வருடம் மிக முக்கியமானது ஏன் என்றால் நம் குரு ., பத்தாம் ஆண்டு கிரிவல நிகழ்ச்சியை  நிறைய இடர்களை கடந்து நம்மையும்., தன்னோடு இணைத்துக்கொண்டு    தென் மாநிலங்கள் முழுவதும் இருந்து ஏராளமான ஆன்மீக வாசக,வாசகிகளையும் ஒருசேர வழிநடத்த உள்ளார்கள். ஒவ்வொரு வருடமும், புதியவர்கள் மற்றும் பழையவர்கள் என நம் அன்பர்கள் நம் குரு இடைவிடாது பின் தொடர்ந்து வந்துள்ளார்கள். இப்படிக் கலந்து கொள்வதன்  மூலமாக,ஏராளமான வாசக,வாசகிகள் தமது நெருக்கடியான வாழ்க்கைச் சூழல்களிலிருந்து முழுமையாக விடுபட்டுள்ளனர்;விடுபட்டு வருகின்றனர்;

 

இன்று நிம்மதியாகவும்,பொருளாதாரத் தன்னிறைவோடும்,எந்த விதக் குறையின்றியும் வாழ்ந்து வருகிறார்கள்;

 

கிரிவலம்';

 

கிரிவலம் 14.12.17  வியாழன் அன்று  சரியாக அதிகாலை 7 மணியளவில் இரட்டை பிள்ளையார் கோவிலில் நமது குருநாதர் சகஸ்ரவடுகர் அவர்கள் முன்னிலையில் துவங்கும். நாம் அனைவரும் சரியாக 6.00 am  அளவில் ஒன்று திரள்வோம்.

 

? எதற்காக இந்த சொர்ணாகர்ஷண கிரிவல நாளில் பிங்க் அல்லது மஞ்சள் நிற ஆடை அணிந்து கிரிவலம் செல்ல வேண்டும்?

 

அண்ணாமலை கிரிவலம் செல்வதற்கே நமது முன்னோர்களின் ஆசியும்,நமது குல தெய்வத்தின் அருளும் தேவை;

 

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிற ஆடையை அணிந்து கிரிவலம் செல்ல வேண்டும் என்ற தெய்வீக விதி இருக்கிறது.

 

இந்த மகத்தான நாளில்(14.12.17)வியாழக்கிழமை) நாம் பிங்க் அல்லது மஞ்சள் நிற ஆடை அணிந்து நமது குருநாதர் சகஸ்ரவடுகர் அவர்களின் தலைமையில் கிரிவலம் செல்வதால்,நமது கடுமையான கர்மவினைகள் கரைந்து காணாமல் போய்விடும்;இந்த கர்மவினைகளாலும்,சக ஊழியர்கள்/உடன்பழகுபவர்களின் பொறாமையாலும் பல வருடங்களாக நமது வருமான அளவு அதிகரிக்காமல் இருக்கும்;இந்த தடை நீங்கிவிடும்;பணரீதியான தன்னிறைவை எட்டியவர்கள்,இந்த கிரிவலத்தில் கலந்து கொண்டால்,அவர்கள் தமது ஆன்மீக முன்னேற்றத்தை அடுத்த கட்டத்திற்கு எட்டுவார்கள்;கடந்த ஒன்பது  ஆண்டுகளில் இந்த உண்மையை பல ஆன்மீக வாசக,வாசகிகள் உணர்ந்திருக்கிறார்கள்

 

 


? ஏன் முதல் நாளே(13.12.17 புதன்கிழமை) அண்ணாமலைக்கு வர வேண்டும்?

 

 

தமிழ்நாட்டின் வட மாவட்டங்களில் இருப்பவர்கள் சில மணி நேரங்களில் அண்ணாமலையை வந்தடைய முடியும்;அதே சமயம்,தமிழ்நாட்டின் பிற மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் சரியான நேரத்தில் இந்த சொர்ணாகர்ஷண கிரிவலத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று விரும்பினால்,முதல் நாளே வந்து அண்ணாமலையில் தங்கிக் கொள்வது உத்தமம்.உதாரணமாக,திருநெல்வேலி,தேனி,இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் அண்ணாமலைக்கு வந்தடைய குறைந்தது 16 மணி நேரம் பயணிக்க வேண்டியிருக்கிறது.

 

? அண்ணாமலையில் எங்கே தங்குவது? எனது குடும்பத்தில் இருந்து யாரெல்லாம் இந்த சொர்ணாகர்ஷண கிரிவலத்தில் கலந்து கொள்ளலாம்?

