ஆன்மீக அரசு

கடந்த 30 வருடங்களாக மேற்கொண்ட ஆராய்ச்சியின் முடிவுகளை மக்களின் நலனுக்காக இதுவரை இந்த வலை தளத்தில்வெளியிட்டு வந்துள்ளோம், இனிமேல் உங்களின் ஆன்மீக சம்பந்தமான அனைத்து எனது நேரடி பார்வையில் பதில் வரும்,. இதற்கான உங்கள் கேள்வி அனைத்தும் மின்அஞ்சல் மூலமாகவே வரவேண்டும் மற்றும் அனைத்து விதமான கேள்விகளுக்கும் aanmigakkadal@gmail.com,aanmigaarasoo@gmail.com. தொடர்புகொள்ள வேண்டும். இதில் மின்அஞ்சல் தவிர வேறு எந்தவிதமான கைபேசி எண் மற்றும் மின்அஞ்சல் முகவரியும் இல்லை என்று தெரிவித்துக்கொள்கிறேன்-சகஸ்ரவடுகர்

Items filtered by date: January 2018

 

 

 

 

 

ஓம் ஸ்ரீ மகா கணபதியே நமஹ ! 

 

 

தென்னாடுடைய சிவனே போற்றி !!

 

 

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !!

 

 

 

 

 

 

 

 

வள்ளலார்:

 

 "வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம்வாடினேன்என்று பாடியவர்,

வள்ளலார் பக்தி நெறி நின்றாலும் உலக வாழ்வில் மக்கள் சிறந்து வாழும் பக்குவநெறியும் கண்டவர்ஏழை பணக்காரன்மேல்சாதி கீழ்சாதிமுறைகளை வன்மையாகக் கண்டித்தவர்.

 

 

 

 

 
சாதி சமய வேறுபாடுகளைக் கடுமையாய் எதிர்த்தார்மக்கள் வாழப் பயன்படும் நெறியே நன்னெறி எனப் போற்றினார்.

இவர் சாதி சமய வேறுபாட்டுக்கு எதிரான தமது நிலைப்பாடு காரணமாகசமுதாயத்தின் பழைமைப் பற்றால் பெரிதும் பாதிக்கப்பட்டவர்வள்ளலாருக்கு எதிராக வழக்குமன்றத்தில் வழக்கு தொடர்ந்தவர் ஆறுமுக நாவலர்.

இவருக்கு இராமலிங்க அடிகள்திருவருட்பிரகாச வள்ளலார், சிதம்பரம் இராமலிங்க அடிகள் என பல்வேறு சிறப்பு பெயர்களைக் கொண்டவர்.

 

வாழ்க்கை வரலாறு:

 

 இவர் கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில்  இருந்து 10 மைல் தொலைவில் உள்ள மருதூரில் 05.10.1823இல் பிறந்தவர்பெற்றோர் இராமையாபிள்ளைசின்னம்மையார்இவரோடு சபாபதிபரசுராமன்உண்ணாமுலைசுந்தராம்பாள் ஆகிய நால்வரும் உடன்பிறந்தவர்கள்இராமலிங்கர் பிறந்த ஆறாம் மாதத்திலேயே தந்தையை இழந்தார்தாயார் குழந்தைகளோடு பொன்னேரி சென்று வாழ்ந்தார்பின்னர் சென்னையில்  ஏழுகிணறு பகுதி 39, வீராசாமி பிள்ளை தெருவில் உள்ள வீட்டில் குடியேறினார்அண்ணன் சபாபதி சமயச் சொற்பொழிவு செய்து வந்தார்.

 

இராமலிங்கருக்குச் செந்தமிழ்க் கடவுளாகிய முருகப்பெருமானது திருக்காட்சி இளமையிலேயே கிடைத்ததுமக்கட் பிறவியினரையே குருவாகப் பெறும் மானிடர் உலகில்மறைமுதல்வனின் மகனான முருகப்பெருமானையே குருவாய் ஏற்றதால்இராமலிங்கர் செந்தமிழும் வடமொழியும் ஆகிய இருபெரும் மொழிகளையும் ஓதி உணரும் பெரு ஞானம் கைவரப் பெற்றார்

 

 உலகியல் முறைக்கேற்பக் காஞ்சிபுரம் மகாவித்துவான் சபாபதி முதலியாரையும்சகோதரர் சபாபதிப் பிள்ளையையும் ஆசான்களாகப் பெற்றார்சபாபதிப் பிள்ளையின் அன்பினும் அவர் மனைவியாரின் அரவணைப்பிலுமே வளர்ந்தார் 

 

கருவிலே திருவுடையவராக அவர் தோன்றியமையால்இளம்போதிலேயே கவி எழுதும் பேராற்றலைப் பெற்றார்இராமலிங்கர் பல்வேறு ஆற்றல்களின் உறைவிடமாக விளங்கினார்.

 

 இளமையில் முருகப்பெருமானைக் கடவுளாகவும்திருஞான சம்பந்தரைக் குருவாகவும்திருவாசகத்தை வழிபடும் நூலாகவும் கொண்டார்பின்னர் ஒற்றியூரில் வாழும் இறைவனின் இணையற்ற பக்தராகவும்பின் தில்லையம்பல நாதரின் பக்தராகவும் விளங்கினார்முடிவில் அருட்பெருஞ்சோதி அடியவராகத் திகழ்ந்தார்.

அவர் புலவராககவிஞராகசொற்பொழிவாளராகஉரைநடை எழுத்தாளராகநூலாசிரியராகஉரையாசிரியராகஞானாசிரியராகபோதகாசிரியராகமருத்துவராகஇவர்களுக்கெல்லாம் மேலாகத் துறவியாகஞானியாகசித்தராகக் காட்சி தந்தார்.

 

 

சத்திய தரும சாலை - சத்திய ஞான சபை: 

 

  உலகங்கள் எல்லாவற்றையும் இயக்கி வரும் முழுமுதற் பொருள்களான கடவுள்அனைவர் உள்ளங்களிலும் சோதி வடிவாகத் திகழ்கின்றார்அத்தகைய அருட்பெருஞ்சோதி ஆண்டவரின் தனிப்பெருங் கருணையே உலக உயிர்களையெல்லாம் வாழ வைக்கிறதென்றும் கண்டார்.

 

பொருளை வாரி வழங்கியவர்கள் பொருள் வள்ளல்கள்அருளை வாரி வழங்கியோர் அருள் வள்ளல்கள்அருள் வள்ளல்களில் ஒருவராகி அதேபொழுதுதம் தனிப்பண்பாலும் ஒருவராகிவள்ளல் என்ற தனிப் பெயரையே பெற்றுத் திகழும் வெற்றிபெற்றவர் நம் இராமலிங்கர் 

மரணமில்லாப் பெருவாழ்வு எனச் சாகாக்கலையை உலகிற்கு உணர்த்தியவர் வள்ளலார்அவர் பொன் செய்யும் ஆற்றலையும் பெற்றிருந்தார் 

இவ்வுண்மையினை மனத்திற் கொண்டுசாதிமத வேறுபாடின்றிஎல்லா உயிர்களிடத்திலும் இரக்கமுடையவராய் வாழும் ஆன்மநேய ஒருமைப்பாட்டினை நல்கும் சீவகாருண்ய ஒழுக்கமே உலகில் உயர்ந்தது என அறிந்து தெளிந்தார்.

 

இதனால் சமரச சன்மார்க்க நெறியைக் கைக்கொண்டார் 

தம் நெறிதழைக்க இறைவன் கருணைதனைப் பெற்றார்பயிர்கள் வாடுவதையே பார்க்கப் பொறுக்காத இராமலிங்கர்பசியால் வாடும் மக்களின் துயர் துடைக்க முன்வந்தார்வடலூரில் சன்மார்க்க சங்கம் - என்னும் மூன்று அருள் நெறி காக்கும் அமைப்புகளை நிறுவினார்அப்பெருமான் தனிக்கொள்கையைதனிக்கொடியைதனிச்சபையைதனிமார்க்கத்தைதனி மந்திரத்தைவழிபாட்டைக் கண்டார்.

 

 

சத்திய ஞானசபை:

 

 தன் வாழ்வின் பெரும்பகுதியைச் சென்னையில் கழித்த இவர்நவீன சமுதாயங்களின் பிரச்சினைகளை உணர்ந்திருந்தார்அனைத்துச் சமய நல்லிணக்கத்திற்காகவும் சன்மார்க்கத்திற்காகவும் தன் வாழ்நாளை அர்ப்பணித்துப் பணியாற்றினார்.

 

 

இந்நோக்கத்தை அடையும் பொருட்டு சிதம்பரம் அருகே உள்ள வடலூரில்  சத்திய ஞானசபையை அமைத்தார். 1867ஆம் ஆண்டில் சத்திய தரும சாலையையும் நிறுவினார்அவர் வாழ்ந்த காலத்தில் அவருடைய சிந்தனைகள் மிகவும் முற்போக்குடையதாக கருதப்பட்டாலும்தற்பொழுது உலகெங்கும் அவருடைய சிந்தனைகளுக்கு ஒத்த கொள்கைகள் புரிந்துகொள்ளப்பட்டு பின்பற்றப்படுகின்றன.