 

திரு அண்ணாமலையாரின் கோவில் பல கோடி வருடங்களாக இருந்து வருகிறது.அண்ணாமலையாரின் பெயரிலேயே இந்த ஊரும் இருக்கிறது.தவிர,மாவட்டத் தலைநகரமாகவும் இருக்கிறது.ஒவ்வொரு பவுர்ணமியன்றும் சுமாராக ஒரு லட்சம் பக்தர்கள் பவுர்ணமி கிரிவலத்துக்கு வருவதை வழக்கமாக வைத்துள்ளனர்;இதனால்,இந்த ஊர் முழுவதும் மகான்களின் ஆசிரமங்கள்,மடங்கள்,திருமண மண்டபங்கள் என்று அமைக்கப்பட்டிருக்கின்றன;தவிர,தங்கும் விடுதிகளும் கோவிலைச் சுற்றிலும் ஏராளமாக இருக்கின்றன.நாள் வாடகை ரூ.100/-முதல் ரூ.5000/-வரைக்கு லாட்ஜ்களும்,நட்சத்திர விடுதிகளும் இருக்கின்றன; தாய்மார்கள் நான்காம் நாளாக இருந்தாலே கலந்து கொள்ளலாம்.

 

நமது குடும்பத்தில் யாரெல்லாம்  பக்தி உணர்வுடன் இருக்கிறார்களோ அவர்கள் அனைவரையும் அழைத்து வரலாம்;நமது இன்றைய பொருளாதாரச் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டும் இந்த விஷயத்தில் முடிவு எடுக்கலாம்.

 

? இட்லிதானம் செய்வது எப்படி?

 

 

இந்த ஹேவிளம்பி  வருடத்தில், துவாதசி திதி வரும் நாளில் சொர்ணாகர்ஷண கிரிவலநாள் அமைந்திருக்கிறது.இந்த நாளில் நாம் ஒவ்வொருவருமே காலையில் ஒருவர்,மதியம் ஒருவர்,இரவு ஒருவர் என்று அண்ணாமலையில் அன்னதானம் செய்வது நமது அனைத்து கஷ்டங்களையும் நீக்கிவிடும்;கிரிவலப் பயண நேரம் குறைந்த பட்சம் 4 மணி நேரம் ஆகும்;அதிக பட்சம் 6 முதல் 8 மணி நேரம் வரை ஆகும்

 

காலையிலும்,மதிய நேரத்திலும் கிரிவலப் பாதையில் நம்மால் எத்தனை சாதுக்களுக்கு இட்லி தானம் செய்ய முடியுமோ அத்தனை சாதுக்களுக்கு தானம் செய்வோம்;கூடவே,நல்லெண்ணெய் கலந்த எள்ளுப்பொடியை ஒவ்வொரு இட்லிதானத்துடனும் சேர்த்தே கொடுப்போம்;

 

கிரிவலப்பாதையிலும் சில உணவகங்கள் இருக்கின்றன;எனவே,மதிய நேரத்திற்கு கிரிவலப் பாதையில் மதிய நேர அன்னதானத்திற்கு உணவு வாங்கிக் கொள்ளலாம்;அல்லது குபேர லிங்கம் வந்ததும்,நம்மில் ஒரு சிலர் ஆட்டோவில் நகருக்குள் பயணித்து உணவுப் பொட்டலங்களை மொத்தமாக வாங்கிக் கொண்டு வந்தும் தானம் செய்யலாம்.

 

?எள்ளுப்பொடியைத் தயார் செய்வது எப்படி?

 

இன்றைய கால கட்டத்தில் மளிகைக்கடைகளில் ரெடிமேடாக எள்ளுப்பொடி கிடைக்கிறது;ஒருவர் ஐந்து இட்லிகள் சாப்பிடும் அளவுக்கு எள்ளுப்பொடியை ஒரு சிறு பையில் நிரப்பி அத்துடன் சுத்தமான நல்லெண்ணெயை கலந்து சிறு கயிற்றால் கட்டிக் கொண்டு வருவோம்;நாம் எத்தனை பேர்களுக்கு இட்லிதானம் செய்ய விரும்புகிறோமோ,அத்தனை பாலிதீன் பைகளில் எள்ளுப்பொடி+நல்லெண்ணெய் நிரப்பிக் கொண்டு வருவது அவசியம்.(நமது ஊர்களில் மதிய உணவுவாங்குவோம் அல்லவா? அதில் மோர் பாக்கெட் எப்படி கட்டப்பட்டிருக்கும்;அதே போல கட்டிக் கொண்டு வரவும்)

 

பாரம்பரியம் மாறாத ஏராளமான குடும்பங்கள் இன்றும் தமிழ்நாட்டின் ஒவ்வொரு ஊர்களிலும் வாழ்ந்து வருகின்றன;அந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வீட்டிலேயே தயார் செய்து கொண்டு வரலாம்;

 

தனித்து வாழ்ந்து வருபவர்கள்,வெளியூரில் வேலை பார்ப்பவர்கள் முதலில் சொன்ன யோசனையை நடைமுறைப்படுத்துவது போதுமானது;

 

(இட்லிப்பொடி என்பது உளுந்துப்பொடி என்பதை நினைவிற் கொள்க)

 

ஏன் இட்லியுடன் எள்+நல்லெண்ணெய் கலந்த கலவையை தானம் செய்ய வேண்டும்?

 

அது தெய்வீக ரகசியம்! நமது கர்மவினைகள் தீரும் ரகசியம் இதனுள் தான் புதைந்திருக்கிறது.நீங்கள் எங்கெல்லாமோ அன்னதானம் செய்திருப்பீர்கள்;அரிசி தானம்,கோதுமை தானம்,பழ தானம்,ஆடை தானம்,ருத்ராட்ச தானம்,விஷய தானம் செய்திருப்பீர்கள்.அதைவிடவும் மிகவும் சக்தி வாய்ந்தது இந்த கலவையுடன் இட்லி தானம் செய்வது!

 

இட்லி தானம் செய்வதற்கு எங்கே வாங்குவது?

 

13.12.17 புதன்கிழமையன்று மாலை நேரத்திற்குள் அண்ணமலைக்கு வந்துவிட்டாலே சரியான உணவகத்தை நம்மால் அடையாளம் கண்டு கொள்ள முடியும்.அங்கேயே கூட நாளைக் காலை எனக்கு ஐந்து இட்லிகள் கொண்ட பார்சல்கள் இத்தனை தேவை என்று கூட முன்பதிவு செய்து கொள்ளலாம்;

 

அண்ணாமலையில் ஒரு உணவகத்தில் ஒவ்வொரு வேளையும் சமையல் செய்து முடித்ததும்,அந்த உணவுகளின் முன்பாக சைவ முறைப்படி தேவாரம் முதலான பதிகங்கள் பாடியப்  பின்னரே பரிமாறுகிறார்கள்.இதனால்,அந்த உணவகத்தில் ஒவ்வொரு உணவுப் பொருளும்(இட்லி,தோசை,பொங்கல்,புளியோதரை,மதியம் முழு உணவு) மிகுந்த சுவையுடன் இருக்கிறது.

 

துவாதசி திதியும்,சுவாதி நட்சத்திரமும்,சொர்ணாகர்ஷண கிரிவலமும் சேர்ந்து ஒன்றாக வருவதால் நாம் செய்யும் இட்லி தானத்திற்கான பலன்கள் அடுத்த சில நாட்களிலேயே நம்மை வந்து சேரும்;சிலருக்கு மட்டும் சில வாரங்களில் வந்து சேரும்.

 

? நவதானியங்களையும்,டயமண்டு கற்கண்டையும் ஏன் வாங்க வேண்டும்?

 

 

நவக்கிரகங்களின் கதிர்வீச்சுக்களை ஈர்க்கும் ஆற்றல் நவதானியங்களுக்கு இருக்கின்றன;நமது கைகளால் நவதானியங்களை ஆதிசிவனின் பாதத்தில்  (அண்ணாமலை கிரிவலப் பாதையில்) தூவ வேண்டும்;நமது கைகள் பட்டு தூவுவதால்,அவைகள் நமது ஜாதகப்படி இருக்கும் கிரக தோஷங்களுடன் கிரிவலப்பாதையின் ஓரங்களில் மழை பொழிந்ததும் முளைக்கத் துவங்கும்;அவ்வாறு முளைக்கத் துவங்கியதுமே,நம்மைப் பிடித்திருந்த கிரகதோஷங்களை நாம்  தூவியிருந்த நவதானியங்கள் வாங்கிக்  கொள்ளும்; நாம் தினசரி வாழ்க்கையில் சிக்கல்கள் இன்றியும்,பிரச்னைகள் இல்லாமலும் நிம்மதியாக வாழத் துவங்குவோம்;

 

 இயற்கைஇனிப்பு, கற்கண்டு ஆகும்.அதை இன்றைய நவீன காலகட்டத்தில் மோல்டிங் மெஷின்கள் மூலமாகத் தயாரிக்கிறார்கள்;அதனால்,தற்போது கற்கண்டு வைரக்கல் வடிவிற்கு மாறிவிட்டது;இதையே டயமண்டு கற்கண்டு என்று அழைக்கிறோம்.

 

 

? நவதானியங்களையும்,டயமண்டு கற்கண்டையும் எங்கே வாங்குவது? எப்படித் தூவுவது?