இங்கு பொற்சபை, சிற்சபை என இரு சபைகள் உள்ளன. மொத்தம் ஏழு கதவுகள் கொண்ட தனித்தனி அறைகள் உள்ளன, அதில் ஜோதி சொருபம்மா வள்ளலார் ஜோதி வடிவமாக கொண்டு ஒவ்வாரு அறைக்கும் ஒரு விளக்கினைவைத்து வழிபாடுகள் நடைபெறுகிறது.

 

 

 

 

இங்கு தினந்தோறும் இரவு 7 மணி முதல் 8 மணிவரை முதலாவது அறையை திறக்கப்பட்டு  வள்ளலார் ஜோதி வடிவமாக காட்சியளிக்கிறார், அந்தவேளையில் அருட்பெரும்ஜோதி! அருட்பெரும்ஜோதி!! தனிபெருங்கருணை அருட்பெரும்ஜோதி!!! என மந்தரத்தை ஜெபிக்கின்றனர்.

 

 

 

 

 
இங்கு ஆண்டுதோறும்  தைப்பூசத் திருவிழாவில், ஏழு கதவுகள் கொண்ட தனித்தனி அறைகள் திறக்கப்பட்டு வள்ளலார் ஜோதி வடிவமாக காட்சியளிக்கிறார்.
 

 

 

 

 

 

 

 

தருமசாலை:

 

 இராமலிங்க அடிகள் 2351867 அன்று வடலூர் மக்களிடம் இருந்து 80 காணி நிலம் பெற்று தருமசாலையை தொடங்கினார்இந்த தருமசாலைக்கு வந்தவர்களுக்கு 3 வேளையும் உணவு வழங்கப்பட்டது.தற்போது தருமசாலைக்கான உணவுப்பொருட்களை தமிழக அரசு குறைந்த விலைக்கு வழங்கி வருகிறது என்பது பாராட்டுக்கு உரியதாகும்.

 

மக்களின் மிகுந்த துயரங்களுள் ஒன்றான பசியை போக்கிட வள்ளலார் வழி வகுத்தார்இன்றளவும் வள்ளலார் பெயரால் லட்சக்கணக்கான மக்களுக்கு பசியாற்றப்படுகிறதுவடலூரில் தலைமை இடம் இருந்தாலும்உலகமெங்கும் அவரது கொள்கையைப் பின்பற்றுகின்றவர்கள் பசியாற்றுகிறார்கள்.

 

மேலும் இங்கு வள்ளலார் அவர்களால் ஏற்றப்பட்ட ஆணைய அடுப்பு உள்ளது. இது அன்று முதல் இன்று வரையிலும் அணையாமல் உள்ளது. பருப்பு தான உண்டியல் உள்ளது, அன்னதானத்தை அடுத்து இங்கு பருப்பு தானம் அதிகமாக பக்கதர்களால் வழங்கபடுகிறது.
 

 

வள்ளலார் நடத்திய அதிசயங்கள்:

 

 வள்ளலார்தோன்றிய காலம் தொட்டே பல அதிசயங்களை நிகழ்த்தி உள்ளார் 

 

அப்பெருமகனார் ஓராண்டுப் பருவத்தினராக இருந்தபோதே தில்லையம்பலநாதர் சந்நிதித் திரைச்சீலை தானே தூக்கப்பெற்று தரிசித்தார்.

 

ஒருமுறை திண்ணையிலிருந்து கீழே விழுந்தபோது இறைவி வந்து காப்பாற்றினார்.

 

ஒருநாள் பட்டினியோடு படுத்திருந்தபோது அவர் அண்ணியார் வடிவில் இறைவி காப்பாற்றினார்.

 

இளமையில் அண்ணன் சொற்பொழிவுகளுக்கு ஏடு படிக்கத் தொடங்கினார்ஒரு முறை அவர் நோய்வாய்ப் பட்டமையால் தாமே சொற்பொழிவு செய்யத் தொடங்கி நாடறிந்த பெருமகன் ஆனார் 

 

தண்ணீரில் விளக்கெரியச் செய்தார்இந்நிகழ்ச்சி நினைவாக சிதம்பரம் நடராச்சர் கோவிலில் தண்ணீரில் விளக்கெரியச் செய்யும் நிகழ்ச்சி இன்றும் நடைபெற்றுவருகிறது.

 

ஒரே இரவில் 1596 வரிகளை உடைய அருட்பெருஞ்சோதி அகவலைப் பாடி முடித்தார்.

 

தி்ருவருட்பா:

 

ஒத்தாரும் உயர்ந்தாரும் தாழ்ந்தாரும் ஆகிய அனைவரும் ஒருமை உள்ளவராகி உலகில் வாழ வேண்டும் என்ற பெருநோக்கோடு வள்ளலார் திருவாய் மலர்ந்தருளிய செந்தமிழ்த் திருப்பாடல்களின் தொகுதியே திருவருட்பா என்னும் கருவூலமாகும் 

 

அருளாளர்கள் பாடிய பாடல்கள் அனைத்தும் அருட்பாக்களேஆனால் திரு சேர்ந்து அப் பெயருடனேயே விளங்கும் அருட்பாவள்ளல் பெருமான் பாடிய பாடல்களின் தொகுதியே யாகும் 

 

ஆறு திருமுறைப் பகுதிகள் கொண்டு விளங்குகின்றது. 399 பதிகங்களையும் 5818 பாடல்களையும் கொண்டதுஎல்லாப் பாடல்களும் இறைவனை முன்னிறுத்திப் பாடப்பெற்றவையேஇது பக்திப்பா உலகில் ஒரு புதுமைதமிழ்மொழிக்கு மற்றொரு பெருமை 

 

ஆண்டவனை அனைவரும் நாள்தோறும் வேண்டிப் போற்றும் நிலையில் உரைநடை வேண்டுகோளாக அமைந்தவைசுத்த சன்மார்க்கச் சத்தியச் சிறு விண்ணப்பம்சுத்த சன்மார்க்கப் பெரு விண்ணப்பம்சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞான விண்ணப்பம்சமரச சுத்த சன்மார்க்க சங்க சத்திய ஞான விண்ணப்பம் என்பனவாகும்.

 

ஜீவ சமாதி:

 

வடலூரில் வள்ளலாரின் சீடரான கல்பட்டு அய்யா ஜீவ சாமதியும், கல்பட்டு அய்யாவின் மூன்று சீடர்கள் ஜீவ சாமதியும் சேர்த்து, மொத்தம் இங்கு நான்கு ஜீவ சாமதிகள் அமைத்துள்ளது.

 

 

 

 

 

 

 

மேட்டுக்குப்பம்:

 

 

 

சத்திய ஞானசபை இருந்து சுமார் நான்கு கிலோமீட்டர் தொலைவில் மேட்டுக்குப்பம் அமைந்துள்ளது.இறைநெறியை ஆன்மநேயப் பெருநெறி ஆக்கிய வள்ளல் பெருமான் தைப்பூச நன்னாளில் மேட்டுக்குப்பம் சித்தி வளாக திருமாளிகை  உள்ள சித்திவளாகத்தில் ஓர் அறைக்குள் சென்று கதவினை மூடிக்கொண்டு அருட்பெருஞ்சோதி ஆண்டவரான இறைவனோடு இரண்டறக் கலந்து சோதி வடிவானார்அவர் சித்தி அடைந்த நாள் 30-1-1874 ஆகும்

 

 

 

 

 

தைப்பூச ஜோதி தரிசன விழா:

 

ஆறுமுக நாவலர் ஆன இவர் தைப்பூச நன்னாளில் (31.01.18) அருட்பெருஞ்சோதி ஆண்டவரான இறைவனோடு இரண்டறக் கலந்து 

சோதி வடிவானார்.

ஆண்டுதோறும் வடலுாரில்வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில்தைப்பூச ஜோதி தரிசன விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் ஜோதியை தரிசித்தனர்இதன் தொடர்ச்சியாகவள்ளலார் சித்தி பெற்றதிருமாளிகையில்திருஅறை தரிசனமும், பின்பு தரும சாலையில் இருந்துவள்ளலார் பயன்படுத்திய பொருட்கள் அடங்கிய பேழையை பல்லக்கில் வைத்துமீனவ சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள்மேட்டுக்குப்பம் சித்தி வளாக திருமாளிகைக்கு ஊர்வலமாக எடுத்து சென்றனர்.

 

 

 

 

 

 

வழியில்வள்ளலார் தண்ணீரில் விளக்கேற்றிய கருங்குழி இல்லம்அவர் வணங்கிய பெருமாள்பிள்ளையார் கோவில்கள்தீ சுவை ஓடை பகுதிகளில்பொதுமக்கள் பழத்தட்டுடன் ஆரத்தி எடுத்துவரவேற்பு அளித்தனர்பல்லக்கைமேட்டுக்குப்பம் சித்தி வளாக திருமாளிகையில்வள்ளலார் மறைந்த அறை முன் வைத்து,  திருஅறை திறக்கப்படும். ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்து.வள்ளலாரின் அருளைப் பெறுகின்றனர்.