 

 

13.12.17 புதன்கிழமை இரவு 9 மணிக்குள் அண்ணாமலையை நாம் வந்தடைந்து விட்டால்,அண்ணாமலையிலேயே நவதானியங்களையும்,டயமண்டு கற்கண்டுகளையும் வாங்கிக் கொள்ளலாம்.

 

சில பல வேலைகளால்,நம்மால் 14.12.17 வியாழக்கிழமை காலையில் நேரடியாக சொர்ணாகர்ஷண கிரிவலத்தில் கலந்து கொள்பவர்கள் அவரவர் ஊரிலிருந்தே இவைகளை வாங்கிக் கொண்டு வரவும்.

 

அக்னிலிங்கம் கிரிவலப்பாதையில் அமைந்திருக்கும் இரண்டாவது லிங்கம் ஆகும்;இதைக் கடந்ததும்,நகர்ப்பகுதி நிறைவடைந்துவிடும்;மலையும் காடும் சூழ்ந்த பகுதி துவங்கும்;இங்கிருந்து எட்டாவது லிங்கமான(தற்போது ஒன்பதாவது! சில ஆண்டுகளுக்கு முன்பு குபேர லிங்கத்திற்கு சற்று முன்பாக ஒரு வயல்வெளியில் சந்திர லிங்கம் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது) ஈசான லிங்கம் வரையிலும் சாலையோரம் அமைந்திருக்கும் முட்புதர்களில் தூவ வேண்டும்;கொட்டக் கூடாது;இரு கைகளால் தூவிக் கொண்டு வருவது நன்று;சிறிது சிறிதாகத் தூவி வருவதே நன்று.

 

? கிரிவலத்தின் போது செருப்பு அணிந்து நடக்கலாமா?

 

செருப்பு அணியாமல் நடப்பதே நன்று.இதில் விதிவிலக்கும் உண்டு.மழைக்காலமாக இருப்பதால்,குடை,ரெயின்கோட்,(வயதானவர்கள்,நோய் உள்ளவர்கள்)உரிய மருந்துகளுடன் பயணிப்பது அவசியம்;

 

 


?கிரிவலத்தில் மட்டும் கலந்து கொள்ளலாமா?

 

 

 

 

கிரிவலம் மதியம் 2 மணிக்குள் நிறைவடைந்துவிடும்;பிறகு,மாலை  அண்ணாமலையாரையும், உண்ணாமுலை அம்மனையும் வழிபடலாம்,  அதில் கலந்து கொண்டு  ஓம் சிவ சிவ ஓம் என்ற மந்திரங்களை ஜபிப்பது நன்று;கூடவே,நாம் மட்டும் உபதேசம் பெற்ற சிவமந்திரங்களையும் அங்கே ஜபிப்பது அவசியம்.சுவாதி நட்சத்திரம் ராகுவின்(பாம்புவின்) நட்சத்திரமாக இருப்பதால்,நமது மந்திர ஜபத்தின் பலன்கள் விரைவாக ஆதிசிவனைச் சென்றடையும்;நாம் அமர்ந்திருப்பதே ஆதி சிவனின் பாதத்தில்(அண்ணாமலையாரின் கோவிலில்)! இதனால் விரைவான சிவனருளும்,சொர்ணாகர்ஷணமும் நமக்குக் கிட்டும்;

 

( கிழக்குக்  கோபுர வாசலில் இரவு நேர அன்னதானத்தை முடித்துவிட்டு இரவு 7 மணிக்குள் அவரவர் ஊர்களுக்குப் புறப்பட்டுவிடலாம்;இரவுநேர அன்னதானத்திற்கு சைவ உணவாக நம்மால் முடிந்ததை வாங்கிக் கொடுத்துவிட்டுப் புறப்படலாம்) பிறகு இரவு 9 மணி முதல் 10 மணிக்குள் பள்ளியறை பூஜையிலும் கலந்து கொள்வது அவசியம்.

 

இத்துடன் சொர்ணாகர்ஷண கிரிவல நிகழ்ச்சிகள் நிறைவடையும்.வியாழக்கிழமை  இரவு அல்லது வெள்ளி  அதிகாலையில் நேராக நாம் வாழ்ந்து வரும் வீட்டிற்குச் செல்ல வேண்டும்.வேறு எந்தக் கோவிலுக்கும்,யார் வீட்டிற்கும் செல்லக் கூடாது.(சிலருக்கு வியாழக்கிழமை இரவே பேருந்து/ரயில் கிட்டாமல் போகலாம்;அவர்கள் அன்று  இரவு அண்ணாமலையில் தங்கிவிட்டுப்போவது நன்று.இதன் மூலமாக பலன்கள் வீணாகாது)

 

ஓம் சிவ சிவ ஓம்

   

ஓம் சிவசிவ ஓம்

 

ஓம் சிவசிவ ஓம்