 

 

வள்ளலாரின் போதனைகள்: 

 

கடவுள் ஒருவரே. அவர் அருட்பெரும்ஜோதி ஆண்டவர்.

புலால் உணவு உண்ணக்கூடாது.

எந்த உயிரையும் கொள்ளக்கூடாது.

சாதி மதம் இனம் மொழி முதலிய வேறுபாடு கூடாது.

இறந்தவர்களை எரிக்கக்கூடாது. சமாதி வைத்தல் வேண்டும்.

எதிலும் பொது நோக்கம் வேண்டும்.

பசித்தவர்களுக்கு சாதி மதம் இனம் மொழி முதலிய வேறுபாடு கருதாது உணவளித்தல் வேண்டும்.

சிறு தெய்வ வழிபாடு கூடாது. அவற்றின் பெயரால் பலி இடுதலும் கூடாது.

எல்லா உயிர்களும் நமக்கு உறவுகளே, அவற்றைத் துன்புறுத்தக் கூடாது.

மதவெறி கூடாது.

 

 

 

என வள்ளல் பெருமானின் கொள்கைகள் இன்று உலகெங்கும் பரவி வருகின்றது 

வாழ்கையில் ஒருமுறையாவது வடலூர் சென்று வள்ளல் பெருமானின் அருள்திறத்தையும்ஆன்மநேய ஒருமைப்பாட்டின் உயர்வையும்அறிந்து தெளிந்து திருவருட்பாக்களை நாளும் ஓதி நல் வாழ்வு பெறுவோமாக.

அருட்பெரும்ஜோதி!

அருட்பெரும்ஜோதி!!

தனிபெருங்கருணை அருட்பெரும்ஜோதி!!!

 

 

 ஓம்   சிவசிவ   ஓம்!

 

ஓம்   சிவசிவ   ஓம்!!

 

ஓம்   சிவசிவ  ஓம்!!!

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

ஓம் ஸ்ரீ மகா கணபதியே நமஹ ! 

 

 

தென்னாடுடைய சிவனே போற்றி !!

 

 

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !!

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

நாம்  அனைவரையும் நலம் பெற வேண்டும்  மற்றும் வளம் பெற வேண்டும் என்ன நம் எல்லோரையும் ஆன்மிக வழியில் வழிநடத்தும் நமது குருநாதர் அய்யா சகஸ்கரவடுகர்  சார்பாகவும் ,

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

நமது ஆன்மிக வாசகர்களுக்கும் ,உலகிலுள்ள  ஆன்மிக அன்பர்கள் அனைவருக்கும்  ஆன்மிக  கடல்  மற்றும் ஆன்மிக அரசு சார்பாக இனிய பொங்கல் நல்வாழ்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறோம் .

 

 

 

 

 

 

 

ஓம்   சிவசிவ   ஓம்!

 

ஓம்   சிவசிவ   ஓம்!!

 

ஓம்   சிவசிவ  ஓம்!!!

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

ஓம் ஸ்ரீ மகா கணபதியே நமஹ ! 

 

 

தென்னாடுடைய சிவனே போற்றி !!

 

 

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !!

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில் :

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

108 வைணவத் திருத்தலங்களுள் முதல் திருத்தலம்.காவிரி ஆற்றினால் சூழப்பட்டதும்சிறப்புமிக்க 108 வைணவத் திருத்தலங்களுள் முதன்மையான மிகப் பெரிய அரங்கநாதசுவாமி கோயிலின் ஏழு சுற்று மதில்களுக்குள் அமைந்துள்ளதுமான திருவரங்கம் (ஸ்ரீரங்கம்என்னும் ஊர், 600 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஒரு தீவு நகரம் ஆகும்இச்சுற்று மதில்களில் வாயில்களாக 21 கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளனஇவற்றுள் மிகப் பெரிதான இராஜகோபுரம், 72 மீட்டர் (220 அடிஉயரத்துடன்தென்னிந்தியாவிலேயே பெரிய கோபுரமாக விளங்குகின்றதுஇது 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாயினும், 1987 ஆம் ஆண்டு முழுமையாகக் கட்டி முடிக்கப்பட்டது.

 

 

 

 

தல வரலாறு:

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

திருவரங்கம் கோயில் விமானம் பிரம்மாவின் தவத்தால் திருப்பாற்கடலிருந்து வெளிப்பட்டு தோன்றியதாகும் (இதை சுயம்பு என்று கூறுவர்). பிரம்மா நித்திய பூசை செய்ய சூரியனை நியமித்தார்பிறகு சூரிய குலத்தில் பிறந்த அரசன் இட்சுவாகு இந்த விமானத்தை தனது தலைநகரமாகிய அயோத்திக்கு வழிபடக் கொண்டு சென்றான்ராமர் இவ்விமானத்தை இலங்கையிலிருந்து தனது பட்டாபிஷேகத்துக்கு வந்த விபீஷணனுக்கு பரிசாகக் கொடுத்தார்இதனை விபீஷணன் தனது தலையின் மீது சுமந்து இலங்கைக்கு எடுத்துச் செல்கையில் வழியில் காவிரியாற்றின் கரையை அடைந்தான்விமானத்தைக் கீழே இறக்கி வைத்துவிட்டு சிறிது நேரம் இளைப்பாறினான்பின்னர் அவன் மீண்டும் புறப்பட நினைத்து விமானத்தை எடுத்தான்எடுக்க முடியவில்லைஎவ்வளவோ முயன்று பார்த்தான்கலங்கினான்அங்கு ஆண்டுவந்த தர்மவர்ம சோழன் ஆறுதல் கூறினான்அரங்கநாதரும் காவிரிக்கரையிலேயே தங்கியிருக்க விருப்பம் தெரிவித்தார்விபீஷணனுக்காகதான் "தென்திசை இலங்கை நோக்கிபள்ளிகொண்டருள்வதாக உறுதியளித்தார்பின்னர் தர்மவர்ம சோழன் அவ்விமானத்தைச் சுற்றி கோயில் எழுப்பி வழிபாடு செய்தான்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

குடதிசைமுடியைவைத்துக் குணதிசைபாதம் நீட்டி
வட திசைபின்பு காட்டித் தென்திசையிலங்கை நோக்கி
கடல்நிறக் கடவுளெந்தை அரவணைத்துயிலிமாகண்டு
உடலொனக்குருகுமாலோ என்செய்கேனுலகத்தீரே.

ஸ்ரீ தொண்டரடிப் பொடி ஆழ்வார் முதலாயிரம் திருமாலை 19 வது பாட்டு.

தர்மவர்ம சோழன் கட்டிய திருவரங்கம் கோயில் காவிரியின் வெள்ளப் பெருக்கினால் மண்ணில் புதையுண்டு மறைந்ததுபின்னர் கிளிச் சோழன் ஒரு கிளியின் உதவியுடன் ("வைகுந்தத்திலுள்ள விஷ்ணுவின் கோயில் இருந்த இடம் இதுதான்அக்கோயிலை இப்போதும் இங்கு காணலாம்என்று ஒரு செய்யுளை திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்ததுமற்றும் அவனுக்கு வந்த கனவின் மூலமாக விமானம் இருந்த இடத்தைக் கண்டுபிடித்தான்விமானத்தின் கருவறையைச் சுற்றிக் கோயில் எழுப்பினான்.

 

 

 

 

 

இலக்கியங்களில் திருவரங்கம் கோயில்:

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

சங்கம் மறுவிய காலத்தில்மதுரகவி ஆழ்வார் நீங்கலாக அனைத்து ஆழ்வார்களும் (கிபி 5ம் நூற்றாண்டிலிருந்து 9ம் நூற்றாண்டு வரைதிருவரங்கத்தானை பற்றி பாடியுள்ளனர்நாலாயிய திவ்விய பிரபந்தத்தில், 247 பாசுரங்கள் திருவரங்கத்தான் மேல்தான்.

·         பெரியாழ்வார் 35

·         நம்மாழ்வார் 12

·         ஆண்டாள் 10

·         பேயாழ்வார் 2

 

 

 

 

 

விழாக்கள்:

 

 

 

1001 கலச அபிஷேகம், மார்கழி மாதத்தின் வளர்பிறை ஏகாதேசியானது 'வைகுண்ட ஏகாதேசிஎன்று அழைக்கப்படுகிறதுஇந்த விழா திருவரங்கத்தில் 21 நாட்கள் கொண்டாப்படுகின்றன.

 

 

 

 

 

 

 

 

இத்தலத்தில் மூன்று பிரமோற்சவங்கள் நடைபெறுகின்றனஆதி பிரம்மோட்சவம்பூபதி திருநாள் என்று இந்த பிரமோட்சவங்கள் அழைக்கப்படுகின்றன.

 

 

 

 

ராமானுஜச்சார்யா:

 

 

 

 

 

 

 

 

 

 

 

1017 ஆம் ஆண்டுராமனுஜாபெரும்புதூரில்மெட்ராஸ் நகரிலிருந்து சுமார் 25 மைல் தொலைவில் பிறந்தார். அவரது தந்தை கேசவ சோமயாஜி மற்றும் அவரது தாயார் கந்தமிதிமிகவும் பக்தியுள்ள மற்றும் நல்லொழுக்க பெண். ராமனுஜாவின் தமிழ் பெயர் ஐயாயா பெருமாள். வாழ்க்கையில் மிகவும் ஆரம்பத்தில்ராமானுஜா தனது தந்தையை இழந்தார்.
அத்வைத தத்துவத்தின் ஆசிரியரான யாத்ரபிராகாசின் கீழ் வேதங்களைப் படிப்பதற்காக அவர் காஞ்சிபுரத்திற்கு வந்தார்.

ராமனுஜா திருவிளையாட்டில் கோவிந்தராஜ விக்கிரகத்தை மீண்டும் நிறுவியிருந்தார்ஆரம்பத்தில் சைவத்தைச் சேர்ந்த குலோத்ருங்க சோழரால் கடலில் தள்ளப்பட்டது.

ஸ்ரீரங்கத்தில் உள்ள இறைவன் ரங்கநாத ஆலயத்தில் அவரது ஆச்சார்யன் திருவாடி (அவரது ஆச்சார்யாவின் தாமரைக் கால்அடைந்தார்அதன்பிறகுராமானுஜச்சாரிய அசல் சடலம் அங்கு அமைக்கப்பட்டது.

 

 

 

 

 

900 ஆண்டுகள் பழமையான ராமானுஜச்சார்யா அசலான உடல்:

 

 

 

 

வைணவ தத்துவஞானி மற்றும் குரு ராமநஜாச்சார்யா அசல் உடல்ஸ்ரீரங்கநாதஸ்வாமி கோவில்ஸ்ரீரங்கம்திருச்சினர்பள்ளி ஆகிய இடங்களில் பாதுகாக்கப்படுகிறது.
ஸ்ரீ ராமநாதசரியா இந்து வைத்தியசாலையில் உள்ள ஸ்ரீ வைஷ்ணவிய பாரம்பரியத்தின் ஒரு குறியீடாக இருந்தார்.
ராமனுஜாவின் திருவாரசுவு ( புனித கல்லறை கோவில் ) ஸ்ரீ ரங்கநாதஸ்வாமி கோவிலின் உள்ளே அமைந்துள்ள ராமானுஜ கோவில் (சன்னிதிஆகும்.
சணல் பசை மற்றும் குங்குமப்பூவை உடல் பராமரிக்க பயன்படுகிறது மற்றும் வேறு எந்த இரசாயனங்கள் சேர்க்கப்படவில்லை.
குங்குமப்பூ கலந்த கலவை ஒரு வருடத்திற்கு இரண்டு முறைபாதுகாக்கப்பட்ட உடலில் ஓச்சர் ஆரஞ்சு நிறத்தை உருவாக்குகிறதுஇந்த பாரம்பரியம் 878 வருடங்களுக்கும் மேலாக நடைமுறையில் உள்ளது.
அவரது உடல் அவரது சிலைக்கு பின் வைக்கப்பட்டுபக்தர்களுக்கு தரிசனம் செய்யப்படுகிறது.

 

 

 

 

 

 

  

 

 

 

விரல்களில் நகங்களைக் கவனிக்க முடியும்இது உண்மையில் மனித உடல் என்பதைக் குறிக்கிறது.
ஸ்ரீரங்கம் கோவிலில் உள்ள ஐந்தாவது சுற்றில் தென்மேற்கு மூலையில் அவரது உடல் அமைந்துள்ளது.

ஸ்ரீரங்கத்தில், ' பூலோக வைகுந்தம் ' (புவியின் மீது பரலோகம்என புகழ்பெற்ற ஸ்ரீராங்கத்தில் தங்கள் புனிதமான இடம் ஸ்ரீ ராமானுஜரின் உடலையும் அதன் அதிசயமான அரசியலையும் பாதுகாக்கவில்லைஎந்த வேலையையும் அல்லது விளம்பரத்தையும் இல்லாமல்எகிப்திய மற்றும் கோன் மம்மிக்கு பயன்படுத்திக்கொள்ளும் கவசங்கள்.
எகிப்திய மம்மிகள் தூக்க நிலையில் வைக்கப்பட்டுபல அடுக்கு இரசாயனப் பொருள்களைப் பயன்படுத்தி துணியால் மூடப்பட்டிருக்கின்றன.
ஆனால் ராமானுஜச்சாரிய அசல் உடல் சாதாரண உட்கார்ந்த நிலையில் வைக்கப்பட்டு எல்லாவற்றிற்கும் திறந்திருக்கும்.
ஒரு உண்மையான மனித உடல் பல ஆண்டுகளாக ஒரு ஹிந்து கோவில் உள்ளே வைத்து ஒரே ஒரு உதாரணம் இது.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

இப்படிப்பட்ட திருத்தலத்தில் நாம் என்ன செய்ய வேண்டும் எப்படி பலன்களை பெற வேண்டும் எந்த நாள் எந்த நேரம் பதில் இதோ 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

வருகின்ற மார்கழி கடைசி வெள்ளிக்கிழமையில் வரும் ஏகாதேசியில்  (12.01.18) ஸ்ரீரங்கம் சென்று காலை 6 மணி முதல் 7 மணிக்குள் பெருமாள்  சன்னதிக்குள் இருக்க வேண்டும் .பின்பு பெருமாளுக்கு அர்ச்சனை செய்ய இதுவரை நமக்கு இருந்த நேர்முக  மற்றும்  மறைமுக எதிரிகளின் தொல்லைகளை குறைத்து நம்  பொருளாதார நெருக்கடியை தணித்து,  அந்த எல்லாம்வல்ல  பரந்தாமன் நம்  நிழலாகவே நம்மோடு இருந்த  நம்மை காத்து அருள்புரியர் என்பதில் எள்ளளவு  ஐயம்  வேண்டாம்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

பின்பு  ராமானுஜர் சன்னதிக்கு  சென்று அர்ச்சனை செய்து உங்களின் கோரிக்கைளை மனதில் நினைத்து 15 நிமிடங்கள் தியானம் செய்ய வேண்டும் . இப்படி செய்தால் உங்கள் பிரச்னைகள் தீரும் ,ஸ்ரீ மஹா லட்சுமி அருள் கிடைக்கும் செல்வம் பெருகும் மற்றும் ராமானுஜர் வழிகாட்டுதல் கிடைக்கும் . ராமானுஜர் சன்னிதிக்கு செல்லும் பொது நெய் மற்றும் துளசி மாலை  வாங்கி கொடுக்க வேண்டும்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

கோசாலை சென்று பசுவிற்கு வேண்டிய தருதல் நன்று ( கோவில் நிர்வாகத்திடம் அனுமதி பெற்று ) அல்லது யானைக்கு கரும்புகளை கொடுக்கவும்( கோவில் நிர்வாகத்திடம் அனுமதி பெற்று ) மேலும் நமது பிரதான கொள்கை என்று அய்யா சகஸ்ரவடுகர் அவர்கள் கூறும்,

அன்னதானம் செய்ய வேண்டும் ( தங்கள் தகுதிக்கு ஏற்றார் போல் )

இதை முடித்த பின்பு அவரவர் இல்லத்திற்கு செல்வது சாலச்சிறந்தது.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

அவ்வாறு ஸ்ரீரங்கம் செல்ல முடியாதவர்கள் பெருமாளின் 108 திவ்ய தேசங்களிலுள்ள ஏதாவது ஒரு பெருமாள் கோவிலுக்கு .சொல்லலாம் .அதுவும் செல்ல முடியாதவர்கள் அவர்களின் இல்லத்தில் அருகிலுள்ள  பழமையான பெருமாள் கோவிலுக்கு செல்லலாம்.

 

இப்படி செய்தால் உங்களது  நேர்மையான கோரிக்கைகள் உட்பட நமக்கு அன்றாட வாழ்வியல் தேவைகளை பூர்த்தி செய்யஆழ் மன சக்தியினை தட்டி எழுப்பகாரியங்கள் அனைத்திலும் வெற்றியினை எய்ததிருமண தடை நீங்கி சுபிக்சமாக  வாழஉடல் - மன தூய்மை பெறபெண்களுக்கு தைரியம் - அழகு - கட்டுப்பாடு - நற்பண்பு பெருகபொருளாதார நெருக்கடி நீங்கஉண்மையின் பெருமைதனை அடையலாம்

 

இதை ஒவ்வொரு ஆண்டும் கடைபிடிப்பது உத்தமம். 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

இத்தகைய அறிய ரகசிய கருத்தை ஆராயிந்து நமக்கு அளித்து,  நம் இன்னல் நீங்க வழிகாட்டும் ஆசான் அய்யா சகஸ்ரவடுகர் அவர்களுக்கு ஆன்மீக கடல், ஆன்மீகஅரசு சார்பாகவும் எங்களது அன்பர்கள் சார்பாகவும் எங்கள் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

 

 

 

 

 

 

ஓம்   சிவசிவ   ஓம்!

 

ஓம்   சிவசிவ   ஓம்!!

 

ஓம்   சிவசிவ  ஓம்!!!